குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௭
Qur'an Surah Al-Mujadila Verse 7
ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَآ اَدْنٰى مِنْ ذٰلِكَ وَلَآ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْاۚ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا يَوْمَ الْقِيٰمَةِۗ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ (المجادلة : ٥٨)
- alam tara
- أَلَمْ تَرَ
- Do not you see
- நீர் பார்க்கவில்லையா?
- anna
- أَنَّ
- that
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- yaʿlamu
- يَعْلَمُ
- knows
- நன்கறிவான்
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- whatever (is) in the heavens
- வானங்களில் உள்ளவற்றை(யும்)
- wamā fī l-arḍi
- وَمَا فِى ٱلْأَرْضِۖ
- and whatever (is) in the earth?
- பூமியில் உள்ளவற்றையும்
- mā yakūnu
- مَا يَكُونُ
- Not there is
- இருக்காது
- min najwā
- مِن نَّجْوَىٰ
- any secret counsel
- உரையாடல்
- thalāthatin
- ثَلَٰثَةٍ
- (of) three
- மூன்று நபர்களின்
- illā huwa
- إِلَّا هُوَ
- but He (is)
- தவிர/அவன்
- rābiʿuhum
- رَابِعُهُمْ
- (the) fourth of them
- அவர்களில் நான்காமவனாக
- walā khamsatin
- وَلَا خَمْسَةٍ
- and not five
- இருக்காது/ஐந்து நபர்களின்
- illā huwa
- إِلَّا هُوَ
- but He (is)
- தவிர/அவன்
- sādisuhum
- سَادِسُهُمْ
- (the) sixth of them
- அவர்களில் ஆறாவதாக
- walā adnā
- وَلَآ أَدْنَىٰ
- and not less
- இன்னும் இருக்காது/குறைவாக
- min dhālika
- مِن ذَٰلِكَ
- than that
- அதை விட
- walā akthara
- وَلَآ أَكْثَرَ
- and not more
- இன்னும் அதிகமாக இருக்காது
- illā huwa
- إِلَّا هُوَ
- but He
- தவிர/அவன்
- maʿahum
- مَعَهُمْ
- (is) with them
- அவர்களுடன்
- ayna mā kānū
- أَيْنَ مَا كَانُوا۟ۖ
- wherever wherever they are
- அவர்கள் எங்கிருந்தாலும் சரியே
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- yunabbi-uhum
- يُنَبِّئُهُم
- He will inform them
- அவர்களுக்கு அறிவிப்பான்
- bimā ʿamilū
- بِمَا عَمِلُوا۟
- of what they did
- அவர்கள் செய்தவற்றை
- yawma l-qiyāmati
- يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
- (on the) Day (of) the Resurrection
- மறுமை நாளில்
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- of every thing
- எல்லாவற்றையும்
- ʿalīmun
- عَلِيمٌ
- (is) All-Knower
- நன்கறிந்தவன்
Transliteration:
Alam tara annal laaha ya'lamu maa fis samaawaati wa maa fil ardi maa yakoonu min najwaa salaasatin illaa Huwa raabi'uhum wa laa khamsatin illaa huwa saadisuhum wa laaa adnaa min zaalika wa laaa aksara illaa huwa ma'ahum ayna, maa kaanoo summa yunabbi'uhum bimaa 'amiloo yawmal qiyaamah; innal laaha bikulli shai'in aleem(QS. al-Mujādilah:7)
English Sahih International:
Have you not considered that Allah knows what is in the heavens and what is on the earth? There are not three in a private conversation but that He is the fourth of them, nor are there five but that He is the sixth of them – and no less than that and no more except that He is with them [in knowledge] wherever they are. Then He will inform them of what they did, on the Day of Resurrection. Indeed Allah is, of all things, Knowing. (QS. Al-Mujadila, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) வானங்களிலும், பூமியிலுமுள்ளவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகின்றான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்களில் மூன்று பேர்கள் (கூடிப் பேசும்) ரகசியத்தில் அவன் நான்காவதாக இல்லாமல் இல்லை. ஐந்து பேர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்தில் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை. இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளவர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்திலும், அவன் அவர்களுடன் இல்லாமல் இல்லை. இவ்வாறு அவர்கள் எங்கிருந்த போதிலும் (ரகசியம் பேசினால் அவன் அவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்கின்றான்.) பின்னர், அவர்கள் செய்தவைகளைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் அறிவித்து (அதற்குரிய கூலியைக் கொடுக்கின்றான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௭)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை; இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை; இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் நன்கறிவான். மூன்று நபர்களின் உரையாடல் இருக்காது அவன் அவர்களில் நான்காமவனாக இருந்தே தவிர. ஐந்து நபர்களின் உரையாடல் இருக்காது அவன் அவர்களில் ஆறாவதாக இருந்தே தவிர. அதை விட குறைவாக, அதிகமாக எதுவும் இருக்காது அவன் அவர்களுடன் இருந்தே தவிர அவர்கள் எங்கிருந்தாலும் சரியே. பிறகு, அவன் அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றை மறுமை நாளில் அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.