Skip to content

ஸூரா ஸூரத்துல் முஜாதலா - Word by Word

Al-Mujadila

(al-Mujādilah)

bismillaahirrahmaanirrahiim

قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِيْ تُجَادِلُكَ فِيْ زَوْجِهَا وَتَشْتَكِيْٓ اِلَى اللّٰهِ ۖوَاللّٰهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَاۗ اِنَّ اللّٰهَ سَمِيْعٌۢ بَصِيْرٌ ١

qad
قَدْ
திட்டமாக
samiʿa
سَمِعَ
செவியுற்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
qawla
قَوْلَ
பேச்சை
allatī tujādiluka
ٱلَّتِى تُجَٰدِلُكَ
உம்மிடம் விவாதிக்கின்றவளின்
fī zawjihā
فِى زَوْجِهَا
தனது கணவரின் விஷயத்தில்
watashtakī
وَتَشْتَكِىٓ
முறையிடுகிறாள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்விடம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yasmaʿu
يَسْمَعُ
செவியுறுகின்றான்
taḥāwurakumā
تَحَاوُرَكُمَآۚ
உரையாடலை உங்கள் இருவரின்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
samīʿun
سَمِيعٌۢ
நன்கு செவியுறுபவன்
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
(நபியே!) எவள் தன் கணவரைப் பற்றி உங்களிடம் தர்க்கித்து (அவரைப் பற்றி) அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ, அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாகக் கேட்டுக் கொண்டான். (அதைப்பற்றி) உங்கள் இருவரின் தர்க்க வாதத்தையும் அல்லாஹ் செவியுற்றான். நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும், (ஒவ்வொருவரின் செயலையும்) உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௧)
Tafseer

اَلَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَاۤىِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْۗ اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰۤـِٔيْ وَلَدْنَهُمْۗ وَاِنَّهُمْ لَيَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًاۗ وَاِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ ٢

alladhīna yuẓāhirūna
ٱلَّذِينَ يُظَٰهِرُونَ
எவர்கள்/ளிஹார் செய்கின்றார்களோ
minkum
مِنكُم
உங்களில்
min nisāihim
مِّن نِّسَآئِهِم
தங்கள் பெண்கள் இடம்
mā hunna
مَّا هُنَّ
அவர்கள் ஆகமுடியாது
ummahātihim
أُمَّهَٰتِهِمْۖ
அவர்களின் தாய்மார்களாக
in ummahātuhum
إِنْ أُمَّهَٰتُهُمْ
அவர்களின் தாய்மார்கள் இல்லை
illā allāī
إِلَّا ٱلَّٰٓـِٔى
தவிர/எவர்கள்
waladnahum
وَلَدْنَهُمْۚ
அவர்களை பெற்றெடுத்தார்கள்
wa-innahum
وَإِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
layaqūlūna
لَيَقُولُونَ
கூறுகின்றனர்
munkaran
مُنكَرًا
மிகத் தீயதை
mina l-qawli
مِّنَ ٱلْقَوْلِ
பேச்சில்
wazūran
وَزُورًاۚ
இன்னும் பொய்யானதை
wa-inna l-laha
وَإِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
laʿafuwwun
لَعَفُوٌّ
மிகவும் பிழை பொறுப்பவன்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
உங்களில் எவரேனும் தம் மனைவிகளில் எவளையும், தன்னுடைய தாயென்று கூறிவிடுவதனால், அவள் அவர்களுடைய (உண்மைத்) தாயாகி விடமாட்டாள். அவர்களைப் பெற்றெடுத் தவர்கள்தாம் (உண்மைத்) தாயாவார்கள். (இதற்கு மாறாக எவளையும் எவரும் தாயென்று கூறினால் கூறுகின்ற) அவர்கள் நிச்சயமாகத் தகாததும், பொய்யானதுமான ஒரு வார்த்தையையே கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் (குற்றங்களைப்) பொறுப்பவனுமாக இருக்கின்றான். (ஆகவே, இத்தகைய குற்றம் செய்தவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்பைக் கோரவும்.) ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௨)
Tafseer

وَالَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْ نِّسَاۤىِٕهِمْ ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ يَّتَمَاۤسَّاۗ ذٰلِكُمْ تُوْعَظُوْنَ بِهٖۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ٣

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
yuẓāhirūna
يُظَٰهِرُونَ
ளிஹார்செய்கிறார்கள்
min nisāihim
مِن نِّسَآئِهِمْ
தங்கள் பெண்களிடம்
thumma
ثُمَّ
பிறகு
yaʿūdūna
يَعُودُونَ
மீளுகின்றார்களோ
limā qālū
لِمَا قَالُوا۟
தாங்கள் கூறியதற்கு
fataḥrīru
فَتَحْرِيرُ
உரிமையிடவேண்டும்
raqabatin
رَقَبَةٍ
ஓர் அடிமையை
min qabli
مِّن قَبْلِ
முன்னர்
an yatamāssā
أَن يَتَمَآسَّاۚ
அவர்கள் இருவரும் இணைவதற்கு
dhālikum
ذَٰلِكُمْ
இதுதான்
tūʿaẓūna
تُوعَظُونَ
உபதேசிக் கப்படுகிறீர்கள்
bihi wal-lahu
بِهِۦۚ وَٱللَّهُ
இதற்கு/அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
ஆகவே, எவரேனும் தங்கள் மனைவிகளை(த் தன்) தாய்க்கு ஒப்பிட்டுக் கூறிய பின்னர், அவர்களிடம் திரும்ப (சேர்ந்துகொள்ள) விரும்பினால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே (இவ்வாறு ஒப்பிட்டுக் கூறிய குற்றத்திற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இதனை (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசம் செய்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிபவனாக இருக்கின்றான். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௩)
Tafseer

فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ اَنْ يَّتَمَاۤسَّاۗ فَمَنْ لَّمْ يَسْتَطِعْ فَاِطْعَامُ سِتِّيْنَ مِسْكِيْنًاۗ ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖۗ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ۗوَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِيْمٌ ٤

faman
فَمَن
எவர்
lam yajid
لَّمْ يَجِدْ
வசதி பெறவில்லையோ
faṣiyāmu
فَصِيَامُ
நோன்பிருக்க வேண்டும்
shahrayni
شَهْرَيْنِ
இரண்டு மாதங்கள்
mutatābiʿayni
مُتَتَابِعَيْنِ
தொடர்ந்து
min qabli
مِن قَبْلِ
முன்னர்
an yatamāssā
أَن يَتَمَآسَّاۖ
இருவரும் இணைவதற்கு
faman
فَمَن
எவர்
lam yastaṭiʿ
لَّمْ يَسْتَطِعْ
சக்தி பெறவில்லையோ
fa-iṭ'ʿāmu
فَإِطْعَامُ
உணவளிக்கட்டும்
sittīna
سِتِّينَ
அறுபது
mis'kīnan
مِسْكِينًاۚ
ஏழைகளுக்கு
dhālika
ذَٰلِكَ
இது
litu'minū
لِتُؤْمِنُوا۟
ஏனெனில்/நம்பிக்கை கொள்கின்றீர்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
warasūlihi
وَرَسُولِهِۦۚ
அவனது தூதரையும்
watil'ka
وَتِلْكَ
இவை
ḥudūdu
حُدُودُ
சட்டங்களாகும்
l-lahi
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
walil'kāfirīna
وَلِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
alīmun
أَلِيمٌ
வலி தரக்கூடிய(து)
(விடுதலை செய்யக்கூடிய அடிமையை) எவரேனும் பெற்றிருக்காவிடில், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு முன்னதாகவே, (அவன்) இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்கவும். (இவ்வாறு நோன்பு நோற்க) சக்தி பெறாதவன். அறுபது ஏழைகளுக்கு (மத்திய தரமான) உணவளிக்கவும். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நீங்கள் (மெய்யாகவே) நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள் என்பதற்காக (இந்த கட்டளையை இவ்வாறு இலேசாக்கி வைத்தான்). இவைகள் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். (இதனை) மீறுபவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௪)
Tafseer

اِنَّ الَّذِيْنَ يُحَاۤدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ كُبِتُوْا كَمَا كُبِتَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَقَدْ اَنْزَلْنَآ اٰيٰتٍۢ بَيِّنٰتٍۗ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ مُّهِيْنٌۚ ٥

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yuḥāddūna
يُحَآدُّونَ
முரண்படுகிறார்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு(ம்)
warasūlahu
وَرَسُولَهُۥ
அவனது தூதருக்கும்
kubitū
كُبِتُوا۟
இழிவு படுத்தப்படுவார்கள்
kamā
كَمَا
போன்று
kubita
كُبِتَ
இழிவுபடுத்தப்பட்டது
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۚ
இவர்களுக்கு முன்னுள்ளவர்கள்
waqad
وَقَدْ
திட்டமாக
anzalnā
أَنزَلْنَآ
நாம் இறக்கினோம்
āyātin
ءَايَٰتٍۭ
அத்தாட்சிகளை
bayyinātin
بَيِّنَٰتٍۚ
தெளிவான(வை)
walil'kāfirīna
وَلِلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களுக்கு
ʿadhābun muhīnun
عَذَابٌ مُّهِينٌ
இழிவுதரும்தண்டனை
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களோ அவர்கள், நிச்சயமாக அவர்களுக்கு முன்னுள்ளோர் இழிவுபடுத்தப்பட்டபடியே இழிவுபடுத்தப்படுவார்கள். நிச்சயமாக (இதைப் பற்றி)த் தெளிவான வசனங்களையே நாம் இறக்கி இருக்கின்றோம். (அதற்கு) மாறு செய்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௫)
Tafseer

يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْاۗ اَحْصٰىهُ اللّٰهُ وَنَسُوْهُۗ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ شَهِيْدٌ ࣖ ٦

yawma
يَوْمَ
நாளில்
yabʿathuhumu
يَبْعَثُهُمُ
எழுப்புவான்/ அவர்களை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
fayunabbi-uhum
فَيُنَبِّئُهُم
அவர்களுக்கு அறிவிப்பான்
bimā ʿamilū
بِمَا عَمِلُوٓا۟ۚ
அவர்கள் செய்தவற்றை
aḥṣāhu l-lahu
أَحْصَىٰهُ ٱللَّهُ
அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான்/அல்லாஹ்
wanasūhu
وَنَسُوهُۚ
அவற்றை மறந்துவிட்டார்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
shahīdun
شَهِيدٌ
கண்காணிப்பவன்
அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவைகளைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். அதனை அவர்கள் மறந்துவிட்டபோதிலும், அவைகளை அல்லாஹ் சேகரித்து வைக்கின்றான். (அவர்கள் செய்யும்) அனைத்தையும் அல்லாஹ் தெரிந்தவனாகவே இருக்கின்றான். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௬)
Tafseer

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَآ اَدْنٰى مِنْ ذٰلِكَ وَلَآ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْاۚ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا يَوْمَ الْقِيٰمَةِۗ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ٧

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
நன்கறிவான்
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவற்றை(யும்)
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۖ
பூமியில் உள்ளவற்றையும்
mā yakūnu
مَا يَكُونُ
இருக்காது
min najwā
مِن نَّجْوَىٰ
உரையாடல்
thalāthatin
ثَلَٰثَةٍ
மூன்று நபர்களின்
illā huwa
إِلَّا هُوَ
தவிர/அவன்
rābiʿuhum
رَابِعُهُمْ
அவர்களில் நான்காமவனாக
walā khamsatin
وَلَا خَمْسَةٍ
இருக்காது/ஐந்து நபர்களின்
illā huwa
إِلَّا هُوَ
தவிர/அவன்
sādisuhum
سَادِسُهُمْ
அவர்களில் ஆறாவதாக
walā adnā
وَلَآ أَدْنَىٰ
இன்னும் இருக்காது/குறைவாக
min dhālika
مِن ذَٰلِكَ
அதை விட
walā akthara
وَلَآ أَكْثَرَ
இன்னும் அதிகமாக இருக்காது
illā huwa
إِلَّا هُوَ
தவிர/அவன்
maʿahum
مَعَهُمْ
அவர்களுடன்
ayna mā kānū
أَيْنَ مَا كَانُوا۟ۖ
அவர்கள் எங்கிருந்தாலும் சரியே
thumma
ثُمَّ
பிறகு
yunabbi-uhum
يُنَبِّئُهُم
அவர்களுக்கு அறிவிப்பான்
bimā ʿamilū
بِمَا عَمِلُوا۟
அவர்கள் செய்தவற்றை
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
மறுமை நாளில்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(நபியே!) வானங்களிலும், பூமியிலுமுள்ளவை அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகின்றான் என்பதை நீங்கள் கவனிக்க வில்லையா? அவர்களில் மூன்று பேர்கள் (கூடிப் பேசும்) ரகசியத்தில் அவன் நான்காவதாக இல்லாமல் இல்லை. ஐந்து பேர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்தில் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை. இதைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளவர்கள் (கூடிப் பேசும்) இரகசியத்திலும், அவன் அவர்களுடன் இல்லாமல் இல்லை. இவ்வாறு அவர்கள் எங்கிருந்த போதிலும் (ரகசியம் பேசினால் அவன் அவர்களுடைய ரகசியங்களை அறிந்து கொள்கின்றான்.) பின்னர், அவர்கள் செய்தவைகளைப் பற்றி அவர்களுக்கு மறுமை நாளில் அறிவித்து (அதற்குரிய கூலியைக் கொடுக்கின்றான்.) நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௭)
Tafseer

اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ نُهُوْا عَنِ النَّجْوٰى ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا نُهُوْا عَنْهُ وَيَتَنٰجَوْنَ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُوْلِۖ وَاِذَا جَاۤءُوْكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللّٰهُ ۙوَيَقُوْلُوْنَ فِيْٓ اَنْفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا اللّٰهُ بِمَا نَقُوْلُۗ حَسْبُهُمْ جَهَنَّمُۚ يَصْلَوْنَهَاۚ فَبِئْسَ الْمَصِيْرُ ٨

alam tara
أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
ilā alladhīna nuhū
إِلَى ٱلَّذِينَ نُهُوا۟
தடுக்கப்பட்டவர்களை
ʿani l-najwā
عَنِ ٱلنَّجْوَىٰ
கூடிப் பேசுவதை விட்டும்
thumma
ثُمَّ
பிறகு
yaʿūdūna
يَعُودُونَ
திரும்புகிறார்கள்
limā nuhū
لِمَا نُهُوا۟
எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ
ʿanhu
عَنْهُ
அதிலிருந்து
wayatanājawna
وَيَتَنَٰجَوْنَ
கூடிப் பேசுகிறார்கள்
bil-ith'mi
بِٱلْإِثْمِ
பாவத்தையும்
wal-ʿud'wāni
وَٱلْعُدْوَٰنِ
வரம்புமீறுவதையும்
wamaʿṣiyati
وَمَعْصِيَتِ
மாறுசெய்வதையும்
l-rasūli wa-idhā jāūka
ٱلرَّسُولِ وَإِذَا جَآءُوكَ
தூதருக்கு/அவர்கள் உம்மிடம் வந்தால்
ḥayyawka
حَيَّوْكَ
உமக்கு முகமன் கூறுகிறார்கள்
bimā lam yuḥayyika
بِمَا لَمْ يُحَيِّكَ
உமக்கு எதை முகமன் கூறவில்லையோ
bihi
بِهِ
அதை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
wayaqūlūna
وَيَقُولُونَ
கூறுகிறார்கள்
fī anfusihim
فِىٓ أَنفُسِهِمْ
தங்கள் மனதிற்குள்
lawlā yuʿadhibunā
لَوْلَا يُعَذِّبُنَا
நம்மை வேதனை செய்யாமல் இருக்க வேண்டுமே
l-lahu bimā naqūlu
ٱللَّهُ بِمَا نَقُولُۚ
அல்லாஹ்/நாம் சொல்வதைக் கொண்டு
ḥasbuhum
حَسْبُهُمْ
அவர்களுக்கு போதும்
jahannamu
جَهَنَّمُ
நரகமே
yaṣlawnahā
يَصْلَوْنَهَاۖ
அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்
fabi'sa l-maṣīru
فَبِئْسَ ٱلْمَصِيرُ
அது மீளுமிடங்களில் மிகக் கெட்டதாகும்
(நபியே!) ரகசியமே கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும், தடுக்கப்பட்டதை நோக்கியே செல்லும் அவர்களை நீங்கள் கவனித் தீர்களா? பாவத்திற்கும், வரம்பு மீறுவதற்கும், (நம்முடைய) தூதருக்கு மாறு செய்வதற்குமே, அவர்கள் ரகசியமாகச் சதி ஆலோசனை செய்கின்றனர். பின்னர் அவர்கள் உங்களிடம் வந்தாலோ, அல்லாஹ் உங்களுக்குக் கூறாத வார்த்தையைக் (கொண்டு, அதாவது: "அஸ்ஸலாமு அலைக்க" உங்கள்மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக! என்று கூறுவதற்குப் பதிலாக, "அஸ்ஸாமு அலைக்க" உங்களுக்கு மரணம் உண்டாவதாக! என்று) கூறிவிட்டு, அவர்கள் தங்களுக்குள் (இவர் உண்மையான தூதராக இருந்தால் "பரிகாசமாக) நாம் கூறியதைப் பற்றி, அல்லாஹ் நம்மை வேதனை செய்யமாட்டானா?" என்றும் கூறுகின்றனர். நரகமே அவர்களுக்குப் போதுமானதாகும். அதனை அவர்கள் அடைந்தே தீருவார்கள். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது. ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௮)
Tafseer

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِذَا تَنَاجَيْتُمْ فَلَا تَتَنَاجَوْا بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُوْلِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوٰىۗ وَاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اِلَيْهِ تُحْشَرُوْنَ ٩

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களே!
idhā tanājaytum
إِذَا تَنَٰجَيْتُمْ
நீங்கள் கூடிப்பேசினால்
falā tatanājaw
فَلَا تَتَنَٰجَوْا۟
கூடிப்பேசாதீர்கள்
bil-ith'mi
بِٱلْإِثْمِ
பாவமானதையும்
wal-ʿud'wāni
وَٱلْعُدْوَٰنِ
வரம்புமீறும் காரியத்தையும்
wamaʿṣiyati
وَمَعْصِيَتِ
மாறுசெய்வதையும்
l-rasūli
ٱلرَّسُولِ
தூதருக்கு
watanājaw
وَتَنَٰجَوْا۟
கூடிப்பேசுங்கள்!
bil-biri
بِٱلْبِرِّ
நன்மையான விஷயத்தையும்
wal-taqwā
وَٱلتَّقْوَىٰۖ
இறையச்சம் மிகுந்த விஷயத்தையும்
wa-ittaqū
وَٱتَّقُوا۟
அஞ்சிக் கொள்ளுங்கள்!
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
alladhī ilayhi
ٱلَّذِىٓ إِلَيْهِ
எவன்/அவனிடம்தான்
tuḥ'sharūna
تُحْشَرُونَ
நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
நம்பிக்கையாளர்களே! உங்களுக்குள் நீங்கள் ரகசியம் பேசினால் பாவம் செய்வதற்காகவும், வரம்பு மீறுவதற்காகவும், (நம்முடைய) தூதருக்கு மாறு செய்வதற்காகவும், ரகசியம் பேசாதீர்கள். ஆயினும், நன்மை செய்வதற்காகவும் பரிசுத்தத் தன்மைக்காகவும் இரகசியம் பேசலாம். (அனைத்தையும் அறிந்த) அல்லாஹ்வின் சமூகத்திற்கு நீங்கள் கொண்டு போகப்படுவீர்கள். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்துகொள்ளுங்கள். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௯)
Tafseer
௧௦

اِنَّمَا النَّجْوٰى مِنَ الشَّيْطٰنِ لِيَحْزُنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيْسَ بِضَاۤرِّهِمْ شَيْـًٔا اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۗوَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ١٠

innamā l-najwā
إِنَّمَا ٱلنَّجْوَىٰ
கூடிப்பேசுவது
mina l-shayṭāni
مِنَ ٱلشَّيْطَٰنِ
ஷைத்தான் புறத்திலிருந்து தூண்டப்படுகிறது
liyaḥzuna
لِيَحْزُنَ
கவலைப்படுத்து வதற்காக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களை
walaysa
وَلَيْسَ
அது இல்லை
biḍārrihim
بِضَآرِّهِمْ
அவர்களுக்கு தீங்கு செய்வதாக
shayan
شَيْـًٔا
அறவே
illā bi-idh'ni
إِلَّا بِإِذْنِ
அனுமதி இல்லாமல்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
waʿalā l-lahi
وَعَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீதே
falyatawakkali
فَلْيَتَوَكَّلِ
நம்பிக்கை வைக்கட்டும்
l-mu'minūna
ٱلْمُؤْمِنُونَ
நம்பிக்கையாளர்கள்
(அவர்களை) ஷைத்தான் இரகசியமாகப் பேசும்படி செய்வதெல்லாம், நம்பிக்கை கொண்டவர்களுக்குக் கவலையை உண்டுபண்ணுவதற்காகவே. அல்லாஹ்வுடைய நாட்டமின்றி, அவர்களுக்கு அவர்களால் யாதொன்றும் தீங்கிழைத்துவிட முடியாது. ஆகவே, நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வையே நம்பியிருக்கவும். ([௫௮] ஸூரத்துல் முஜாதலா: ௧௦)
Tafseer