௫௧
ثُمَّ اِنَّكُمْ اَيُّهَا الضَّاۤ لُّوْنَ الْمُكَذِّبُوْنَۙ ٥١
- thumma
- ثُمَّ
- பிறகு
- innakum
- إِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- ayyuhā l-ḍālūna
- أَيُّهَا ٱلضَّآلُّونَ
- வழிகேடர்களே!
- l-mukadhibūna
- ٱلْمُكَذِّبُونَ
- பொய்ப்பிக்கின்ற
அதற்குப் பின்னர், (இந்நாளைப்) பொய்யாக்கி வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௧)Tafseer
௫௨
لَاٰكِلُوْنَ مِنْ شَجَرٍ مِّنْ زَقُّوْمٍۙ ٥٢
- laākilūna
- لَءَاكِلُونَ
- சாப்பிடுவீர்கள்
- min shajarin
- مِن شَجَرٍ
- மரத்தில் இருந்துதான்
- min zaqqūmin
- مِّن زَقُّومٍ
- சக்கூம்
கள்ளி மரத்தையே புசிப்பீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௨)Tafseer
௫௩
فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَۚ ٥٣
- famāliūna
- فَمَالِـُٔونَ
- நிரப்புவீர்கள்
- min'hā
- مِنْهَا
- அதில் இருந்து
- l-buṭūna
- ٱلْبُطُونَ
- வயிறுகளை
அதைக்கொண்டே உங்களுடைய வயிற்றை நிரப்புவீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௩)Tafseer
௫௪
فَشَارِبُوْنَ عَلَيْهِ مِنَ الْحَمِيْمِۚ ٥٤
- fashāribūna
- فَشَٰرِبُونَ
- குடிப்பீர்கள்
- ʿalayhi
- عَلَيْهِ
- அதற்கு மேலாக
- mina l-ḥamīmi
- مِنَ ٱلْحَمِيمِ
- கடுமையாக கொதிக்கின்ற சுடு நீரை
அதற்குப் பின்னர் மிக அதிகமாகக் கொதிக்கும் சுடுநீரைக் குடிப்பீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௪)Tafseer
௫௫
فَشَارِبُوْنَ شُرْبَ الْهِيْمِۗ ٥٥
- fashāribūna
- فَشَٰرِبُونَ
- இன்னும் குடிப்பீர்கள்
- shur'ba
- شُرْبَ
- குடிப்பதைப் போல்
- l-hīmi
- ٱلْهِيمِ
- தாகித்த ஒட்டகங்கள்
(அதுவும் அவசர அவசரமாக) தாகித்த ஒட்டகம் குடிப்பதைப் போல் நீங்கள் குடிப்பீர்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௫)Tafseer
௫௬
هٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّيْنِۗ ٥٦
- hādhā
- هَٰذَا
- இதுதான்
- nuzuluhum
- نُزُلُهُمْ
- அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்
- yawma l-dīni
- يَوْمَ ٱلدِّينِ
- கூலி நாளில்
கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்கு அளிக்கப்படும் விருந்து இதுதான். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௬)Tafseer
௫௭
نَحْنُ خَلَقْنٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُوْنَ ٥٧
- naḥnu khalaqnākum
- نَحْنُ خَلَقْنَٰكُمْ
- நாம்தான்/உங்களைப் படைத்தோம்
- falawlā tuṣaddiqūna
- فَلَوْلَا تُصَدِّقُونَ
- உண்மை என நம்பமாட்டீர்களா?
(வழிகெட்டவர்களே!) நாமே உங்களை (முதன் முறையாக) படைத்திருக்கின்றோம். (ஆகவே, மறுமுறை உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௭)Tafseer
௫௮
اَفَرَءَيْتُمْ مَّا تُمْنُوْنَۗ ٥٨
- afara-aytum
- أَفَرَءَيْتُم
- அறிவியுங்கள்!
- mā tum'nūna
- مَّا تُمْنُونَ
- நீங்கள் செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி
நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௮)Tafseer
௫௯
ءَاَنْتُمْ تَخْلُقُوْنَهٗٓ اَمْ نَحْنُ الْخَالِقُوْنَ ٥٩
- a-antum takhluqūnahu
- ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ
- அதை நீங்கள் படைக்கின்றீர்களா?
- am naḥnu
- أَمْ نَحْنُ
- அல்லது/நாம்தான்
- l-khāliqūna
- ٱلْخَٰلِقُونَ
- படைப்பவர்களா?
அதனை (சிசுவாக) நீங்கள் படைக்கின்றீர்களா அல்லது நாம் படைக்கின்றோமா? ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௫௯)Tafseer
௬௦
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَۙ ٦٠
- naḥnu
- نَحْنُ
- நாம்தான்
- qaddarnā
- قَدَّرْنَا
- நிர்ணயித்தோம்
- baynakumu
- بَيْنَكُمُ
- உங்களுக்கு மத்தியில்
- l-mawta
- ٱلْمَوْتَ
- மரணத்தை
- wamā naḥnu
- وَمَا نَحْنُ
- நாங்கள் இல்லை
- bimasbūqīna
- بِمَسْبُوقِينَ
- முடியாதவர்கள்
நாம்தான் உங்களுக்கு மரணத்தை நிர்ணயித்தோம். (உங்களுக்குப் பதிலாக) உங்களைப் போன்றவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கும், இன்னும் உங்களை நீங்கள் அறியாத ஒரு ரூபத்தில் அமைத்து விடுவதற்கும் நாம் இயலாதவர்கள் அல்ல. ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௬௦)Tafseer