குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கமர் வசனம் ௩
Qur'an Surah Al-Qamar Verse 3
ஸூரத்துல் கமர் [௫௪]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذَّبُوْا وَاتَّبَعُوْٓا اَهْوَاۤءَهُمْ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ (القمر : ٥٤)
- wakadhabū
- وَكَذَّبُوا۟
- And they denied
- இன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர்
- wa-ittabaʿū
- وَٱتَّبَعُوٓا۟
- and followed
- இன்னும் பின்பற்றினார்கள்
- ahwāahum
- أَهْوَآءَهُمْۚ
- their desires
- தங்கள் மன இச்சைகளை
- wakullu
- وَكُلُّ
- but (for) every
- எல்லா
- amrin
- أَمْرٍ
- matter
- காரியங்களும்
- mus'taqirrun
- مُّسْتَقِرٌّ
- (will be a) settlement
- நிலையாகத் தங்கக் கூடியதுதான்
Transliteration:
Wa kazzaboo wattaba'ooo ahwaaa'ahum; wa kullu amrim mustaqirr(QS. al-Q̈amar:3)
English Sahih International:
And they denied and followed their inclinations. But for every matter is a [time of] settlement. (QS. Al-Qamar, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
அன்றி, அதனை பொய்யாக்கி தங்களது சரீர இச்சைகளையே பின்பற்றுகின்றனர். (அவர்கள் எதனை புறக்கணித்தாலும் வர வேண்டிய) ஒவ்வொரு விஷயமும் (அதனதன் நேரத்தில்) உறுதியாகி விடும். (ஸூரத்துல் கமர், வசனம் ௩)
Jan Trust Foundation
அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர்; தங்கள் மன இச்சைகளை அவர்கள் பின்பற்றினார்கள். எல்லாக் காரியங்களும் (அவற்றுக்குரிய இடத்தில்) நிலையாகத் தங்கக் கூடியதுதான். (நன்மை, நல்லவர்களை சொர்க்கத்தில் தங்க வைக்கும். தீமை, பாவிகளை நரகத்தில் தங்க வைக்கும்.)