Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௧௪

Qur'an Surah Al-Mujadila Verse 14

ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْۗ مَا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْۙ وَيَحْلِفُوْنَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُوْنَ (المجادلة : ٥٨)

alam tara
أَلَمْ تَرَ
Do not you see
நீர் பார்க்கவில்லையா?
ilā alladhīna tawallaw
إِلَى ٱلَّذِينَ تَوَلَّوْا۟
[to] those who take as allies
நண்பர்களாக எடுத்துக் கொண்டவர்களை
qawman ghaḍiba
قَوْمًا غَضِبَ
a people wrath
மக்களை/ கோபப்பட்டானோ
l-lahu
ٱللَّهُ
(of) Allah
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِم
(is) upon them?
அவர்கள் மீது
mā hum minkum
مَّا هُم مِّنكُمْ
They (are) not They (are) not of you
அவர்கள் உங்களை சேர்ந்தவர்கள் இல்லை
walā min'hum
وَلَا مِنْهُمْ
and not of them
அவர்களை சேர்ந்தவர்களும் இல்லை
wayaḥlifūna
وَيَحْلِفُونَ
and they swear
இன்னும் சத்தியம் செய்கின்றனர்
ʿalā l-kadhibi
عَلَى ٱلْكَذِبِ
to the lie
பொய்யான விஷயத்தின் மீது
wahum yaʿlamūna
وَهُمْ يَعْلَمُونَ
while they know
அவர்கள் அறிந்து கொண்டே

Transliteration:

Alam tara ilal lazeena tawallaw qawman ghadibal laahu 'alaihim maa hum minkum wa laa minhum wa yahlifoona 'alal kazibi wa hum ya'lamoon (QS. al-Mujādilah:14)

English Sahih International:

Have you not considered those who make allies of a people with whom Allah has become angry? They are neither of you nor of them, and they swear to untruth while they know [they are lying]. (QS. Al-Mujadila, Ayah ௧௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அல்லாஹ் எவர்கள் மீது கோபமானானோ, அந்த மக்களுடன் உறவாடுகிறவர்களை நீங்கள் பார்த்தீர்களா? இவர்கள் உங்களிலும் உள்ளவர்களல்ல; அவர்களிலும் உள்ளவர்களல்ல. இவர்கள் நன்கறிந்திருந்தும் (உங்களுடன் இருப்பதாக) வேண்டு மென்றே பொய்ச் சத்தியம் செய்கின்றனர். (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௧௪)

Jan Trust Foundation

எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் கோபப்பட்ட மக்களை (-யூதர்களை) நண்பர்களாக எடுத்துக் கொண்ட (நய)வ(ஞ்சக)ர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அவர்கள் (-நயவஞ்சகர்கள்) உங்களை சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் அவர்களை சேர்ந்தவர்களும் இல்லை. அவர்கள் அறிந்து கொண்டே பொய்யான விஷயத்தின் மீது சத்தியம் செய்கின்றனர்.