Skip to content

ஸூரா ஸூரத்துல் வாகிஆ - Page: 7

Al-Waqi'ah

(al-Wāqiʿah)

௬௧

عَلٰٓى اَنْ نُّبَدِّلَ اَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِيْ مَا لَا تَعْلَمُوْنَ ٦١

ʿalā an nubaddila
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ
நாங்கள் மாற்றுவதற்கு
amthālakum
أَمْثَٰلَكُمْ
உங்கள் உருவங்களை
wanunshi-akum
وَنُنشِئَكُمْ
இன்னும் உங்களை உருவாக்கிவிடுவதற்கு
fī mā lā taʿlamūna
فِى مَا لَا تَعْلَمُونَ
நீங்கள் அறியாத ஒன்றில்
நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬௧)
Tafseer
௬௨

وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰى فَلَوْلَا تَذَكَّرُوْنَ ٦٢

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
ʿalim'tumu
عَلِمْتُمُ
நீங்கள் அறிந்தீர்கள்.
l-nashata
ٱلنَّشْأَةَ
படைத்திருப்பதை
l-ūlā
ٱلْأُولَىٰ
முதல் முறை
falawlā tadhakkarūna
فَلَوْلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கின்றீர்கள். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.) ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬௨)
Tafseer
௬௩

اَفَرَءَيْتُمْ مَّا تَحْرُثُوْنَۗ ٦٣

afara-aytum
أَفَرَءَيْتُم
நீங்கள் அறிவியுங்கள்!
mā taḥruthūna
مَّا تَحْرُثُونَ
எதை/உழுகின்றீர்கள்
(நீங்கள் பூமியில்) பயிரிடுபவைகளைக் கவனித்தீர்களா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬௩)
Tafseer
௬௪

ءَاَنْتُمْ تَزْرَعُوْنَهٗٓ اَمْ نَحْنُ الزَّارِعُوْنَ ٦٤

a-antum tazraʿūnahu
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ
அதை நீங்கள் முளைக்க வைக்கின்றீர்களா?
am
أَمْ
அல்லது
naḥnu
نَحْنُ
நாம்தான்
l-zāriʿūna
ٱلزَّٰرِعُونَ
முளைக்க வைக்கின்றோமா?
அதனை, நீங்கள் (முளைப்பித்துப்) பயிராக்குகின்றீர்களா அல்லது நாம் பயிராக்குகின்றோமா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬௪)
Tafseer
௬௫

لَوْ نَشَاۤءُ لَجَعَلْنٰهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُوْنَۙ ٦٥

law nashāu
لَوْ نَشَآءُ
நாம் நாடினால்
lajaʿalnāhu
لَجَعَلْنَٰهُ
அதை ஆக்கிவிடுவோம்
ḥuṭāman
حُطَٰمًا
குப்பையாக
faẓaltum
فَظَلْتُمْ
நீங்கள் ஆகி இருப்பீர்கள்
tafakkahūna
تَفَكَّهُونَ
நீங்கள் ஆச்சரியப்படுகின்றவர்களாக
நாம் விரும்பினால், அதனை (விளையாத) சாவிகளாக்கி விடுவோம். அந்நேரத்தில் நீங்கள் ஆச்சரியப்பட்டு, ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬௫)
Tafseer
௬௬

اِنَّا لَمُغْرَمُوْنَۙ ٦٦

innā lamugh'ramūna
إِنَّا لَمُغْرَمُونَ
நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்
"நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்து விட்டோம், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬௬)
Tafseer
௬௭

بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ٦٧

bal naḥnu
بَلْ نَحْنُ
மாறாக/நாங்கள்
maḥrūmūna
مَحْرُومُونَ
பெரும் இழப்புக்குள்ளானவர்கள்
அன்றி, எங்களுக்கு ஒன்றுமே கிடைக்காது போயிற்று" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்). ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬௭)
Tafseer
௬௮

اَفَرَءَيْتُمُ الْمَاۤءَ الَّذِيْ تَشْرَبُوْنَۗ ٦٨

afara-aytumu
أَفَرَءَيْتُمُ
அறிவியுங்கள்!
l-māa
ٱلْمَآءَ
தண்ணீரைப் பற்றி
alladhī
ٱلَّذِى
எது
tashrabūna
تَشْرَبُونَ
குடிக்கின்றீர்கள்
நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைக் கவனித்தீர்களா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬௮)
Tafseer
௬௯

ءَاَنْتُمْ اَنْزَلْتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ ٦٩

a-antum anzaltumūhu
ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ
அதை நீங்கள் இறக்கினீர்களா?
mina l-muz'ni
مِنَ ٱلْمُزْنِ
கார்மேகத்தில் இருந்து
am naḥnu
أَمْ نَحْنُ
அல்லது/நாம்தான்
l-munzilūna
ٱلْمُنزِلُونَ
இறக்குகின்றவர்களா?
மேகத்திலிருந்து அதனை நீங்கள் பொழிய வைக்கின்றீர்களா? அல்லது நாம் பொழிய வைக்கின்றோமா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬௯)
Tafseer
௭௦

لَوْ نَشَاۤءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ ٧٠

law nashāu
لَوْ نَشَآءُ
நாம் நாடினால்
jaʿalnāhu
جَعَلْنَٰهُ
அதை ஆக்கிவிடுவோம்
ujājan
أُجَاجًا
உப்பு நீராக
falawlā tashkurūna
فَلَوْلَا تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
நாம் விரும்பினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்புநீராக ஆக்கியிருப்போம். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௭௦)
Tafseer