Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௩

Qur'an Surah Al-Mujadila Verse 3

ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْ نِّسَاۤىِٕهِمْ ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ يَّتَمَاۤسَّاۗ ذٰلِكُمْ تُوْعَظُوْنَ بِهٖۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ (المجادلة : ٥٨)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
yuẓāhirūna
يُظَٰهِرُونَ
pronounce zihar
ளிஹார்செய்கிறார்கள்
min nisāihim
مِن نِّسَآئِهِمْ
[from] (to) their wives
தங்கள் பெண்களிடம்
thumma
ثُمَّ
then
பிறகு
yaʿūdūna
يَعُودُونَ
go back
மீளுகின்றார்களோ
limā qālū
لِمَا قَالُوا۟
on what they said
தாங்கள் கூறியதற்கு
fataḥrīru
فَتَحْرِيرُ
then freeing
உரிமையிடவேண்டும்
raqabatin
رَقَبَةٍ
(of) a slave
ஓர் அடிமையை
min qabli
مِّن قَبْلِ
before before
முன்னர்
an yatamāssā
أَن يَتَمَآسَّاۚ
[that] they touch each other
அவர்கள் இருவரும் இணைவதற்கு
dhālikum
ذَٰلِكُمْ
That
இதுதான்
tūʿaẓūna
تُوعَظُونَ
you are admonished
உபதேசிக் கப்படுகிறீர்கள்
bihi wal-lahu
بِهِۦۚ وَٱللَّهُ
to it And Allah
இதற்கு/அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
of what you do
நீங்கள் செய்பவற்றை
khabīrun
خَبِيرٌ
(is) All-Aware
ஆழ்ந்தறிபவன்

Transliteration:

Wallazeena yuzaahiroona min nisaaa'ihim summa ya'oodoona limaa qaaloo fatabreeru raqabatim min qabli any-yatamaaassaa; zaalikum too'azoona bih; wallaahu bimaa ta'maloona khabeer (QS. al-Mujādilah:3)

English Sahih International:

And those who pronounce thihar from their wives and then [wish to] go back on what they said – then [there must be] the freeing of a slave before they touch one another. That is what you are admonished thereby; and Allah is Aware of what you do. (QS. Al-Mujadila, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

ஆகவே, எவரேனும் தங்கள் மனைவிகளை(த் தன்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப (சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதனை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௩)

Jan Trust Foundation

மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எவர் தங்கள் பெண்களிடம் ளிஹார் செய்து, பிறகு தாங்கள் கூறியதற்கு (-தங்கள் தவறை திருத்திக்கொள்ள) மீளுகின்றார்களோ அவர்கள் (கணவன் மனைவி) இருவரும் இணைவதற்கு முன்னர் ஓர் அடிமையை உரிமையிட வேண்டும். இதுதான், நீங்கள் இதற்கு (-இதை செய்வதற்கு) உபதேசிக்கப்படுகிறீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.