குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௨௯
Qur'an Surah Al-Hadid Verse 29
ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِّئَلَّا يَعْلَمَ اَهْلُ الْكِتٰبِ اَلَّا يَقْدِرُوْنَ عَلٰى شَيْءٍ مِّنْ فَضْلِ اللّٰهِ وَاَنَّ الْفَضْلَ بِيَدِ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُ ۗوَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ ࣖ ۔ (الحديد : ٥٧)
- li-allā yaʿlama
- لِّئَلَّا يَعْلَمَ
- So that may know
- ஏனெனில், அறிந்து கொள்வதற்காக
- ahlu l-kitābi
- أَهْلُ ٱلْكِتَٰبِ
- (the) People (of) the Book
- வேதக்காரர்கள்
- allā yaqdirūna
- أَلَّا يَقْدِرُونَ
- that not they have power
- ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும்
- ʿalā shayin
- عَلَىٰ شَىْءٍ
- over anything
- எதன் மீதும்
- min faḍli
- مِّن فَضْلِ
- from (the) Bounty
- அருளில்
- l-lahi
- ٱللَّهِۙ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- wa-anna
- وَأَنَّ
- and that
- நிச்சயமாக
- l-faḍla
- ٱلْفَضْلَ
- the Bounty
- சிறப்பு
- biyadi
- بِيَدِ
- (is) in Allah's Hand
- கரத்தில்
- l-lahi
- ٱللَّهِ
- (is) in Allah's Hand
- அல்லாஹ்வின்
- yu'tīhi
- يُؤْتِيهِ
- He gives it
- அதை கொடுக்கின்றான்
- man yashāu
- مَن يَشَآءُۚ
- whom He wills
- அவன் நாடுகின்றவர்களுக்கு
- wal-lahu
- وَٱللَّهُ
- And Allah
- அல்லாஹ்
- dhū l-faḍli
- ذُو ٱلْفَضْلِ
- (is) the Possessor of Bounty (is) the Possessor of Bounty
- சிறப்புடையவன்
- l-ʿaẓīmi
- ٱلْعَظِيمِ
- the Great
- மகத்தான(து)
Transliteration:
Li'alla ya'lama Ahlul kitaabi allaa yaqdiroona 'alaa shai'im min fadlil laahi wa annal fadla bi Yadil laahi u'teehi many yashaaa'; wallaahu Zul fadilil 'azeem(QS. al-Ḥadīd:29)
English Sahih International:
[This is] so that the People of the Scripture may know that they are not able [to obtain] anything from the bounty of Allah and that [all] bounty is in the hand of Allah; He gives it to whom He wills. And Allah is the possessor of great bounty. (QS. Al-Hadid, Ayah ௨௯)
Abdul Hameed Baqavi:
(இத்தூதரை நம்பிக்கை கொண்டவர்களுக்கு) அல்லாஹ் வுடைய அருளில் யாதொரு பாகமும் கிடைக்காதென்று, வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இதனை அவன் உங்களுக்கு அறிவித்தான்). அருள் அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கின்றன. அவன் விரும்பியவர் களுக்கு அதனை அளிக்கின்றான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௨௯)
Jan Trust Foundation
அல்லாஹ்வுடைய அருள் கொடையிலிருந்து யாதொன்றையும் பெறத் தாங்கள் சக்தியுடையவர்களல்லர் என்று வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இவற்றை அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்); அன்றியும் அருள் கொடையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது; தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான் - அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவன் உங்களுக்கு இவ்வளவு நன்மைகளைக் கொடுத்தான்.) ஏனெனில், (இந்த தூதரை நம்பிக்கை கொள்ளாத) வேதக்காரர்கள் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும் நிச்சயமாக சிறப்பு அல்லாஹ்வின் கரத்தில் இருக்கின்றது, அவன் நாடுகின்றவர்களுக்கு அதைக் கொடுக்கின்றான் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன்.