Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௧௯

Qur'an Surah Al-Hadid Verse 19

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖٓ اُولٰۤىِٕكَ هُمُ الصِّدِّيْقُوْنَ ۖوَالشُّهَدَاۤءُ عِنْدَ رَبِّهِمْۗ لَهُمْ اَجْرُهُمْ وَنُوْرُهُمْۗ وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ ࣖ (الحديد : ٥٧)

wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
And those who believe
நம்பிக்கை கொண்டவர்கள்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வையும்
warusulihi
وَرُسُلِهِۦٓ
and His Messengers
இன்னும் அவனது தூதர்களையும்
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
[those] they
அவர்கள்தான்
l-ṣidīqūna
ٱلصِّدِّيقُونَۖ
(are) the truthful
மிக உண்மையானவர்கள்
wal-shuhadāu
وَٱلشُّهَدَآءُ
and the martyrs
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
(are) with their Lord
அவர்களின் இறைவனிடம்
lahum
لَهُمْ
For them
அவர்களுக்கு
ajruhum
أَجْرُهُمْ
(is) their reward
அவர்களின் கூலியும்
wanūruhum
وَنُورُهُمْۖ
and their light
( ஒளியும்இ) அவர்களின்
wa-alladhīna
وَٱلَّذِينَ
But those who
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
disbelieve
நிராகரித்தார்கள்
wakadhabū
وَكَذَّبُوا۟
and deny
இன்னும் பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
Our Verses
நமது வசனங்களை
ulāika
أُو۟لَٰٓئِكَ
those
அவர்கள்தான்
aṣḥābu l-jaḥīmi
أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
(are the) companions (of) the Hellfire
நரகவாசிகள்

Transliteration:

Wallazeena aamanoo billaahi wa Rusuliheee ulaaa'ika humus siddeeqoona wash shuhadaaa'u 'inda Rabbihim lahum ajruhum wa nooruhum wallazeena kafaroo wa kazzaboo bi aayaatinaaa ulaaaika As haabul jaheem (QS. al-Ḥadīd:19)

English Sahih International:

And those who have believed in Allah and His messengers – those are [in the ranks of] the supporters of truth and the martyrs, with their Lord. For them is their reward and their light. But those who have disbelieved and denied Our verses – those are the companions of Hellfire. (QS. Al-Hadid, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ, அவர்கள்தாம் ஸித்தீக் எனப்படும் உண்மையாளர்கள். "ஷஹீது" எனப்படும் சன்மார்க்கப் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் தங்கள் இறைவனிடத்தில் இருப்பார்கள். மேலும், அவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய கூலியும் உண்டு. (நேரான வழியை அறிவிக்கக் கூடிய) பிரகாசமும் உண்டு. எவர்கள் நம்முடைய வசனங்களை நிராகரித்துப் பொய்யாக்குகின்றார்களோ, அவர்கள் நரகவாசிகள்தாம். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௧௯)

Jan Trust Foundation

மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள்; அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) பேரொளியும் உண்டு; எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள்தான் “ஸித்தீக்” என்ற மிக உண்மையானவர்கள் ஆவார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள், அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு அவர்களின் கூலியும் அவர்களின் ஒளியும் உண்டு. எவர்கள் நிராகரித்து, நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள் ஆவார்கள்.