குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௧௭
Qur'an Surah Al-Mujadila Verse 17
ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَنْ تُغْنِيَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَآ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْـًٔاۗ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِۗ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ (المجادلة : ٥٨)
- lan tugh'niya
- لَّن تُغْنِىَ
- Never will avail
- அறவே தடுக்க மாட்டார்கள்
- ʿanhum
- عَنْهُمْ
- them
- அவர்களை விட்டும்
- amwāluhum
- أَمْوَٰلُهُمْ
- their wealth
- அவர்களின் செல்வங்களோ
- walā awlāduhum
- وَلَآ أَوْلَٰدُهُم
- and not their children
- அவர்களின் பிள்ளைகளோ
- mina l-lahi
- مِّنَ ٱللَّهِ
- against Allah
- அல்லாஹ்விடம்
- shayan
- شَيْـًٔاۚ
- (in) anything
- எதையும்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- அவர்கள்
- aṣḥābu l-nāri
- أَصْحَٰبُ ٱلنَّارِۖ
- (will be) companions (of) the Fire
- நரகவாசிகள்
- hum fīhā
- هُمْ فِيهَا
- they in it
- அவர்கள்/அதில்
- khālidūna
- خَٰلِدُونَ
- will abide forever
- நிரந்தரமாக
Transliteration:
Lan tughniya 'anhum amwaaluhum wa laaa awladuhum minal laahi shai'aa; ulaaa 'ika As haabun Naari hum feehaa khaalidoon(QS. al-Mujādilah:17)
English Sahih International:
Never will their wealth or their children avail them against Allah at all. Those are the companions of the Fire; they will abide therein eternally (QS. Al-Mujadila, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
இவர்களுடைய பொருள்களும், இவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து யாதொன்றையும் இவர்களை விட்டும் தடுத்துவிடாது. இவர்கள் நரகவாசிகள்தாம்; அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௧௭)
Jan Trust Foundation
அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது; அவர்கள் நரகவாதிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்விடம் (அவனது வேதனையிலிருந்து) எதையும் அவர்களின் செல்வங்களோ அவர்களின் பிள்ளைகளோ அவர்களை விட்டும் அறவே தடுக்க மாட்டார்கள். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.