Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௨௧

Qur'an Surah Al-Hadid Verse 21

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَابِقُوْٓا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاۤءِ وَالْاَرْضِۙ اُعِدَّتْ لِلَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۗ ذٰلِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَاۤءُ ۚوَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ (الحديد : ٥٧)

sābiqū
سَابِقُوٓا۟
Race
முந்துங்கள்
ilā maghfiratin
إِلَىٰ مَغْفِرَةٍ
to (the) forgiveness
மன்னிப்பின் பக்கமும்
min rabbikum
مِّن رَّبِّكُمْ
from your Lord
உங்கள் இறைவனின்
wajannatin
وَجَنَّةٍ
and a Garden
இன்னும் சொர்க்கத்தின் பக்கமும்
ʿarḍuhā
عَرْضُهَا
its width
அதன் அகலம்
kaʿarḍi
كَعَرْضِ
(is) like (the) width
அகலத்தைப் போல
l-samāi
ٱلسَّمَآءِ
(of) the heaven
வானம்
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமியின்
uʿiddat
أُعِدَّتْ
prepared
அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوا۟
for those who believe
நம்பிக்கை கொண்டவர்களுக்காக
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வையும்
warusulihi
وَرُسُلِهِۦۚ
and His Messengers
அவனது தூதரையும்
dhālika
ذَٰلِكَ
That
அது
faḍlu
فَضْلُ
(is the) Bounty
சிறப்பாகும்
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வின்
yu'tīhi
يُؤْتِيهِ
He gives
அதை அவன் கொடுக்கின்றான்
man yashāu
مَن يَشَآءُۚ
(to) whom He wills
அவன் நாடுகின்றவர்களுக்கு
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
dhū l-faḍli
ذُو ٱلْفَضْلِ
(is) the Possessor of Bounty (is) the Possessor of Bounty
சிறப்புடையவன்
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
the Great
மகத்தான

Transliteration:

Saabiqooo ilaa maghfiratim mir Rabbikum wa jannatin 'arduhaa ka-'ardis samaaa'i wal ardi u'iddat lillazeena aamanoo billaahi wa Rusulih; zaalika fadlul laahi yu'teehi many yashaaa'; wal laahu zul fadlil 'azeem (QS. al-Ḥadīd:21)

English Sahih International:

Race [i.e., compete] toward forgiveness from your Lord and a Garden whose width is like the width of the heavens and earth, prepared for those who believed in Allah and His messengers. That is the bounty of Allah which He gives to whom He wills, and Allah is the possessor of great bounty. (QS. Al-Hadid, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சுவனபதியை நோக்கியும் முந்திச் செல்லுங்கள். அச்சுவனபதியின் விஸ்தீரணமோ வானம், பூமியின் விஸ்தீரணத்தைப்போல் இருக்கின்றது. அது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அல்லாஹ்வினுடைய அருளாகும். இதனை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக் கின்றான். அல்லாஹ் மகத்தான அருளாளன்! (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௨௧)

Jan Trust Foundation

உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் முந்துங்கள். அதன் அகலம் வானம், பூமியின் அகலத்தைப் போலாகும். அது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வின் சிறப்பா(ன அருளா)கும். அவன் நாடுகின்றவர்களுக்கு அதை அவன் கொடுக்கின்றான். அல்லாஹ் மகத்தான சிறப்புடையவன் ஆவான்.