௨௧
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُوْنَۗ ٢١
- walaḥmi
- وَلَحْمِ
- மாமிசங்களுடனும்
- ṭayrin
- طَيْرٍ
- பறவை
- mimmā yashtahūna
- مِّمَّا يَشْتَهُونَ
- அவர்கள் மனம் விரும்புகின்றவற்றின்
விரும்பிய பட்சிகளின் மாமிசத்தையும் (கைகளில் ஏந்தி சுற்றி வருவார்கள்). ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௧)Tafseer
௨௨
وَحُوْرٌ عِيْنٌۙ ٢٢
- waḥūrun
- وَحُورٌ
- வெண்மையான பெண்கள்
- ʿīnun
- عِينٌ
- கண்ணழகிகளான
(அங்கு இவர்களுக்கு) "ஹூருல் ஈன்" (என்னும் கண்ணழகி களான மனைவி)களும் இருப்பார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௨)Tafseer
௨௩
كَاَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُوْنِۚ ٢٣
- ka-amthāli
- كَأَمْثَٰلِ
- போல் உள்ள
- l-lu'lu-i
- ٱللُّؤْلُؤِ
- முத்துக்களை
- l-maknūni
- ٱلْمَكْنُونِ
- பாதுகாக்கப்பட்ட(து)
அவர்கள் பேணிப் பாதுகாக்கப்படும் முத்துக்களைப் போல் இருப்பார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௩)Tafseer
௨௪
جَزَاۤءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ٢٤
- jazāan bimā kānū yaʿmalūna
- جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
- கூலியாக/அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
இவைகள் அனைத்தும் இவர்கள் செய்த நன்மைகளுக்குக் கூலியாகக் கிடைக்கும். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௪)Tafseer
௨௫
لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا وَّلَا تَأْثِيْمًاۙ ٢٥
- lā yasmaʿūna
- لَا يَسْمَعُونَ
- அவர்கள் செவியுற மாட்டார்கள்
- fīhā
- فِيهَا
- அதில்
- laghwan
- لَغْوًا
- வீண் பேச்சுகளை(யும்)
- walā tathīman
- وَلَا تَأْثِيمًا
- பாவமான பேச்சுகளையும்
அங்கு இவர்கள் ஒழுங்கீனமான வார்த்தைகளையும், வீணான பேச்சுக்களையும் செவியுற மாட்டார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௫)Tafseer
௨௬
اِلَّا قِيْلًا سَلٰمًا سَلٰمًا ٢٦
- illā qīlan
- إِلَّا قِيلًا
- பேச்சைத் தவிர
- salāman salāman
- سَلَٰمًا سَلَٰمًا
- ஸலாம் ஸலாம்
ஆயினும், ஸலாம்! ஸலாம்! (சாந்தியும், சமாதானமும்) என்ற சப்தத்தையே செவியுறுவார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௬)Tafseer
௨௭
وَاَصْحٰبُ الْيَمِينِ ەۙ مَآ اَصْحٰبُ الْيَمِيْنِۗ ٢٧
- wa-aṣḥābu l-yamīni
- وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ
- வலது பக்கம் உடையவர்கள்!
- mā aṣḥābu l-yamīni
- مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ
- வலது பக்கம் உடையவர்கள் யார்
வலப்பக்கத்தில் உள்ளவர்களின் பாக்கியம்தான் என்ன! வலப்பக்கத்தில் இருக்கும் அவர்கள், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௭)Tafseer
௨௮
فِيْ سِدْرٍ مَّخْضُوْدٍۙ ٢٨
- fī sid'rin
- فِى سِدْرٍ
- மரங்களின் அருகிலும்
- makhḍūdin
- مَّخْضُودٍ
- முட்கள் நீக்கப்பட்ட இலந்தை
முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௮)Tafseer
௨௯
وَّطَلْحٍ مَّنْضُوْدٍۙ ٢٩
- waṭalḥin
- وَطَلْحٍ
- வாழை மரங்களுக்கு
- manḍūdin
- مَّنضُودٍ
- குலைகுலையாய் தொங்குகின்ற
(நுனி முதல்) அடி வரையில் குலை குலைகளாகத் தொங்கும் (பூவில்லா) வாழை மரத்தின் கீழும், ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௨௯)Tafseer
௩௦
وَّظِلٍّ مَّمْدُوْدٍۙ ٣٠
- waẓillin
- وَظِلٍّ
- நிழல்களிலும்
- mamdūdin
- مَّمْدُودٍ
- நீங்காத
அடி சாயாத நிழலிலும் இருப்பார்கள். ([௫௬] ஸூரத்துல் வாகிஆ: ௩௦)Tafseer