குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௬
Qur'an Surah Al-Mujadila Verse 6
ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْاۗ اَحْصٰىهُ اللّٰهُ وَنَسُوْهُۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ ࣖ (المجادلة : ٥٨)
- yawma
- يَوْمَ
- (On the) Day
- நாளில்
- yabʿathuhumu
- يَبْعَثُهُمُ
- (when) Allah will raise them
- எழுப்புவான்/ அவர்களை
- l-lahu
- ٱللَّهُ
- (when) Allah will raise them
- அல்லாஹ்
- jamīʿan
- جَمِيعًا
- all
- அனைவரையும்
- fayunabbi-uhum
- فَيُنَبِّئُهُم
- and inform them
- அவர்களுக்கு அறிவிப்பான்
- bimā ʿamilū
- بِمَا عَمِلُوٓا۟ۚ
- of what they did
- அவர்கள் செய்தவற்றை
- aḥṣāhu l-lahu
- أَحْصَىٰهُ ٱللَّهُ
- Allah has recorded it Allah has recorded it
- அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான்/அல்லாஹ்
- wanasūhu
- وَنَسُوهُۚ
- while they forgot it
- அவற்றை மறந்துவிட்டார்கள்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- (is) over all things
- எல்லாவற்றையும்
- shahīdun
- شَهِيدٌ
- a Witness
- கண்காணிப்பவன்
Transliteration:
Yawma yab'asuhumul laahu jamee'an fayunabbi'uhum bimaa 'amiloo; ahsaahul laahu wa nasooh; wallaahu 'alaa kulli shai'in shaheed(QS. al-Mujādilah:6)
English Sahih International:
On the Day when Allah will resurrect them all and inform them of what they did. Allah had enumerated it, while they forgot it; and Allah is, over all things, Witness. (QS. Al-Mujadila, Ayah ௬)
Abdul Hameed Baqavi:
அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவைகளைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். அதனை அவர்கள் மறந்துவிட்டபோதிலும், அவைகளை அல்லாஹ் சேகரித்து வைக்கின்றான். (அவர்கள் செய்யும்) அனைத்தையும் அல்லாஹ் தெரிந்தவனாகவே இருக்கின்றான். (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௬)
Jan Trust Foundation
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற நாளில் அவர்கள் செய்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். அல்லாஹ் அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்கள் அவற்றை மறந்துவிட்டார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவன் (அவற்றுக்கு சாட்சியாளன்) ஆவான்.