குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௮
Qur'an Surah Al-Hadid Verse 8
ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا لَكُمْ لَا تُؤْمِنُوْنَ بِاللّٰهِ ۚوَالرَّسُوْلُ يَدْعُوْكُمْ لِتُؤْمِنُوْا بِرَبِّكُمْ وَقَدْ اَخَذَ مِيْثَاقَكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ (الحديد : ٥٧)
- wamā lakum
- وَمَا لَكُمْ
- And what (is) for you
- உங்களுக்கு என்ன
- lā tu'minūna
- لَا تُؤْمِنُونَ
- (that) not you believe
- நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு
- bil-lahi
- بِٱللَّهِۙ
- in Allah
- அல்லாஹ்வை
- wal-rasūlu
- وَٱلرَّسُولُ
- while the Messenger
- தூதரோ
- yadʿūkum
- يَدْعُوكُمْ
- calls you
- உங்களை அழைக்கின்றார்
- litu'minū
- لِتُؤْمِنُوا۟
- that you believe
- நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு
- birabbikum
- بِرَبِّكُمْ
- in your Lord
- உங்கள் இறைவனை
- waqad
- وَقَدْ
- and indeed
- திட்டமாக
- akhadha
- أَخَذَ
- He has taken
- வாங்கி இருக்கின்றான்
- mīthāqakum
- مِيثَٰقَكُمْ
- your covenant
- உங்கள் வாக்குறுதியை
- in kuntum
- إِن كُنتُم
- if you are
- நீங்கள் இருந்தால்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- believers
- நம்பிக்கையாளராக
Transliteration:
Wa maa lakum laa tu'minoona billaahi war Rasoolu yad'ookum lituu'minoo bi Rabbikum wa qad akhaza meesaaqakum in kuntum mu'mineen(QS. al-Ḥadīd:8)
English Sahih International:
And why do you not believe in Allah while the Messenger invites you to believe in your Lord and He has taken your covenant, if you should [truly] be believers? (QS. Al-Hadid, Ayah ௮)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை ஏன் நம்பிக்கை கொள்வதில்லை? உங்களைப் படைத்து காக்கும் உங்கள் இறைவனைத்தான் நீங்கள் நம்பிக்கை கொள்ளுமாறு, உங்களை நம்முடைய தூதர் அழைக்கின்றார். (இதைப்பற்றி, இறைவன்) உங்களிடம் நிச்சயமாக வாக்குறுதி பெற்றிருக்கின்றான். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (இதன் உண்மையை நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.) (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௮)
Jan Trust Foundation
உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்வதற்கு தூதரோ உங்களை அழைக்கின்றார். திட்டமாக அவன் உங்கள் வாக்குறுதியை (நீங்கள் உங்கள் தந்தையின் முதுகில் இருந்த போது) வாங்கி இருக்கின்றான். நீங்கள் நம்பிக்கையாளராக இருந்தால்... (இது நம்பிக்கை கொள்வதற்கு சரியான தருணமாகும்).