Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௧௫

Qur'an Surah Al-Hadid Verse 15

ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنْكُمْ فِدْيَةٌ وَّلَا مِنَ الَّذِيْنَ كَفَرُوْاۗ مَأْوٰىكُمُ النَّارُۗ هِيَ مَوْلٰىكُمْۗ وَبِئْسَ الْمَصِيْرُ (الحديد : ٥٧)

fal-yawma
فَٱلْيَوْمَ
So today
இன்றைய தினம்
lā yu'khadhu
لَا يُؤْخَذُ
not will be accepted
வாங்கப்படாது
minkum
مِنكُمْ
from you
உங்களிடமும்
fid'yatun
فِدْيَةٌ
any ransom
எவ்வித பரிகாரம்
walā mina alladhīna kafarū
وَلَا مِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ۚ
and not from those who disbelieved
நிராகரிப்பாளர்களிடமும்
mawākumu
مَأْوَىٰكُمُ
Your abode
உங்கள் தங்குமிடம்
l-nāru
ٱلنَّارُۖ
(is) the Fire;
நரகம்தான்
hiya mawlākum
هِىَ مَوْلَىٰكُمْۖ
it (is) your protector
அதுதான்/உங்களுக்கு மிக ஏற்றமானது
wabi'sa l-maṣīru
وَبِئْسَ ٱلْمَصِيرُ
and wretched is the destination
மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது

Transliteration:

Fal Yawma laa yu'khazu minkum fidyatunw wa laa minal lazeena kafaroo; maawaakumun Naaru hiya maw laakum wa bi'sal maseer (QS. al-Ḥadīd:15)

English Sahih International:

So today no ransom will be taken from you or from those who disbelieved. Your refuge is the Fire. It is most worthy of you, and wretched is the destination." (QS. Al-Hadid, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

ஆகவே, இன்றைய தினம் உங்களிடமிருந்தோ அல்லது (உங்களைப் போல்) நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வேதனைக்குப் பதிலாக) யாதொன்றையும் பரிகாரமாகப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் செல்லுமிடம் நரகம்தான். (நரக) நெருப்புத்தான் உங்களுக்குத் துணையாக இருக்கக்கூடியது" (என்றும் கூறப்படும்). அது தங்குமிடங்களில் எல்லாம் மகா கெட்டது. (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௧௫)

Jan Trust Foundation

“ஆகவே, இன்று உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது; உங்களுடைய தங்குமிடம் நரகம் தான்; அதுதான் உங்களுக்குத் துணை - அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்” (என்றுங் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்றைய தினம் உங்களிடமும் நிராகரிப்பாளர்களிடமும் எவ்வித பரிகாரம் - வாங்கப்படாது. உங்கள் தங்குமிடம் நரகம்தான். அதுதான் உங்களுக்கு மிக ஏற்றமானது. மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது.