Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௩௭

Qur'an Surah Al-Qamar Verse 37

ஸூரத்துல் கமர் [௫௪]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَيْفِهٖ فَطَمَسْنَآ اَعْيُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِيْ وَنُذُرِ (القمر : ٥٤)

walaqad rāwadūhu
وَلَقَدْ رَٰوَدُوهُ
And certainly they demanded from him
திட்டவட்டமாக அவரிடம் அடம்பிடித்தனர்
ʿan ḍayfihi
عَن ضَيْفِهِۦ
they demanded from him his guests
அவரது விருந்தினர்களை வேண்டி
faṭamasnā
فَطَمَسْنَآ
so We blinded
சமமாக்கி விட்டோம்
aʿyunahum
أَعْيُنَهُمْ
their eyes
அவர்களின் கண்களை
fadhūqū
فَذُوقُوا۟
"So taste
ஆகவே சுவையுங்கள்
ʿadhābī
عَذَابِى
My punishment
என் தண்டனையையும்
wanudhuri
وَنُذُرِ
and My warnings"
என் எச்சரிக்கையையும்

Transliteration:

Wa laqad raawadoohu 'andaifee fatamasnaaa a'yunahum fazooqoo 'azaabee wa nuzur (QS. al-Q̈amar:37)

English Sahih International:

And they had demanded from him his guests, but We obliterated their eyes, [saying], "Taste My punishment and warning." (QS. Al-Qamar, Ayah ௩௭)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத் திற்காக) மயக்கி (அடித்து)க் கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டு, நம்முடைய வேதனையையும், எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள் என்று கூறினோம். (ஸூரத்துல் கமர், வசனம் ௩௭)

Jan Trust Foundation

அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள்; ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். “என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்” (என்றும் கூறினோம்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

திட்டவட்டமாக அவர்கள் அவரிடம் அவரது விருந்தினர்களை வேண்டி (விருந்தினர்களிடம் தங்கள் ஆசையை தனித்துக் கொள்ள) அடம்பிடித்தனர். நாம் அவர்களின் கண்களை (அழித்து முகத்தோடு முகமாக) சமமாக்கி விட்டோம். ஆகவே, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்.