Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௬௨

Qur'an Surah Al-Waqi'ah Verse 62

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰى فَلَوْلَا تَذَكَّرُوْنَ (الواقعة : ٥٦)

walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
ʿalim'tumu
عَلِمْتُمُ
you know
நீங்கள் அறிந்தீர்கள்.
l-nashata
ٱلنَّشْأَةَ
the creation
படைத்திருப்பதை
l-ūlā
ٱلْأُولَىٰ
the first
முதல் முறை
falawlā tadhakkarūna
فَلَوْلَا تَذَكَّرُونَ
so why not you take heed?
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?

Transliteration:

Wa laqad 'alimtumun nash atal oolaa falaw laa tazakkaroon (QS. al-Wāqiʿah:62)

English Sahih International:

And you have already known the first creation, so will you not remember? (QS. Al-Waqi'ah, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கின்றீர்கள். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.) (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௬௨)

Jan Trust Foundation

முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

முதல் முறை படைத்திருப்பதை (அதை செய்தவன் யார் என்பதை) நீங்கள் திட்டவட்டமாக அறிந்தீர்கள். (இதன் மூலம்) நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?