Skip to content

ஸூரா ஸூரத்துல் கமர் - Page: 5

Al-Qamar

(al-Q̈amar)

௪௧

وَلَقَدْ جَاۤءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُۚ ٤١

walaqad jāa
وَلَقَدْ جَآءَ
திட்டவட்டமாக/வந்தன
āla fir'ʿawna
ءَالَ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு
l-nudhuru
ٱلنُّذُرُ
எச்சரிக்கை
நிச்சயமாக, ஃபிர்அவ்னுடைய மக்களிடம் பல எச்சரிக்கைகள் வந்தன. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௪௧)
Tafseer
௪௨

كَذَّبُوْا بِاٰيٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِيْزٍ مُّقْتَدِرٍ ٤٢

kadhabū
كَذَّبُوا۟
அவர்கள் பொய்ப்பித்தனர்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நமது அத்தாட்சிகளை
kullihā fa-akhadhnāhum
كُلِّهَا فَأَخَذْنَٰهُمْ
எல்லாம்/ஆகவே அவர்களை தண்டித்தோம்
akhdha
أَخْذَ
தண்டனையால்
ʿazīzin
عَزِيزٍ
மிக்க மிகைத்தவன்
muq'tadirin
مُّقْتَدِرٍ
மகா வல்லமை உடையவனின்
நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கிக் கொண்டே வந்தார்கள். ஆகவே, மிக்க சக்திவாய்ந்த பலசாலி பிடிப்பதைப் போல் நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௪௨)
Tafseer
௪௩

اَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ اُولٰۤىِٕكُمْ اَمْ لَكُمْ بَرَاۤءَةٌ فِى الزُّبُرِۚ ٤٣

akuffārukum khayrun
أَكُفَّارُكُمْ خَيْرٌ
உங்களுடைய நிராகரிப்பாளர்கள் சிறந்தவர்களா?
min ulāikum
مِّنْ أُو۟لَٰٓئِكُمْ
அவர்களை விட
am lakum
أَمْ لَكُم
அவர்கள் உங்களுக்கு இருக்கிறதா?
barāatun
بَرَآءَةٌ
விடுதலை பத்திரம்
fī l-zuburi
فِى ٱلزُّبُرِ
வேதங்களில்
(மக்காவாசிகளே!) உங்களிலுள்ள நிராகரிப்பவர்கள் (அழிந்து போன) இவர்களைவிட மேலானவர்களா? அல்லது, (உங்களைத் தண்டிக்கப்படாது என்பதற்காக) உங்களுக்கு (ஏதேனும்) விடுதலைச் சீட்டு உண்டா? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௪௩)
Tafseer
௪௪

اَمْ يَقُوْلُوْنَ نَحْنُ جَمِيْعٌ مُّنْتَصِرٌ ٤٤

am yaqūlūna
أَمْ يَقُولُونَ
அல்லது கூறுகிறார்களா?
naḥnu
نَحْنُ
நாங்கள் ஆவோம்
jamīʿun
جَمِيعٌ
கூட்டம்
muntaṣirun
مُّنتَصِرٌ
பழிதீர்த்துக் கொள்கின்ற
அல்லது, (நபியே!) நாங்கள் பெருங்கூட்டத்தினர் என்றும், நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளக் கூடியவர்கள். (எங்களுக்கு யாதொரு பயமுமில்லை;) என்றும் இவர்கள் கூறுகின்றனரா? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௪௪)
Tafseer
௪௫

سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ ٤٥

sayuh'zamu
سَيُهْزَمُ
விரைவில் தோற்கடிக் கப்படுவார்கள்
l-jamʿu
ٱلْجَمْعُ
இந்த கூட்டங்கள்
wayuwallūna
وَيُوَلُّونَ
இன்னும் காட்டுவார்கள்
l-dubura
ٱلدُّبُرَ
புறமுதுகு
அதிசீக்கிரத்தில் இவர்களுடைய கூட்டம் சிதறடிக்கப்பட்டு, (இவர்கள்) புறங்காட்டிச் செல்வார்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௪௫)
Tafseer
௪௬

بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰى وَاَمَرُّ ٤٦

bali
بَلِ
மாறாக
l-sāʿatu
ٱلسَّاعَةُ
மறுமைதான்
mawʿiduhum
مَوْعِدُهُمْ
வாக்களிக்கப்பட்ட நேரமாகும் இவர்களின்
wal-sāʿatu
وَٱلسَّاعَةُ
மறுமை
adhā
أَدْهَىٰ
மிக பயங்கரமானதும்
wa-amarru
وَأَمَرُّ
மிக கசப்பானதாகும்
அன்றி, மறுமை நாள்தான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தவணை. அந்த மறுமை நாள் மிக்க திடுக்கமானதாகவும், மிக்க கசப்பாகவும் இருக்கும். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௪௬)
Tafseer
௪௭

اِنَّ الْمُجْرِمِيْنَ فِيْ ضَلٰلٍ وَّسُعُرٍۘ ٤٧

inna
إِنَّ
நிச்சயமாக
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகள்
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டிலும்
wasuʿurin
وَسُعُرٍ
மிகப் பெரிய சிரமத்திலும்
நிச்சயமாகக் குற்றவாளிகள் (இம்மையில்) வழிகேட்டிலும் (மறுமையில்) நரகத்திலும்தான் இருப்பார்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௪௭)
Tafseer
௪௮

يَوْمَ يُسْحَبُوْنَ فِى النَّارِ عَلٰى وُجُوْهِهِمْۗ ذُوْقُوْا مَسَّ سَقَرَ ٤٨

yawma
يَوْمَ
நாளில்
yus'ḥabūna
يُسْحَبُونَ
இழுக்கப்படுவார்கள்
fī l-nāri
فِى ٱلنَّارِ
நரகத்தில்
ʿalā wujūhihim
عَلَىٰ وُجُوهِهِمْ
அவர்களின் முகங்கள் மீது
dhūqū
ذُوقُوا۟
சுவையுங்கள்!
massa
مَسَّ
கடுமையை
saqara
سَقَرَ
சகர் நரகத்தின்
இவர்கள் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துச் செல்லும் நாளில் இவர்களை நோக்கி "(உங்களை) நரக நெருப்பு பொசுக்குவதைச் சுவைத்துப் பாருங்கள்" என்று கூறப்படும். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௪௮)
Tafseer
௪௯

اِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ ٤٩

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kulla shayin
كُلَّ شَىْءٍ
எல்லாவற்றையும்
khalaqnāhu
خَلَقْنَٰهُ
அவற்றைப் படைத்தோம்
biqadarin
بِقَدَرٍ
ஓர் அளவில்
நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான திட்டப்படியே படைத்திருக்கின்றோம். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௪௯)
Tafseer
௫௦

وَمَآ اَمْرُنَآ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ ۢبِالْبَصَرِ ٥٠

wamā amrunā
وَمَآ أَمْرُنَآ
நமது கட்டளை இல்லை
illā wāḥidatun
إِلَّا وَٰحِدَةٌ
ஒன்றைத் தவிர
kalamḥin
كَلَمْحٍۭ
சிமிட்டுவதைப் போல்
bil-baṣari
بِٱلْبَصَرِ
கண்
(யாதொரு பொருளையும் நாம் படைக்க நாடினால்) நம்முடைய கட்டளை(யெல்லாம்) கண் சிமிட்டுவதைப் போன்ற ஒன்றுதான். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௫௦)
Tafseer