குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முஜாதலா வசனம் ௧௧
Qur'an Surah Al-Mujadila Verse 11
ஸூரத்துல் முஜாதலா [௫௮]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا قِيْلَ لَكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَكُمْۚ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ (المجادلة : ٥٨)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- O you who believe! O you who believe! O you who believe!
- நம்பிக்கையாளர்களே!
- idhā qīla
- إِذَا قِيلَ
- When it is said
- கூறப்பட்டால்
- lakum
- لَكُمْ
- to you
- உங்களுக்கு
- tafassaḥū
- تَفَسَّحُوا۟
- "Make room"
- இடம் கொடுங்கள்
- fī l-majālisi
- فِى ٱلْمَجَٰلِسِ
- in the assemblies
- சபைகளில்
- fa-if'saḥū
- فَٱفْسَحُوا۟
- then make room
- இடம் கொடுங்கள்!
- yafsaḥi
- يَفْسَحِ
- Allah will make room
- விசாலப்படுத்துவான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah will make room
- அல்லாஹ்
- lakum
- لَكُمْۖ
- for you
- உங்களுக்கு
- wa-idhā qīla
- وَإِذَا قِيلَ
- And when it is said
- கூறப்பட்டால்
- unshuzū
- ٱنشُزُوا۟
- "Rise up"
- நீங்கள் புறப்படுங்கள்
- fa-unshuzū
- فَٱنشُزُوا۟
- then rise up
- நீங்கள் புறப்படுங்கள்
- yarfaʿi
- يَرْفَعِ
- Allah will raise
- உயர்த்துவான்
- l-lahu
- ٱللَّهُ
- Allah will raise
- அல்லாஹ்
- alladhīna āmanū
- ٱلَّذِينَ ءَامَنُوا۟
- those who believe
- நம்பிக்கை கொண்டவர்களை
- minkum
- مِنكُمْ
- among you
- உங்களில்
- wa-alladhīna ūtū
- وَٱلَّذِينَ أُوتُوا۟
- and those who were given
- இன்னும் கொடுக்கப்பட்டவர்களை
- l-ʿil'ma
- ٱلْعِلْمَ
- the knowledge
- கல்வி
- darajātin
- دَرَجَٰتٍۚ
- (in) degrees
- பல அந்தஸ்துகள்
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- of what you do
- நீங்கள் செய்பவற்றை
- khabīrun
- خَبِيرٌ
- (is) All-Aware
- ஆழ்ந்தறிபவன்
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanoo izaa qeela lakum tafassahoo fil majaalisi fafsahoo yafsahil laahu lakum wa izaa qeelan shuzoo fanshuzoo yarfa'il laahul lazeena aamanoo minkum wallazeena ootul 'ilma darajaat; wallaahu bimaa ta'maloona khabeer(QS. al-Mujādilah:11)
English Sahih International:
O you who have believed, when you are told, "Space yourselves" in assemblies, then make space; Allah will make space for you. And when you are told, "Arise," then arise; Allah will raise those who have believed among you and those who were given knowledge, by degrees. And Allah is Aware of what you do. (QS. Al-Mujadila, Ayah ௧௧)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! (நீங்கள் யாதொரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கிச் "சபையில் அகன்று இடம் கொடுங்கள்" என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் அகன்று கொடுங்கள். இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கி கொடுப்பான். தவிர, (சபையில் யாதொரு காரணத்திற்காக உங்களை நோக்கி) "எழுந்து (சென்று) விடுங்கள்" என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்து (சென்று) விடுங்கள். (இவ்வாறு நடந்து கொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிவான். (ஸூரத்துல் முஜாதலா, வசனம் ௧௧)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! சபைகளில் (கொஞ்சம்) இடம் கொடுங்கள்” என்று உங்களுக்கு கூறப்பட்டால் நீங்கள் (உள்ளே நுழைந்த உங்கள் சகோதரர்களுக்காக) இடம் கொடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு (இடத்தை) விசாலப்படுத்துவான். (சபைகளில் இருந்து) நீங்கள் புறப்படுங்கள் என்று கூறப்பட்டால் நீங்கள் புறப்படுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் உயர்த்துவான். இன்னும் கல்வி கொடுக்கப்பட்டவர்களை பல அந்தஸ்துகள் அவன் உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்.