Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௯

Qur'an Surah Al-Mujadila Verse 9

ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا تَنَاجَيْتُمْ فَلَا تَتَنَاجَوْا بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُوْلِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوٰىۗ وَاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اِلَيْهِ تُحْشَرُوْنَ (المجادلة : ٥٨)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
O you who believe! O you who believe! O you who believe!
நம்பிக்கையாளர்களே!
idhā tanājaytum
إِذَا تَنَٰجَيْتُمْ
When you hold secret counsel
நீங்கள் கூடிப்பேசினால்
falā tatanājaw
فَلَا تَتَنَٰجَوْا۟
then (do) not hold secret counsel
கூடிப்பேசாதீர்கள்
bil-ith'mi
بِٱلْإِثْمِ
for sin
பாவமானதையும்
wal-ʿud'wāni
وَٱلْعُدْوَٰنِ
and aggression
வரம்புமீறும் காரியத்தையும்
wamaʿṣiyati
وَمَعْصِيَتِ
and disobedience
மாறுசெய்வதையும்
l-rasūli
ٱلرَّسُولِ
(to) the Messenger
தூதருக்கு
watanājaw
وَتَنَٰجَوْا۟
but hold secret counsel
கூடிப்பேசுங்கள்!
bil-biri
بِٱلْبِرِّ
for righteousness
நன்மையான விஷயத்தையும்
wal-taqwā
وَٱلتَّقْوَىٰۖ
and piety
இறையச்சம் மிகுந்த விஷயத்தையும்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
அஞ்சிக் கொள்ளுங்கள்!
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
alladhī ilayhi
ٱلَّذِىٓ إِلَيْهِ
the One Who to Him
எவன்/அவனிடம்தான்
tuḥ'sharūna
تُحْشَرُونَ
you will be gathered
நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்

Transliteration:

Yaaa ayyuhal lazeena aamanoo izaa tanaajaytum falaa tatanaajaw bil ismi wal 'udwaani wa ma'siyatir rasooli wa tanaajaw bil birri wattaqwaa wattaqul laahal lazeee ilaihi tuhsharoon (QS. al-Mujādilah:9)

English Sahih International:

O you who have believed, when you converse privately, do not converse about sin and aggression and disobedience to the Messenger but converse about righteousness and piety. And fear Allah, to whom you will be gathered. (QS. Al-Mujadila, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் நீங்கள் ரகசியம் பேசினால் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், (நம்முடைய) தூதருக்கு மாறு செய்வதற்காகவும், ரகசியம் பேசாதீர்கள். ஆயினும், நன்மை செய்வதற்காகவும் பரிசுத்தத் தன்மைக்காகவும் இரகசியம் பேசலாம். (அனைத்தையும் அறிந்த) அல்லாஹ்வின் சமூகத்திற்கு நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்துகொள்ளுங்கள். (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௯)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூடிப்பேசினால் பாவமானதையும் வரம்பு மீறும் காரியத்தையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப்பேசாதீர்கள். நன்மையான விஷயத்தையும் இறையச்சம் மிகுந்த விஷயத்தையும் கூடிப் பேசுங்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனிடம்தான் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.