குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௧௨
Qur'an Surah Al-Mujadila Verse 12
ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَيْ نَجْوٰىكُمْ صَدَقَةً ۗذٰلِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُۗ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (المجادلة : ٥٨)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- O you who believe! O you who believe! O you who believe!
- நம்பிக்கையாளர்களே!
- idhā nājaytumu
- إِذَا نَٰجَيْتُمُ
- When you privately consult
- நீங்கள் கூடிப்பேசினால்
- l-rasūla
- ٱلرَّسُولَ
- the Messenger
- தூதரிடம்
- faqaddimū
- فَقَدِّمُوا۟
- then offer
- முற்படுத்துங்கள்
- bayna yaday najwākum
- بَيْنَ يَدَىْ نَجْوَىٰكُمْ
- before before your private consultation
- நீங்கள் கூடிப்பேசுவதற்கு முன்னர்
- ṣadaqatan
- صَدَقَةًۚ
- charity
- தர்மத்தை
- dhālika
- ذَٰلِكَ
- That
- அது
- khayrun lakum
- خَيْرٌ لَّكُمْ
- (is) better for you
- உங்களுக்கு மிகச் சிறந்தது(ம்)
- wa-aṭharu
- وَأَطْهَرُۚ
- and purer
- மிக பரிசுத்தமானதும்
- fa-in lam tajidū
- فَإِن لَّمْ تَجِدُوا۟
- But if not you find
- நீங்கள் வசதி பெறவில்லை என்றால்
- fa-inna
- فَإِنَّ
- then indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanooo izaa naajitumur Rasoola faqaddimoo baina yadai najwaakum sadaqah; zaalika khairul lakum wa athar; fa il lam tajidoo fa innal laaha ghafoorur Raheem(QS. al-Mujādilah:12)
English Sahih International:
O you who have believed, when you [wish to] privately consult the Messenger, present before your consultation a charity. That is better for you and purer. But if you find not [the means] – then indeed, Allah is Forgiving and Merciful. (QS. Al-Mujadila, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்முடைய தூதருடன் இரகசியம் பேச விரும்பினால், உங்கள் இரகசியத்திற்கு முன்னதாகவே (ஏழைகளுக்கு) ஏதும் தானம் செய்துவிடுங்கள். இது உங்களுக்கு நன்மையும் பரிசுத்தத் தன்மையும் ஆகும். (தானம் கொடுப்பதற்கு எதனையும்) நீங்கள் அடைந்திராவிட்டால், (அதைப்பற்றி உங்கள் மீது குற்றமில்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௧௨)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நீங்கள் தூதரிடம் கூடிப்பேசினால் நீங்கள் கூடிப் பேசுவதற்கு முன்னர் தர்மத்தை முற்படுத்துங்கள்! அது உங்களுக்கு மிகச் சிறந்ததும் மிக பரிசுத்தமானதும் ஆகும். நீங்கள் (எதையும் தர்மம் செய்ய) வசதி பெறவில்லை என்றால் (அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.