سَبَّحَ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ ١
- sabbaḥa
- سَبَّحَ
- துதிக்கின்றன
- lillahi
- لِلَّهِ
- அல்லாஹ்வை
- mā fī l-samāwāti
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவை
- wal-arḍi
- وَٱلْأَرْضِۖ
- இன்னும் பூமியில்
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- l-ʿazīzu
- ٱلْعَزِيزُ
- மிகைத்தவன்
- l-ḥakīmu
- ٱلْحَكِيمُ
- மகா ஞானவான்
வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்துமே அல்லாஹ்வைப் புகழ்ந்து துதி செய்கின்றன. அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧)Tafseer
لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۚ يُحْيٖ وَيُمِيْتُۚ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ٢
- lahu mul'ku
- لَهُۥ مُلْكُ
- அவனுக்கே/ஆட்சி
- l-samāwāti wal-arḍi
- ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِۖ
- வானங்கள் இன்னும் பூமியின்
- yuḥ'yī
- يُحْىِۦ
- உயிர்கொடுக்கின்றான்
- wayumītu
- وَيُمِيتُۖ
- மரணிக்க வைக்கின்றான்
- wahuwa
- وَهُوَ
- அவன்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின் மீதும்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குடையதே! அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணிக்கச் செய்கின்றான். அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவன். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௨)Tafseer
هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ٣
- huwa
- هُوَ
- அவன்தான்
- l-awalu
- ٱلْأَوَّلُ
- முதலாமவன்
- wal-ākhiru
- وَٱلْءَاخِرُ
- இன்னும் இறுதியானவன்
- wal-ẓāhiru
- وَٱلظَّٰهِرُ
- இன்னும் வெளிப்படையானவன்
- wal-bāṭinu
- وَٱلْبَاطِنُۖ
- இன்னும் மறைந்தவன்
- wahuwa
- وَهُوَ
- இன்னும் அவன்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாவற்றையும்
- ʿalīmun
- عَلِيمٌ
- நன்கறிந்தவன்
அவனே முதலானவன்; அவனே இறுதியானவன்; அவனே வெளிப்படையானவன்; அவனே மறைவானவன்; அவனே ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௩)Tafseer
هُوَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِيْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِۚ يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاۤءِ وَمَا يَعْرُجُ فِيْهَاۗ وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌۗ ٤
- huwa
- هُوَ
- அவன்தான்
- alladhī
- ٱلَّذِى
- எத்தகையவன்
- khalaqa
- خَلَقَ
- படைத்தான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களையும்
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- பூமியையும்
- fī sittati ayyāmin
- فِى سِتَّةِ أَيَّامٍ
- ஆறு நாள்களில்
- thumma
- ثُمَّ
- பிறகு
- is'tawā
- ٱسْتَوَىٰ
- உயர்ந்து விட்டான்
- ʿalā l-ʿarshi
- عَلَى ٱلْعَرْشِۚ
- அர்ஷின் மீது
- yaʿlamu
- يَعْلَمُ
- நன்கறிவான்
- mā yaliju
- مَا يَلِجُ
- நுழைவதை(யும்)
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- wamā yakhruju
- وَمَا يَخْرُجُ
- வெளியேறுவதையும்
- min'hā
- مِنْهَا
- அதிலிருந்து
- wamā yanzilu
- وَمَا يَنزِلُ
- இறங்குவதையும்
- mina l-samāi
- مِنَ ٱلسَّمَآءِ
- வானத்திலிருந்து
- wamā yaʿruju
- وَمَا يَعْرُجُ
- ஏறுவதையும்
- fīhā
- فِيهَاۖ
- அதில்
- wahuwa
- وَهُوَ
- அவன்
- maʿakum
- مَعَكُمْ
- உங்களுடன்
- ayna mā kuntum
- أَيْنَ مَا كُنتُمْۚ
- நீங்கள்எங்குஇருந்தாலும்
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்வதை
- baṣīrun
- بَصِيرٌ
- உற்று நோக்குபவன்
அவன்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தகுந்தாற் போல்) உயர்ந்துவிட்டான். (வித்து முதலியவை) பூமியில் விதைக்கப் படுவதையும் அவை முளைத்து வெளிப்படுவதையும், வானத்தில் இருந்து இறங்குபவைகளையும், (பூமியிலிருந்து) ஏறுபவைகளையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கிருந்தபோதிலும், அவன் உங்களுடன் இருக்கின்றான். நீங்கள் செய்பவைகளையும் (அந்த) அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௪)Tafseer
لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ٥
- lahu
- لَّهُۥ
- அவனுக்கே
- mul'ku
- مُلْكُ
- ஆட்சி
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- இன்னும் பூமியின்
- wa-ilā l-lahi
- وَإِلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் பக்கமே
- tur'jaʿu
- تُرْجَعُ
- திருப்பப்படுகின்றன
- l-umūru
- ٱلْأُمُورُ
- எல்லாக் காரியங்களும்
வானங்கள் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! எல்லா விஷயங்களும் (அந்த) அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௫)Tafseer
يُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِۗ وَهُوَ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ٦
- yūliju
- يُولِجُ
- நுழைக்கின்றான்
- al-layla fī l-nahāri
- ٱلَّيْلَ فِى ٱلنَّهَارِ
- இரவை/பகலில்
- wayūliju
- وَيُولِجُ
- இன்னும் நுழைக்கின்றான்
- l-nahāra fī al-layli
- ٱلنَّهَارَ فِى ٱلَّيْلِۚ
- பகலை / இரவில்
- wahuwa
- وَهُوَ
- அவன்
- ʿalīmun
- عَلِيمٌۢ
- நன்கறிந்தவன்
- bidhāti l-ṣudūri
- بِذَاتِ ٱلصُّدُورِ
- நெஞ்சங்களில் உள்ளவற்றை
அவனே, இரவைப் பகலில் புகுத்துகின்றான்; பகலை இரவில் புகுத்துகின்றான். மனதிலுள்ள எல்லா எண்ணங்களையும் அவன் நன்கறிவான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௬)Tafseer
اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاَنْفِقُوْا مِمَّا جَعَلَكُمْ مُّسْتَخْلَفِيْنَ فِيْهِۗ فَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَاَنْفَقُوْا لَهُمْ اَجْرٌ كَبِيْرٌ ٧
- āminū
- ءَامِنُوا۟
- நம்பிக்கை கொள்ளுங்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை(யும்)
- warasūlihi
- وَرَسُولِهِۦ
- அவனது தூதரையும்
- wa-anfiqū
- وَأَنفِقُوا۟
- இன்னும் தர்மம் செய்யுங்கள்
- mimmā jaʿalakum
- مِمَّا جَعَلَكُم
- அவன் எதில் உங்களை ஆக்கினானோ
- mus'takhlafīna
- مُّسْتَخْلَفِينَ
- பிரதிநிதிகளாக
- fīhi
- فِيهِۖ
- அதில்
- fa-alladhīna
- فَٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- minkum
- مِنكُمْ
- உங்களில்
- wa-anfaqū
- وَأَنفَقُوا۟
- இன்னும் தர்மம் செய்தார்கள்
- lahum
- لَهُمْ
- அவர்களுக்கு
- ajrun
- أَجْرٌ
- கூலி உண்டு
- kabīrun
- كَبِيرٌ
- மிகப் பெரிய(து)
ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு தானம் செய்கின்றார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு. ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௭)Tafseer
وَمَا لَكُمْ لَا تُؤْمِنُوْنَ بِاللّٰهِ ۚوَالرَّسُوْلُ يَدْعُوْكُمْ لِتُؤْمِنُوْا بِرَبِّكُمْ وَقَدْ اَخَذَ مِيْثَاقَكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ ٨
- wamā lakum
- وَمَا لَكُمْ
- உங்களுக்கு என்ன
- lā tu'minūna
- لَا تُؤْمِنُونَ
- நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு
- bil-lahi
- بِٱللَّهِۙ
- அல்லாஹ்வை
- wal-rasūlu
- وَٱلرَّسُولُ
- தூதரோ
- yadʿūkum
- يَدْعُوكُمْ
- உங்களை அழைக்கின்றார்
- litu'minū
- لِتُؤْمِنُوا۟
- நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு
- birabbikum
- بِرَبِّكُمْ
- உங்கள் இறைவனை
- waqad
- وَقَدْ
- திட்டமாக
- akhadha
- أَخَذَ
- வாங்கி இருக்கின்றான்
- mīthāqakum
- مِيثَٰقَكُمْ
- உங்கள் வாக்குறுதியை
- in kuntum
- إِن كُنتُم
- நீங்கள் இருந்தால்
- mu'minīna
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளராக
(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை ஏன் நம்பிக்கை கொள்வதில்லை? உங்களைப் படைத்து காக்கும் உங்கள் இறைவனைத்தான் நீங்கள் நம்பிக்கை கொள்ளுமாறு, உங்களை நம்முடைய தூதர் அழைக்கின்றார். (இதைப்பற்றி, இறைவன்) உங்களிடம் நிச்சயமாக வாக்குறுதி பெற்றிருக்கின்றான். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (இதன் உண்மையை நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.) ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௮)Tafseer
هُوَ الَّذِيْ يُنَزِّلُ عَلٰى عَبْدِهٖٓ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ لِّيُخْرِجَكُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِۗ وَاِنَّ اللّٰهَ بِكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌ ٩
- huwa alladhī
- هُوَ ٱلَّذِى
- அவன்/எத்தகையவன்
- yunazzilu
- يُنَزِّلُ
- இறக்குகின்றான்
- ʿalā ʿabdihi
- عَلَىٰ عَبْدِهِۦٓ
- தனது அடியார் மீது
- āyātin
- ءَايَٰتٍۭ
- அத்தாட்சிகளை
- bayyinātin
- بَيِّنَٰتٍ
- தெளிவான(வை)
- liyukh'rijakum
- لِّيُخْرِجَكُم
- உங்களை வெளியேற்றுவதற்காக
- mina l-ẓulumāti
- مِّنَ ٱلظُّلُمَٰتِ
- இருள்களிலிருந்து
- ilā l-nūri
- إِلَى ٱلنُّورِۚ
- வெளிச்சத்தின் பக்கம்
- wa-inna l-laha
- وَإِنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- bikum
- بِكُمْ
- உங்கள் மீது
- laraūfun
- لَرَءُوفٌ
- மிக இரக்கமுடையவனும்
- raḥīmun
- رَّحِيمٌ
- கருணையாளனும்
உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக கிருபையுடையவனும் மிக இரக்கம் உடையவனாகவும் இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௯)Tafseer
وَمَا لَكُمْ اَلَّا تُنْفِقُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ لَا يَسْتَوِيْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَۗ اُولٰۤىِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِيْنَ اَنْفَقُوْا مِنْۢ بَعْدُ وَقَاتَلُوْاۗ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰىۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ࣖ ١٠
- wamā lakum
- وَمَا لَكُمْ
- உங்களுக்கு என்ன ஆனது?
- allā tunfiqū
- أَلَّا تُنفِقُوا۟
- நீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு
- fī sabīli
- فِى سَبِيلِ
- பாதையில்
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- walillahi
- وَلِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- mīrāthu
- مِيرَٰثُ
- சொத்துக்கள்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்கள்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- இன்னும் பூமியின்
- lā yastawī
- لَا يَسْتَوِى
- சமமாக மாட்டார்
- minkum man
- مِنكُم مَّنْ
- உங்களில்/எவரும்
- anfaqa
- أَنفَقَ
- தர்மம் செய்தார்
- min qabli
- مِن قَبْلِ
- முன்னர்
- l-fatḥi
- ٱلْفَتْحِ
- வெற்றிக்கு
- waqātala
- وَقَٰتَلَۚ
- இன்னும் போர் செய்தார்
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- அவர்கள்தான்
- aʿẓamu darajatan
- أَعْظَمُ دَرَجَةً
- மிக மகத்தான/பதவி
- mina alladhīna
- مِّنَ ٱلَّذِينَ
- எவர்களைவிட
- anfaqū
- أَنفَقُوا۟
- தர்மம் செய்தார்கள்
- min baʿdu
- مِنۢ بَعْدُ
- இதற்குப் பின்னர்
- waqātalū
- وَقَٰتَلُوا۟ۚ
- இன்னும் போர் செய்தார்கள்
- wakullan
- وَكُلًّا
- எல்லோருக்கும்
- waʿada
- وَعَدَ
- வாக்களித்துள்ளான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- l-ḥus'nā
- ٱلْحُسْنَىٰۚ
- சொர்க்கத்தை
- wal-lahu
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- bimā taʿmalūna
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்வதை
- khabīrun
- خَبِيرٌ
- ஆழ்ந்தறிபவன்
உங்களுக்கென்ன! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் செலவு செய்ய வேண்டாமா? வானங்கள், பூமியிலுள்ளவைகளின் உரிமை அல்லாஹ்வுக்குரியதுதானே! உங்களில் எவர் (மக்காவை) வெல்வதற்கு முன்னர் தன் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தாரோ, அவர் மகத்தான பதவி உடையவர். ஆகவே, அதற்குப் பின்னர், தன் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தவர் அவருக்குச் சமமாக மாட்டார். எனினும், இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையையே வாக்களித்திருக்கின்றான். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௫௭] ஸூரத்துல் ஹதீத்: ௧௦)Tafseer