Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹதீத் - Page: 2

Al-Hadid

(al-Ḥadīd)

௧௧

مَنْ ذَا الَّذِيْ يُقْرِضُ اللّٰهَ قَرْضًا حَسَنًا فَيُضٰعِفَهٗ لَهٗ وَلَهٗٓ اَجْرٌ كَرِيْمٌ ١١

man dhā
مَّن ذَا
யார்
alladhī
ٱلَّذِى
எவர்
yuq'riḍu
يُقْرِضُ
கடன் கொடுக்கின்றார்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
qarḍan
قَرْضًا
கடனாக
ḥasanan
حَسَنًا
அழகிய
fayuḍāʿifahu
فَيُضَٰعِفَهُۥ
அதை பன்மடங்காக்குவான்
lahu
لَهُۥ
அவருக்கு
walahu
وَلَهُۥٓ
இன்னும் அவருக்கு
ajrun
أَجْرٌ
கூலி உண்டு
karīmun
كَرِيمٌ
கண்ணியமான(து)
எவர் அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுக்கின்றாரோ அவருக்கு, அதனை இரட்டிப்பாக்கியே வைத்திருக்கின்றான். அன்றி, அவருக்கு மிக கண்ணியமான கூலியும் உண்டு. ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧௧)
Tafseer
௧௨

يَوْمَ تَرَى الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ يَسْعٰى نُوْرُهُمْ بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ بُشْرٰىكُمُ الْيَوْمَ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۗ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُۚ ١٢

yawma
يَوْمَ
நாளில்
tarā
تَرَى
நீர் பார்ப்பீர்
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களை
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِ
இன்னும் நம்பிக்கை கொண்ட பெண்களை
yasʿā
يَسْعَىٰ
செல்லும்
nūruhum
نُورُهُم
அவர்களின் ஒளி
bayna aydīhim
بَيْنَ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்னர்
wabi-aymānihim
وَبِأَيْمَٰنِهِم
இன்னும் அவர்களின் வலப்பக்கங்களில்
bush'rākumu
بُشْرَىٰكُمُ
உங்கள் நற்செய்தி
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
jannātun
جَنَّٰتٌ
சொர்க்கங்களாகும்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமாக இருப்பார்கள்
fīhā
فِيهَاۚ
அதில்
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
அதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
வெற்றியாகும்
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
மகத்தான
(நபியே!) நம்பிக்கை கொண்ட இத்தகைய ஆண்களையும் பெண்களையும் நீங்கள் காணும் அந்நாளில், அவர்களுடைய ஒளியின் பிரகாசம் அவர்களுக்கு முன்னும், வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, அவர்களை நோக்கி மலக்குகள்:) "இன்றைய தினம் உங்களுக்கு நற்செய்தி (என்றும்) தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியில் நுழைந்து விடுவீர்கள். என்றென்றும் அதில் தங்கியும் விடுவீர்கள்" என்றும் கூறுவார்கள். இதுதான் மகத்தான ஒரு வெற்றியாகும். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧௨)
Tafseer
௧௩

يَوْمَ يَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ لِلَّذِيْنَ اٰمَنُوا انْظُرُوْنَا نَقْتَبِسْ مِنْ نُّوْرِكُمْۚ قِيْلَ ارْجِعُوْا وَرَاۤءَكُمْ فَالْتَمِسُوْا نُوْرًاۗ فَضُرِبَ بَيْنَهُمْ بِسُوْرٍ لَّهٗ بَابٌۗ بَاطِنُهٗ فِيْهِ الرَّحْمَةُ وَظَاهِرُهٗ مِنْ قِبَلِهِ الْعَذَابُۗ ١٣

yawma
يَوْمَ
அந்நாளில்
yaqūlu
يَقُولُ
கூறுவார்கள்
l-munāfiqūna
ٱلْمُنَٰفِقُونَ
நயவஞ்சகம் உடைய ஆண்களும்
wal-munāfiqātu
وَٱلْمُنَٰفِقَٰتُ
நயவஞ்சகம் உடைய பெண்களும்
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
unẓurūnā
ٱنظُرُونَا
எங்களை எதிர்பாருங்கள்!
naqtabis
نَقْتَبِسْ
நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்
min nūrikum
مِن نُّورِكُمْ
உங்கள்ஒளியிலிருந்து
qīla
قِيلَ
கூறப்படும்
ir'jiʿū
ٱرْجِعُوا۟
நீங்கள் திரும்பிச்செல்லுங்கள்
warāakum
وَرَآءَكُمْ
உங்களுக்குப் பின்னால்
fal-tamisū
فَٱلْتَمِسُوا۟
தேடுங்கள்!
nūran
نُورًا
ஒளியை
faḍuriba
فَضُرِبَ
ஆகவே அமைக்கப்படும்
baynahum
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
bisūrin
بِسُورٍ
ஒரு சுவர்
lahu
لَّهُۥ
அதற்கு
bābun
بَابٌۢ
ஒரு வாசல்
bāṭinuhu
بَاطِنُهُۥ
அதன் உள் பக்கம்
fīhi
فِيهِ
அதில்
l-raḥmatu
ٱلرَّحْمَةُ
அருள்
waẓāhiruhu
وَظَٰهِرُهُۥ
இன்னும் அதன் வெளிப்பக்கம்
min qibalihi
مِن قِبَلِهِ
அதற்கு முன்னால்
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி "நீங்கள் (முன் செல்லாது) எங்களுக்காகச் சிறிது தாமதியுங்கள். உங்களுடைய பிரகாசத்தைக் கொண்டு நாங்கள் பயனடைவோம்" என்று கூறுவார்கள். (அதற்கு அவர்களை நோக்கி "எங்கள் முன் நிற்காதீர்கள்.) நீங்கள் உங்கள் பின்புறம் சென்று (அங்குப்) பிரகாசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று கூறப்படும். அந்நேரத்தில், இவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டுவிடும். அதற்கு வாசலும் இருக்கும். (நம்பிக்கை யாளர்கள் இருக்கக்கூடிய) அதன் உட்புறத்தில் (இறைவனின்) அருளும், அதன் வெளிப்புறத்தில் (பாவிகள் அனுபவிக்கக்கூடிய) அவனுடைய வேதனையுமிருக்கும். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧௩)
Tafseer
௧௪

يُنَادُوْنَهُمْ اَلَمْ نَكُنْ مَّعَكُمْۗ قَالُوْا بَلٰى وَلٰكِنَّكُمْ فَتَنْتُمْ اَنْفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْاَمَانِيُّ حَتّٰى جَاۤءَ اَمْرُ اللّٰهِ وَغَرَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ١٤

yunādūnahum
يُنَادُونَهُمْ
அவர்களை கூவி அழைப்பார்கள்
alam nakun
أَلَمْ نَكُن
நாங்கள் இருக்கவில்லையா?
maʿakum
مَّعَكُمْۖ
உங்களுடன்
qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
balā
بَلَىٰ
ஏன் இல்லை
walākinnakum
وَلَٰكِنَّكُمْ
என்றாலும் நீங்கள்
fatantum
فَتَنتُمْ
அழித்துக் கொண்டீர்கள்
anfusakum
أَنفُسَكُمْ
உங்களையே
watarabbaṣtum
وَتَرَبَّصْتُمْ
இன்னும் தீமையை எதிர்பார்த்தீர்கள்
wa-ir'tabtum
وَٱرْتَبْتُمْ
இன்னும் சந்தேகித்தீர்கள்
wagharratkumu
وَغَرَّتْكُمُ
உங்களை மயக்கின
l-amāniyu
ٱلْأَمَانِىُّ
பொய்யானஆசைகள்
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
jāa
جَآءَ
வந்துவிட்டது
amru
أَمْرُ
கட்டளை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wagharrakum
وَغَرَّكُم
உங்களை மயக்கிவிட்டான்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை விட்டும்
l-gharūru
ٱلْغَرُورُ
மயக்கக் கூடியவன்
இவர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி "உலகத்தில்) நாங்கள் உங்களுடன் சேர்ந்திருக்கவில்லையா?" என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) "மெய்தான். ஆயினும், நீங்களே உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள். அன்றி, (நாங்கள் அழிந்து போவதை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வுடைய கட்டளை(யாகிய மரணம்) வரும் வரையில், உங்களுடைய பேராசைகள் உங்களை மயக்கி விட்டன! மாயக்கார (ஷைத்தா)ன் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட்டான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧௪)
Tafseer
௧௫

فَالْيَوْمَ لَا يُؤْخَذُ مِنْكُمْ فِدْيَةٌ وَّلَا مِنَ الَّذِيْنَ كَفَرُوْاۗ مَأْوٰىكُمُ النَّارُۗ هِيَ مَوْلٰىكُمْۗ وَبِئْسَ الْمَصِيْرُ ١٥

fal-yawma
فَٱلْيَوْمَ
இன்றைய தினம்
lā yu'khadhu
لَا يُؤْخَذُ
வாங்கப்படாது
minkum
مِنكُمْ
உங்களிடமும்
fid'yatun
فِدْيَةٌ
எவ்வித பரிகாரம்
walā mina alladhīna kafarū
وَلَا مِنَ ٱلَّذِينَ كَفَرُوا۟ۚ
நிராகரிப்பாளர்களிடமும்
mawākumu
مَأْوَىٰكُمُ
உங்கள் தங்குமிடம்
l-nāru
ٱلنَّارُۖ
நரகம்தான்
hiya mawlākum
هِىَ مَوْلَىٰكُمْۖ
அதுதான்/உங்களுக்கு மிக ஏற்றமானது
wabi'sa l-maṣīru
وَبِئْسَ ٱلْمَصِيرُ
மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது
ஆகவே, இன்றைய தினம் உங்களிடமிருந்தோ அல்லது (உங்களைப் போல்) நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வேதனைக்குப் பதிலாக) யாதொன்றையும் பரிகாரமாகப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் செல்லுமிடம் நரகம்தான். (நரக) நெருப்புத்தான் உங்களுக்குத் துணையாக இருக்கக்கூடியது" (என்றும் கூறப்படும்). அது தங்குமிடங்களில் எல்லாம் மகா கெட்டது. ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧௫)
Tafseer
௧௬

اَلَمْ يَأْنِ لِلَّذِيْنَ اٰمَنُوْٓا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّۙ وَلَا يَكُوْنُوْا كَالَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْۗ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ١٦

alam yani
أَلَمْ يَأْنِ
நேரம் வரவில்லையா?
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களுக்கு
an takhshaʿa
أَن تَخْشَعَ
நடுங்குவதற்கு
qulūbuhum
قُلُوبُهُمْ
அவர்களின் உள்ளங்கள்
lidhik'ri
لِذِكْرِ
நினைவு கூர்வதாலும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
wamā nazala
وَمَا نَزَلَ
இன்னும் எது/இறங்கியது
mina l-ḥaqi
مِنَ ٱلْحَقِّ
சத்தியவேதத்தினாலும்
walā yakūnū
وَلَا يَكُونُوا۟
அவர்கள் ஆகிவிட வேண்டாம்
ka-alladhīna
كَٱلَّذِينَ
அவர்களைப் போல்
ūtū l-kitāba
أُوتُوا۟ ٱلْكِتَٰبَ
வேதம் கொடுக்கப் பட்டார்கள்
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
faṭāla ʿalayhimu
فَطَالَ عَلَيْهِمُ
அவர்கள் மீது நீண்டு விட்டது
l-amadu
ٱلْأَمَدُ
காலம்
faqasat
فَقَسَتْ
ஆகவே இறுகிவிட்டன
qulūbuhum
قُلُوبُهُمْۖ
அவர்களின் உள்ளங்கள்
wakathīrun
وَكَثِيرٌ
அதிகமானவர்கள்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
fāsiqūna
فَٰسِقُونَ
பாவிகள்
நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும், அவன் இறக்கிவைத்த சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? இவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல், இவர்களும் ஆகிவிடவேண்டாம். (இவ்வாறே) அவர்கள் மீதும் ஒரு காலம் சென்று, அவர்களுடைய உள்ளங்கள் கடினமாக இருகி விட்டன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகி விட்டனர். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧௬)
Tafseer
௧௭

اِعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يُحْيِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَاۗ قَدْ بَيَّنَّا لَكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ١٧

iʿ'lamū
ٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
anna
أَنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
yuḥ'yī
يُحْىِ
உயிர்ப்பிக்கின்றான்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
baʿda mawtihā
بَعْدَ مَوْتِهَاۚ
அது இறந்த பின்னர்
qad bayyannā
قَدْ بَيَّنَّا
திட்டமாக/நாம் தெளிவுபடுத்துகின்றோம்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
laʿallakum taʿqilūna
لَعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
(மனிதர்களே!) நிச்சயமாக அல்லாஹ்தான், இறந்த பூமியை உயிர்ப்பிக்கின்றான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அறிந்துகொள்ளும் பொருட்டே, நிச்சயமாக அவன் பல உதாரணங்களை உங்களுக்குத் தெளிவாக்கி இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧௭)
Tafseer
௧௮

اِنَّ الْمُصَّدِّقِيْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِيْمٌ ١٨

inna l-muṣadiqīna
إِنَّ ٱلْمُصَّدِّقِينَ
நிச்சயமாக தர்மம் செய்த ஆண்கள்
wal-muṣadiqāti
وَٱلْمُصَّدِّقَٰتِ
இன்னும் தர்மம் செய்த பெண்கள்
wa-aqraḍū
وَأَقْرَضُوا۟
இன்னும் கடன் கொடுத்தவர்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்விற்கு
qarḍan ḥasanan
قَرْضًا حَسَنًا
அழகிய கடனாக
yuḍāʿafu lahum
يُضَٰعَفُ لَهُمْ
அவர்களுக்கு பன்மடங்காக்கப்படும்
walahum
وَلَهُمْ
இன்னும் அவர்களுக்கு
ajrun karīmun
أَجْرٌ كَرِيمٌ
கூலி/கண்ணியமான(து)
நிச்சயமாக ஆண்களிலோ, பெண்களிலோ எவர்கள் தானம் செய்து அழகான முறையில் அல்லாஹ்வுக்காக(ப் பிறருக்குப் பொருளை)க் கடனாகவும் கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு, அது இரு மடங்காக்கப்படுகின்றது. பின்னும் அவர்களுக்கு மிக்க கண்ணியமான கூலியுமுண்டு. ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧௮)
Tafseer
௧௯

وَالَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖٓ اُولٰۤىِٕكَ هُمُ الصِّدِّيْقُوْنَ ۖوَالشُّهَدَاۤءُ عِنْدَ رَبِّهِمْۗ لَهُمْ اَجْرُهُمْ وَنُوْرُهُمْۗ وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ ࣖ ١٩

wa-alladhīna āmanū
وَٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
warusulihi
وَرُسُلِهِۦٓ
இன்னும் அவனது தூதர்களையும்
ulāika humu
أُو۟لَٰٓئِكَ هُمُ
அவர்கள்தான்
l-ṣidīqūna
ٱلصِّدِّيقُونَۖ
மிக உண்மையானவர்கள்
wal-shuhadāu
وَٱلشُّهَدَآءُ
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள்
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
அவர்களின் இறைவனிடம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ajruhum
أَجْرُهُمْ
அவர்களின் கூலியும்
wanūruhum
وَنُورُهُمْۖ
( ஒளியும்இ) அவர்களின்
wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
wakadhabū
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
நமது வசனங்களை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
aṣḥābu l-jaḥīmi
أَصْحَٰبُ ٱلْجَحِيمِ
நரகவாசிகள்
எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார்களோ, அவர்கள்தாம் ஸித்தீக் எனப்படும் உண்மையாளர்கள். "ஷஹீது" எனப்படும் சன்மார்க்கப் போரில் உயிர்த்தியாகம் செய்தவர்கள் தங்கள் இறைவனிடத்தில் இருப்பார்கள். மேலும், அவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய கூலியும் உண்டு. (நேரான வழியை அறிவிக்கக் கூடிய) பிரகாசமும் உண்டு. எவர்கள் நம்முடைய வசனங்களை நிராகரித்துப் பொய்யாக்குகின்றார்களோ, அவர்கள் நரகவாசிகள்தாம். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧௯)
Tafseer
௨௦

اِعْلَمُوْٓا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِۗ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطَامًاۗ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ ۗوَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ٢٠

iʿ'lamū
ٱعْلَمُوٓا۟
அறிந்து கொள்ளுங்கள்
annamā l-ḥayatu l-dun'yā
أَنَّمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கை எல்லாம்
laʿibun
لَعِبٌ
விளையாட்டு(ம்)
walahwun
وَلَهْوٌ
வேடிக்கையும்
wazīnatun
وَزِينَةٌ
அலங்காரமும்
watafākhurun
وَتَفَاخُرٌۢ
பெருமை அடிப்பதும்
baynakum
بَيْنَكُمْ
உங்களுக்கு மத்தியில்
watakāthurun
وَتَكَاثُرٌ
அதிகத்தின் போட்டியும்தான்
fī l-amwāli
فِى ٱلْأَمْوَٰلِ
செல்வங்களிலும்
wal-awlādi
وَٱلْأَوْلَٰدِۖ
பிள்ளைகளிலும்
kamathali
كَمَثَلِ
போல்தான்
ghaythin
غَيْثٍ
ஒரு மழையை
aʿjaba
أَعْجَبَ
கவர்ந்தது
l-kufāra
ٱلْكُفَّارَ
விவசாயிகளை
nabātuhu
نَبَاتُهُۥ
அதன் விளைச்சல்
thumma
ثُمَّ
பிறகு
yahīju
يَهِيجُ
அது காய்ந்து விடுகிறது
fatarāhu
فَتَرَىٰهُ
அதை நீர் பார்க்கிறீர்
muṣ'farran
مُصْفَرًّا
மஞ்சளாக
thumma
ثُمَّ
பிறகு
yakūnu
يَكُونُ
அது ஆகிவிடுகிறது
ḥuṭāman
حُطَٰمًاۖ
குப்பையாக
wafī l-ākhirati
وَفِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
ʿadhābun
عَذَابٌ
வேதனை(யும்)
shadīdun
شَدِيدٌ
கடுமையான(து)
wamaghfiratun
وَمَغْفِرَةٌ
மன்னிப்பும்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
wariḍ'wānun
وَرِضْوَٰنٌۚ
திருப்பொருத்தமும்
wamā l-ḥayatu l-dun'yā
وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَآ
உலக வாழ்க்கை இல்லை
illā matāʿu
إِلَّا مَتَٰعُ
இன்பமே தவிர
l-ghurūri
ٱلْغُرُورِ
மயக்கக் கூடிய(து)
(மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண்பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிக்குக் களிப்பை உண்டுபண்ணிக் கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதைக் காண்கின்றான். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கின்றது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை. ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨௦)
Tafseer