குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹதீத் வசனம் ௧௨
Qur'an Surah Al-Hadid Verse 12
ஸூரத்துல் ஹதீத் [௫௭]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يَوْمَ تَرَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ يَسْعٰى نُوْرُهُمْ بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ بُشْرٰىكُمُ الْيَوْمَ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُۚ (الحديد : ٥٧)
- yawma
- يَوْمَ
- (On the) Day
- நாளில்
- tarā
- تَرَى
- you will see
- நீர் பார்ப்பீர்
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- the believing men
- நம்பிக்கை கொண்ட ஆண்களை
- wal-mu'mināti
- وَٱلْمُؤْمِنَٰتِ
- and the believing women
- இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களை
- yasʿā
- يَسْعَىٰ
- running
- செல்லும்
- nūruhum
- نُورُهُم
- their light
- அவர்களின் ஒளி
- bayna aydīhim
- بَيْنَ أَيْدِيهِمْ
- before them before them
- அவர்களுக்கு முன்னர்
- wabi-aymānihim
- وَبِأَيْمَٰنِهِم
- and on their right
- இன்னும் அவர்களின் வலப்பக்கங்களில்
- bush'rākumu
- بُشْرَىٰكُمُ
- "Glad tidings for you
- உங்கள் நற்செய்தி
- l-yawma
- ٱلْيَوْمَ
- this Day
- இன்று
- jannātun
- جَنَّٰتٌ
- gardens
- சொர்க்கங்களாகும்
- tajrī
- تَجْرِى
- flowing
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- from underneath it
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- the rivers
- நதிகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- abiding forever
- நிரந்தரமாக இருப்பார்கள்
- fīhā
- فِيهَاۚ
- therein
- அதில்
- dhālika huwa
- ذَٰلِكَ هُوَ
- That [it] (is)
- அதுதான்
- l-fawzu
- ٱلْفَوْزُ
- the success
- வெற்றியாகும்
- l-ʿaẓīmu
- ٱلْعَظِيمُ
- the great"
- மகத்தான
Transliteration:
Yawma taral mu'mineena walmu'minaati yas'aa nooruhum baina aydeehim wa biaymaanihim bushraakumul yawma jannaatun tajree min tahtihal anhaaru khaalideena feeha; zaalika huwal fawzul 'azeem(QS. al-Ḥadīd:12)
English Sahih International:
On the Day you see the believing men and believing women, their light proceeding before them and on their right, [it will be said], "Your good tidings today are [of] gardens beneath which rivers flow, wherein you will abide eternally." That is what is the great attainment. (QS. Al-Hadid, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நம்பிக்கை கொண்ட இத்தகைய ஆண்களையும் பெண்களையும் நீங்கள் காணும் அந்நாளில், அவர்களுடைய ஒளியின் பிரகாசம் அவர்களுக்கு முன்னும், வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, அவர்களை நோக்கி மலக்குகள்:) "இன்றைய தினம் உங்களுக்கு நற்செய்தி (என்றும்) தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியில் நுழைந்து விடுவீர்கள். என்றென்றும் அதில் தங்கியும் விடுவீர்கள்" என்றும் கூறுவார்கள். இதுதான் மகத்தான ஒரு வெற்றியாகும். (ஸூரத்துல் ஹதீத், வசனம் ௧௨)
Jan Trust Foundation
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி|) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் (மறுமையில்) நீர் பார்ப்பீர், அவர்களின் ஒளி - (அவர்களின் நம்பிக்கை மற்றும் நல்ல அமல்களின் நன்மைகள்) அவர்களுக்கு முன்னர் செல்லும். அவர்களின் வலப்பக்கங்களில் (அவர்களின் செயலேடுகள் பறந்து கொண்டிருக்கும்). இன்று உங்கள் நற்செய்தி சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அதுதான் மகத்தான வெற்றியாகும்.