Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௨௮

Qur'an Surah Al-Hadid Verse 28

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ يُؤْتِكُمْ كِفْلَيْنِ مِنْ رَّحْمَتِهٖ وَيَجْعَلْ لَّكُمْ نُوْرًا تَمْشُوْنَ بِهٖ وَيَغْفِرْ لَكُمْۗ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌۙ (الحديد : ٥٧)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe! O you who believe! O you who believe!
நம்பிக்கையாளர்களே!
ittaqū
ٱتَّقُوا۟
Fear
பயந்து கொள்ளுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
waāminū
وَءَامِنُوا۟
and believe
இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள்
birasūlihi
بِرَسُولِهِۦ
in His Messenger
அவனது தூதரை
yu'tikum
يُؤْتِكُمْ
He will give you
உங்களுக்கு கொடுப்பான்
kif'layni
كِفْلَيْنِ
double portion
இரு மடங்கு பங்குகளை
min raḥmatihi
مِن رَّحْمَتِهِۦ
of His Mercy
தனது கருணையிலிருந்து
wayajʿal
وَيَجْعَل
and He will make
இன்னும் ஏற்படுத்துவான்
lakum
لَّكُمْ
for you
உங்களுக்கு
nūran
نُورًا
a light
ஒளியை
tamshūna
تَمْشُونَ
you will walk
நீங்கள் நடந்து செல்வீர்கள்
bihi
بِهِۦ
with it
அதன் மூலம்
wayaghfir
وَيَغْفِرْ
and He will forgive
இன்னும் மன்னிப்பான்
lakum
لَكُمْۚ
you
உங்களை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ghafūrun
غَفُورٌ
(is) Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Yaaa ayyuhal lazeena aamaanut taqullaaha wa aaminoo bi Rasoolihee yu'tikum kiflaini mir rahmatihee wa yaj'al lakum nooran tamshoona bihee wa yaghfir lakum; wallaahu Ghafoorur Raheem (QS. al-Ḥadīd:28)

English Sahih International:

O you who have believed, fear Allah and believe in His Messenger; He will [then] give you a double portion of His mercy and make for you a light by which you will walk and forgive you; and Allah is Forgiving and Merciful. (QS. Al-Hadid, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (ஈஸாவை) நம்பிக்கை கொண்ட (கிறிஸ்த)வர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுடைய இத்தூதரை (முஹம்மதை)யும் நம்பிக்கைக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவனுடைய அருளிலிருந்து (ஈஸாவை நம்பிக்கைக் கொண்டதற்கு ஒரு பங்கும், இத்தூதரை நம்பிக்கைக் கொண்டதற்கு ஒரு பங்கும், ஆக) இரண்டு பங்கு கூலி கொடுப்பான். உங்களுக்கு (நேரான வழியை அறிவிக்கக்கூடிய இந்தக் குர்ஆன் என்னும்) ஒளியையும் கொடுப்பான். அதன் பிரகாசத்தைக் கொண்டு நீங்கள் (நேரான வழியில்) செல்லலாம். (உங்களுடைய) குற்றங்களையும் உங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௨௮)

Jan Trust Foundation

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள்; இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! அவனது தூதரை நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் உங்களுக்கு தனது கருணையிலிருந்து இரு மடங்கு பங்குகளைக் கொடுப்பான். இன்னும், உங்களுக்கு ஒளியை ஏற்படுத்துவான். அதன் மூலம் (கண்ணியத்தோடு மக்களுக்கு மத்தியில்) நீங்கள் நடந்து செல்வீர்கள். இன்னும், அவன் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.