Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௨௨

Qur'an Surah Al-Hadid Verse 22

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَآ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِيْٓ اَنْفُسِكُمْ اِلَّا فِيْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْرَاَهَا ۗاِنَّ ذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌۖ (الحديد : ٥٧)

mā aṣāba
مَآ أَصَابَ
Not strikes
ஏற்படுவதில்லை
min muṣībatin
مِن مُّصِيبَةٍ
any disaster
ஒரு சோதனை
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியிலும்
walā fī anfusikum
وَلَا فِىٓ أَنفُسِكُمْ
and not in yourselves
உங்களிலும்
illā fī kitābin
إِلَّا فِى كِتَٰبٍ
but in a Register
தவிர/விதியில்இருந்தே
min qabli
مِّن قَبْلِ
before before
முன்னர்
an nabra-ahā
أَن نَّبْرَأَهَآۚ
that We bring it into existence
அதை நாம் உருவாக்குவதற்கு
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
dhālika
ذَٰلِكَ
that
இது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
for Allah
அல்லாஹ்விற்கு
yasīrun
يَسِيرٌ
(is) easy
மிக எளிதானதாகும்

Transliteration:

Maaa asaaba mim musee batin fil ardi wa laa feee anfusikum illaa fee kitaabim min qabli an nabra ahaa; innaa zaalika 'alal laahi yaseer (QS. al-Ḥadīd:22)

English Sahih International:

No disaster strikes upon the earth or among yourselves except that it is in a register before We bring it into being – indeed that, for Allah, is easy – (QS. Al-Hadid, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

(பொதுவாக) பூமியிலோ அல்லது (சொந்தமாக) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தக் கஷ்டமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே! (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௨௨)

Jan Trust Foundation

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமியிலும் உங்களிலும் ஒரு சோதனை ஏற்படுவதில்லை, நாம் (பூமியில், அல்லது உங்களில்) அதை உருவாக்குவதற்கு முன்னர் அது விதியில் இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும்.