குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௨௫
Qur'an Surah Al-Hadid Verse 25
ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِيْزَانَ لِيَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِۚ وَاَنْزَلْنَا الْحَدِيْدَ فِيْهِ بَأْسٌ شَدِيْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ وَرُسُلَهٗ بِالْغَيْبِۗ اِنَّ اللّٰهَ قَوِيٌّ عَزِيْزٌ ࣖ (الحديد : ٥٧)
- laqad arsalnā
- لَقَدْ أَرْسَلْنَا
- Certainly We sent
- திட்டவட்டமாக அனுப்பினோம்
- rusulanā
- رُسُلَنَا
- Our Messengers
- நமது தூதர்களை
- bil-bayināti
- بِٱلْبَيِّنَٰتِ
- with clear proofs
- தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு
- wa-anzalnā
- وَأَنزَلْنَا
- and We sent down
- நாம் இறக்கினோம்
- maʿahumu
- مَعَهُمُ
- with them
- அவர்களுடன்
- l-kitāba
- ٱلْكِتَٰبَ
- the Scripture
- வேதத்தை(யும்)
- wal-mīzāna
- وَٱلْمِيزَانَ
- and the Balance
- தராசையும்
- liyaqūma
- لِيَقُومَ
- that may establish
- நிலைநிறுத்துவதற்காக
- l-nāsu
- ٱلنَّاسُ
- the people
- மக்கள்
- bil-qis'ṭi
- بِٱلْقِسْطِۖ
- justice
- நீதத்தை
- wa-anzalnā
- وَأَنزَلْنَا
- And We sent down
- இன்னும் இறக்கினோம்
- l-ḥadīda
- ٱلْحَدِيدَ
- [the] iron
- இரும்பையும்
- fīhi
- فِيهِ
- wherein
- அதில்
- basun
- بَأْسٌ
- (is) power
- வலிமை(யும்)
- shadīdun
- شَدِيدٌ
- mighty
- கடுமையான(து)
- wamanāfiʿu
- وَمَنَٰفِعُ
- and benefits
- இன்னும் பல பலன்களும்
- lilnnāsi
- لِلنَّاسِ
- for the people
- மக்களுக்கு
- waliyaʿlama
- وَلِيَعْلَمَ
- and so that Allah may make evident
- அறிவதற்காகவும்
- l-lahu
- ٱللَّهُ
- and so that Allah may make evident
- அல்லாஹ்
- man yanṣuruhu
- مَن يَنصُرُهُۥ
- (he) who helps Him
- எவர்/அவனுக்கு உதவி செய்கின்றார்
- warusulahu
- وَرُسُلَهُۥ
- and His Messengers
- அவனது தூதருக்கும்
- bil-ghaybi
- بِٱلْغَيْبِۚ
- unseen
- மறைவில்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்
- qawiyyun
- قَوِىٌّ
- (is) All-Strong
- மிக வலிமையாளன்
- ʿazīzun
- عَزِيزٌ
- All-Mighty
- மிகைத்தவன்
Transliteration:
Laqad arsalnaa Rusulanaa bilbaiyinaati wa anzalnaa ma'ahumul Kitaaba wal Meezaana liyaqooman naasu bilqist, wa anzalnal hadeeda feehi baasun shadeedunw wa manaafi'u linnaasi wa liya'lamal laahu many yansuruhoo wa Rusulahoo bilghaib; innal laaha Qawiyyn 'Azeez(QS. al-Ḥadīd:25)
English Sahih International:
We have already sent Our messengers with clear evidences and sent down with them the Scripture and the balance that the people may maintain [their affairs] in justice. And We sent down iron, wherein is great military might and benefits for the people, and so that Allah may make evident those who support Him and His messengers unseen. Indeed, Allah is Powerful and Exalted in Might. (QS. Al-Hadid, Ayah ௨௫)
Abdul Hameed Baqavi:
நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்துகொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இரும்பையும் நாமே படைத்தோம். அதில் பெரும் சக்தி இருக்கின்றது; இன்னும் மனிதர்களுக்கு பல பயன்களும் உள்ளன. அல்லாஹ்வைக் (கண்ணால்) காணாமலேயே (அவனை நம்பிக்கை கொண்டு) இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்துகொள்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் பலசாலியும் (அனைவரையும்) மிகைத்தவனுமாக இருக்கின்றான். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௨௫)
Jan Trust Foundation
நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
திட்டவட்டமாக நாம் நமது தூதர்களை தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும் தராசையும், -மக்கள் (அதன் மூலம்) நீதத்தை நிலை நிறுத்துவதற்காக - நாம் இறக்கினோம். இன்னும் இரும்பையும் நாம் இறக்கினோம். அதில் கடுமையான வலிமையும் மக்களுக்கு பல பலன்களும் உள்ளன. இன்னும் அவனுக்கும் (-அல்லாஹ்விற்கும்) அவனது தூதருக்கும் மறைவில் உதவி செய்கின்றவரை (வெளிப்படையாக) அல்லாஹ் அறிவதற்காகவும் (இரும்பை அல்லாஹ் படைத்தான்). நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையாளன், மிகைத்தவன் ஆவான்.