Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹஷ்ர் - Page: 2

Al-Hashr

(al-Ḥašr)

௧௧

۞ اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ نَافَقُوْا يَقُوْلُوْنَ لِاِخْوَانِهِمُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ لَىِٕنْ اُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِيْعُ فِيْكُمْ اَحَدًا اَبَدًاۙ وَّاِنْ قُوْتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْۗ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ١١

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
ilā alladhīna nāfaqū
إِلَى ٱلَّذِينَ نَافَقُوا۟
நயவஞ்சகர்களை
yaqūlūna
يَقُولُونَ
கூறுகின்றனர்
li-ikh'wānihimu
لِإِخْوَٰنِهِمُ
தங்கள் சகோதரர்களுக்கு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
min ahli l-kitābi
مِنْ أَهْلِ ٱلْكِتَٰبِ
வேதக்காரர்களில்
la-in ukh'rij'tum
لَئِنْ أُخْرِجْتُمْ
நீங்கள் வெளியேற்றப்பட்டால்
lanakhrujanna
لَنَخْرُجَنَّ
நிச்சயமாக நாங்களும் வெளியேறுவோம்
maʿakum
مَعَكُمْ
உங்களுடன்
walā nuṭīʿu
وَلَا نُطِيعُ
நாங்கள் கட்டுப்பட மாட்டோம்
fīkum
فِيكُمْ
உங்கள் விஷயத்தில்
aḥadan abadan
أَحَدًا أَبَدًا
யாருக்கும்/எப்போதும்
wa-in qūtil'tum
وَإِن قُوتِلْتُمْ
நீங்கள் போர் செய்யப்பட்டால்
lananṣurannakum
لَنَنصُرَنَّكُمْ
நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவுவோம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yashhadu
يَشْهَدُ
சாட்சி சொல்கிறான்
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக இவர்கள்
lakādhibūna
لَكَٰذِبُونَ
பொய்யர்கள்தான்
(நபியே! இந்த) நயவஞ்சகர்களை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்கள், வேதத்தை உடையவர்களில் உள்ள நிராகரிக்கும் தங்கள் சகோதரர்களை நோக்கி "நீங்கள் (உங்கள் இல்லத்தை விட்டு) வெளியேற்றப்பட்டால் நாங்களும் உங்களுடன் வெளியேறிவிடுவோம். உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு விரோதமாக) நாங்கள் ஒருவருக்கும், ஒரு காலத்திலும் வழிப்பட மாட்டோம். (எவரும்) உங்களை எதிர்த்து போர் புரிந்தால், நிச்சயமாக நாம் உங்களுக்கு உதவி புரிவோம்" என்றும் கூறுகின்றனர். ஆனால், நிச்சயமாக அவர்கள் பொய்யர்களென்று அல்லாஹ் சாட்சியம் கூறுகின்றான். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௧௧)
Tafseer
௧௨

لَىِٕنْ اُخْرِجُوْا لَا يَخْرُجُوْنَ مَعَهُمْۚ وَلَىِٕنْ قُوْتِلُوْا لَا يَنْصُرُوْنَهُمْۚ وَلَىِٕنْ نَّصَرُوْهُمْ لَيُوَلُّنَّ الْاَدْبَارَۙ ثُمَّ لَا يُنْصَرُوْنَ ١٢

la-in
لَئِنْ
ukh'rijū
أُخْرِجُوا۟
அவர்கள் வெளியேற்றப்பட்டால்
lā yakhrujūna
لَا يَخْرُجُونَ
இவர்கள் வெளியேற மாட்டார்கள்
maʿahum
مَعَهُمْ
அவர்களுடன்
wala-in qūtilū
وَلَئِن قُوتِلُوا۟
அவர்கள் போர் செய்யப்பட்டால்
lā yanṣurūnahum
لَا يَنصُرُونَهُمْ
இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள்
wala-in naṣarūhum
وَلَئِن نَّصَرُوهُمْ
இவர்கள் அவர்களுக்கு உதவினாலும்
layuwallunna l-adbāra
لَيُوَلُّنَّ ٱلْأَدْبَٰرَ
இவர்களும் கண்டிப்பாக புறமுதுகுதான் காட்டுவார்கள்
thumma lā yunṣarūna
ثُمَّ لَا يُنصَرُونَ
பிறகு/இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
ஏனென்றால், அவர்கள் (தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். அவர்களை எதிர்த்து (எவரும்) போர் புரிந்தால், அவர்களுக்கு உதவி புரிய முன்வரவும் மாட்டார்கள். முன்வந்த போதிலும், நிச்சயமாக புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் (எவராலுமே) அவர்கள் எத்தகைய உதவியும் பெற மாட்டார்கள். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௧௨)
Tafseer
௧௩

لَاَنْتُمْ اَشَدُّ رَهْبَةً فِيْ صُدُوْرِهِمْ مِّنَ اللّٰهِ ۗذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَفْقَهُوْنَ ١٣

la-antum
لَأَنتُمْ
நீங்கள்
ashaddu rahbatan
أَشَدُّ رَهْبَةً
கடுமையான பயதிற்குரியவர்கள்
fī ṣudūrihim
فِى صُدُورِهِم
அவர்களின் நெஞ்சங்களில்
mina l-lahi
مِّنَ ٱللَّهِۚ
அல்லாஹ்வை விட
dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
qawmun
قَوْمٌ
மக்கள்
lā yafqahūna
لَّا يَفْقَهُونَ
புரிய மாட்டார்கள்
அவர்களுடைய உள்ளங்களில் உங்களைப் பற்றிய பயம் அல்லாஹ்வை(ப் பற்றிய பயத்தை)விட அதிகமாகவே இருக்கின்றது! மெய்யாகவே அவர்கள் அறிவில்லா மக்கள் என்பதுதான் இதற்குக் காரணமாகும். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௧௩)
Tafseer
௧௪

لَا يُقَاتِلُوْنَكُمْ جَمِيْعًا اِلَّا فِيْ قُرًى مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَاۤءِ جُدُرٍۗ بَأْسُهُمْ بَيْنَهُمْ شَدِيْدٌ ۗ تَحْسَبُهُمْ جَمِيْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰىۗ ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَۚ ١٤

lā yuqātilūnakum
لَا يُقَٰتِلُونَكُمْ
உங்களிடம் போர் புரிய மாட்டார்கள்
jamīʿan
جَمِيعًا
எல்லோரும் சேர்ந்து
illā
إِلَّا
தவிர
fī quran muḥaṣṣanatin
فِى قُرًى مُّحَصَّنَةٍ
பாதுகாப்பான ஊர்களில்
aw
أَوْ
அல்லது
min warāi
مِن وَرَآءِ
பின்னால்
judurin
جُدُرٍۭۚ
சுவர்களுக்கு
basuhum
بَأْسُهُم
அவர்களின் பகைமை
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கு மத்தியில்
shadīdun
شَدِيدٌۚ
கடுமையாக
taḥsabuhum
تَحْسَبُهُمْ
நீர் அவர்களை எண்ணுகின்றீர்
jamīʿan
جَمِيعًا
ஒன்றுசேர்ந்தவர்களாக
waqulūbuhum
وَقُلُوبُهُمْ
அவர்களின் உள்ளங்களோ
shattā
شَتَّىٰۚ
பலதரப்பட்டதாக
dhālika bi-annahum
ذَٰلِكَ بِأَنَّهُمْ
அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்
qawmun lā yaʿqilūna
قَوْمٌ لَّا يَعْقِلُونَ
மக்கள்/ நிச்சயமாக அவர்கள் சிந்தித்துப் புரியமாட்டார்கள்
அவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்தபோதிலும், பலமான ஒரு கோட்டைக்குள்ளாகவோ அல்லது மதில்களுக்கப்பாலோ இல்லாமல் (நேருக்கு நேராக) உங்களுடன் போர் புரியமாட்டார்கள். அவர்களுக்குள்ளாகவே பெரும் (பகைமையும்) சண்டைகளும் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டிருப்பதாக நீங்கள் எண்ணுகின்றீர்கள். (அன்று!) அவர்களுடைய உள்ளங்கள் சிதறிக்கிடக்கின்றன. மெய்யாகவே அவர்கள் (எதனையும்) அறிந்துகொள்ளும் சக்தியற்ற மக்கள் என்பதுதான் இதற்குரிய காரணமாகும். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௧௪)
Tafseer
௧௫

كَمَثَلِ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ قَرِيْبًا ذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْۚ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌۚ ١٥

kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப் போன்றுதான்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னர்
qarīban
قَرِيبًاۖ
சற்று
dhāqū
ذَاقُوا۟
அனுபவித்தார்களே
wabāla
وَبَالَ
கெடுதியை
amrihim
أَمْرِهِمْ
தங்கள் காரியத்தின்
walahum
وَلَهُمْ
இன்னும் இவர்களுக்கு உண்டு
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
alīmun
أَلِيمٌ
வலி தரக்கூடியது
(இவர்களுக்கு உதாரணமாவது:) இவர்களுக்குச் சிறிது காலத்திற்கு முன்னர் தங்களுடைய கெட்ட செயல்களின் பலனை (பத்ரு யுத்தத்தில்) அனுபவித்தவர்களின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. (மறுமையில்) இவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௧௫)
Tafseer
௧௬

كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْۚ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّيْ بَرِيْۤءٌ مِّنْكَ اِنِّيْٓ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ ١٦

kamathali
كَمَثَلِ
உதாரணத்தைப் போன்றுதான்
l-shayṭāni
ٱلشَّيْطَٰنِ
அந்த ஷைத்தானின்
idh qāla
إِذْ قَالَ
அவன் கூறியபோது
lil'insāni
لِلْإِنسَٰنِ
மனிதனுக்கு
uk'fur
ٱكْفُرْ
நீ நிராகரித்து விடு
falammā kafara
فَلَمَّا كَفَرَ
அந்த மனிதன் நிராகரித்துவிடவே
qāla
قَالَ
கூறிவிடுகிறான்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
barīon
بَرِىٓءٌ
நீங்கியவன்
minka
مِّنكَ
உன்னை விட்டு
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
rabba
رَبَّ
இறைவனாகிய
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
(இன்னும், இவர்களுடைய உதாரணம்:) ஒரு ஷைத்தானுடைய உதாரணத்தையும் ஒத்திருக்கின்றது. அவன் மனிதனை நோக்கி "நீ (அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்) நிராகரித்துவிடு" என்று கூறுகின்றான். அவ்வாறே அவனும் நிராகரித்துவிட்டான். (பின்னர், ஷைத்தான் அவனை நோக்கி) "நிச்சயமாக நான் உன்னைவிட்டு விலகிவிட்டேன். ஏனென்றால், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மெய்யாகவே நான் பயப்படு கின்றேன்" என்று கூறுவான். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௧௬)
Tafseer
௧௭

فَكَانَ عَاقِبَتَهُمَآ اَنَّهُمَا فِى النَّارِ خَالِدَيْنِ فِيْهَاۗ وَذٰلِكَ جَزٰۤؤُا الظّٰلِمِيْنَ ࣖ ١٧

fakāna
فَكَانَ
ஆகிவிடும்
ʿāqibatahumā
عَٰقِبَتَهُمَآ
அவ்விருவரின் முடிவு
annahumā
أَنَّهُمَا
அவ்விருவரும்
fī l-nāri
فِى ٱلنَّارِ
நரகத்தில்
khālidayni
خَٰلِدَيْنِ
நிரந்தரமாக தங்குவார்கள்
fīhā wadhālika
فِيهَاۚ وَذَٰلِكَ
அதில்/இதுதான்
jazāu
جَزَٰٓؤُا۟
கூலியாகும்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களின்
நிச்சயமாக அவ்விருவரும் நரகம்தான் செல்வார்கள் என்று முடிவாகிவிட்டது. அதில்தான் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். இத்தகைய அநியாயக்காரர்களின் கூலி இதுவேயாகும். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௧௭)
Tafseer
௧௮

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍۚ وَاتَّقُوا اللّٰهَ ۗاِنَّ اللّٰهَ خَبِيْرٌ ۢبِمَا تَعْمَلُوْنَ ١٨

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களே!
ittaqū
ٱتَّقُوا۟
அஞ்சிக்கொள்ளுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
waltanẓur
وَلْتَنظُرْ
பார்த்துக் கொள்ளட்டும்
nafsun mā qaddamat
نَفْسٌ مَّا قَدَّمَتْ
ஓர் ஆன்மா/எதை அது முற்படுத்தி இருக்கிறது
lighadin
لِغَدٍۖ
மறுமைக்காக
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
l-laha
ٱللَّهَۚ
அல்லாஹ்வை
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
khabīrun
خَبِيرٌۢ
ஆழ்ந்தறிபவன்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை) நாளுக்காக, தான் எதனைத் தயார்படுத்தி வைக்கின்றான் என்பதைக் கவனித்து அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளவும். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௧௮)
Tafseer
௧௯

وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ نَسُوا اللّٰهَ فَاَنْسٰىهُمْ اَنْفُسَهُمْۗ اُولٰۤىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ١٩

walā takūnū
وَلَا تَكُونُوا۟
ஆகிவிடாதீர்கள்
ka-alladhīna nasū
كَٱلَّذِينَ نَسُوا۟
மறந்தவர்களைப் போல்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
fa-ansāhum anfusahum
فَأَنسَىٰهُمْ أَنفُسَهُمْۚ
அவன் அவர்களுக்கு மறக்கச் செய்து விட்டான்/அவர்களையே
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-fāsiqūna
ٱلْفَٰسِقُونَ
பாவிகள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை (நிராகரித்து அவனை முற்றிலும்) மறந்துவிட்டவர்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம். ஏனென்றால், (அதன் காரணமாக) அவர்கள் தம்மையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்துவிட்டான். இத்தகையவர்கள் பெரும்பாவிகள்தாம். ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௧௯)
Tafseer
௨௦

لَا يَسْتَوِيْٓ اَصْحٰبُ النَّارِ وَاَصْحٰبُ الْجَنَّةِۗ اَصْحٰبُ الْجَنَّةِ هُمُ الْفَاۤىِٕزُوْنَ ٢٠

lā yastawī
لَا يَسْتَوِىٓ
சமமாக மாட்டார்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِ
நரகவாசிகளும்
wa-aṣḥābu l-janati
وَأَصْحَٰبُ ٱلْجَنَّةِۚ
சொர்க்க வாசிகளும்
aṣḥābu l-janati humu
أَصْحَٰبُ ٱلْجَنَّةِ هُمُ
சொர்க்கவாசிகள்தான்
l-fāizūna
ٱلْفَآئِزُونَ
வெற்றியாளர்கள்
நரகவாசிகளும் சுவனவாசிகளும் சமமாக மாட்டார்கள். (ஏனென்றால்) சுவனவாசிகள் பெரும் பாக்கியமுடையவர்கள். (நரகவாசிகள் துர்ப்பாக்கியமுடையவர்கள்.) ([௫௯] ஸூரத்துல் ஹஷ்ர்: ௨௦)
Tafseer