Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் வாகிஆ வசனம் ௬௧

Qur'an Surah Al-Waqi'ah Verse 61

ஸூரத்துல் வாகிஆ [௫௬]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

عَلٰٓى اَنْ نُّبَدِّلَ اَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِيْ مَا لَا تَعْلَمُوْنَ (الواقعة : ٥٦)

ʿalā an nubaddila
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ
In that We (will) change
நாங்கள் மாற்றுவதற்கு
amthālakum
أَمْثَٰلَكُمْ
your likeness[es]
உங்கள் உருவங்களை
wanunshi-akum
وَنُنشِئَكُمْ
and produce you
இன்னும் உங்களை உருவாக்கிவிடுவதற்கு
fī mā lā taʿlamūna
فِى مَا لَا تَعْلَمُونَ
in what not you know
நீங்கள் அறியாத ஒன்றில்

Transliteration:

'Alaaa an nubaddila amsaalakum wa nunshi'akum fee maa laa ta'lamoon (QS. al-Wāqiʿah:61)

English Sahih International:

In that We will change your likenesses and produce you in that [form] which you do not know. (QS. Al-Waqi'ah, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல. (ஸூரத்துல் வாகிஆ, வசனம் ௬௧)

Jan Trust Foundation

(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்கள் உருவங்களை மாற்றுவதற்கும், நீங்கள் அறியாத ஒன்றில் (-புதிய ஓர் உருவத்தில்) உங்களை உருவாக்கிவிடுவதற்கும் (நாங்கள் இயலாதவர்கள் இல்லை).