குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௨௩
Qur'an Surah Al-Hadid Verse 23
ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِّكَيْلَا تَأْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَآ اٰتٰىكُمْ ۗوَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرٍۙ (الحديد : ٥٧)
- likaylā tasaw
- لِّكَيْلَا تَأْسَوْا۟
- So that you may not grieve
- ஏனெனில், நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காக(வும்)
- ʿalā mā fātakum
- عَلَىٰ مَا فَاتَكُمْ
- over what has escaped you
- உங்களுக்கு தவறி விட்டதற்காக
- walā tafraḥū
- وَلَا تَفْرَحُوا۟
- and (do) not exult
- நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும்
- bimā ātākum wal-lahu
- بِمَآ ءَاتَىٰكُمْۗ وَٱللَّهُ
- at what He has given you And Allah
- அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு/அல்லாஹ்
- lā yuḥibbu
- لَا يُحِبُّ
- (does) not love
- நேசிக்க மாட்டான்
- kulla
- كُلَّ
- every
- எல்லோரையும்
- mukh'tālin
- مُخْتَالٍ
- self-deluded
- அகம்பாவக்காரர்கள்
- fakhūrin
- فَخُورٍ
- boaster
- பெருமையடிப்பவர்கள்
Transliteration:
Likailaa taasaw 'alaa maa faatakum wa laa tafrahoo bimaaa aataakum; wallaahu laa yuhibbu kulla mukhtaalin fakhoor(QS. al-Ḥadīd:23)
English Sahih International:
In order that you not despair over what has eluded you and not exult [in pride] over what He has given you. And Allah does not like everyone self-deluded and boastful – (QS. Al-Hadid, Ayah ௨௩)
Abdul Hameed Baqavi:
உங்களை விட்டும் தப்பிப் போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை. (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௨௩)
Jan Trust Foundation
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(இதை நாம் உங்களுக்கு அறிவித்தோம்.) ஏனெனில், உங்களுக்கு தவறிவிட்டதற்காக நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும் ஆகும். அல்லாஹ் அகம்பாவக்காரர்கள், பெருமையடிப்பவர்கள் எல்லோரையும் நேசிக்க மாட்டான்.