Skip to content

ஸூரா ஸூரத்துல் கமர் - Page: 4

Al-Qamar

(al-Q̈amar)

௩௧

اِنَّآ اَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِيْمِ الْمُحْتَظِرِ ٣١

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
arsalnā
أَرْسَلْنَا
அனுப்பினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ṣayḥatan
صَيْحَةً
ஒரு சப்தத்தை
wāḥidatan
وَٰحِدَةً
ஒரே
fakānū
فَكَانُوا۟
அவர்கள் ஆகிவிட்டனர்
kahashīmi
كَهَشِيمِ
தீணிகளைப் போல்
l-muḥ'taẓiri
ٱلْمُحْتَظِرِ
தொழுவத்தின்
நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு (இடி முழக்கச்) சப்தத்தைத்தான் அனுப்பி வைத்தோம். அதனால், பிடுங்கி எறியப்பட்ட வேலி(க்கூளங்)களைப் போல் அவர்கள் ஆகி விட்டார்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௩௧)
Tafseer
௩௨

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ٣٢

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
yassarnā
يَسَّرْنَا
நாம் எளிதாக்கினோம்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
lildhik'ri
لِلذِّكْرِ
நல்லறிவு பெறுவதற்காக
fahal min muddakirin
فَهَلْ مِن مُّدَّكِرٍ
நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறுவதற்காக இந்தக் குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கின்றோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௩௨)
Tafseer
௩௩

كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ ۢبِالنُّذُرِ ٣٣

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
qawmu
قَوْمُ
மக்களும்
lūṭin
لُوطٍۭ
லூத்துடைய
bil-nudhuri
بِٱلنُّذُرِ
எச்சரிக்கையை
லூத்துடைய மக்களும் நம்முடைய எச்சரிக்கையைப் பொய்யாக்கினார்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௩௩)
Tafseer
௩௪

اِنَّآ اَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا اِلَّآ اٰلَ لُوْطٍ ۗنَجَّيْنٰهُمْ بِسَحَرٍۙ ٣٤

innā
إِنَّآ
நிச்சயமாக
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
ḥāṣiban
حَاصِبًا
கல் மழையை
illā āla lūṭin
إِلَّآ ءَالَ لُوطٍۖ
லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர
najjaynāhum
نَّجَّيْنَٰهُم
அவர்களைப் பாதுகாத்தோம்
bisaḥarin
بِسَحَرٍ
அதிகாலையில்
லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது நாம் கல்மாரி பொழியச் செய்தோம். விடியற்காலை நேரத்தில் நாம் அவ(ருடைய குடும்பத்தா)ர்களை பாதுகாத்துக் கொண்டோம். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௩௪)
Tafseer
௩௫

نِّعْمَةً مِّنْ عِنْدِنَاۗ كَذٰلِكَ نَجْزِيْ مَنْ شَكَرَ ٣٥

niʿ'matan
نِّعْمَةً
அருட்கொடையாக
min ʿindinā
مِّنْ عِندِنَاۚ
நம்மிடமிருந்து
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
najzī
نَجْزِى
நாம் கூலி கொடுப்போம்
man shakara
مَن شَكَرَ
நன்றி செலுத்துபவர்களுக்கு
இது நம்முடைய அருளாகும். இவ்வாறே நன்றி செலுத்து பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௩௫)
Tafseer
௩௬

وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ ٣٦

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
andharahum
أَنذَرَهُم
அவர் அவர்களுக்கு எச்சரித்தார்
baṭshatanā
بَطْشَتَنَا
நமது தண்டனையை
fatamāraw
فَتَمَارَوْا۟
அவர்கள் சந்தேகித்தனர்
bil-nudhuri
بِٱلنُّذُرِ
எச்சரிக்கையை
(அவர்களை) நாம் பிடித்துக் கொள்வோம் என்று நிச்சயமாக அவர், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தார். எனினும், அந்த எச்சரிக்கையைப் பற்றி அவர்கள் தர்க்கிக்க ஆரம்பித்தார்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௩௬)
Tafseer
௩௭

وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَيْفِهٖ فَطَمَسْنَآ اَعْيُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِيْ وَنُذُرِ ٣٧

walaqad rāwadūhu
وَلَقَدْ رَٰوَدُوهُ
திட்டவட்டமாக அவரிடம் அடம்பிடித்தனர்
ʿan ḍayfihi
عَن ضَيْفِهِۦ
அவரது விருந்தினர்களை வேண்டி
faṭamasnā
فَطَمَسْنَآ
சமமாக்கி விட்டோம்
aʿyunahum
أَعْيُنَهُمْ
அவர்களின் கண்களை
fadhūqū
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
ʿadhābī
عَذَابِى
என் தண்டனையையும்
wanudhuri
وَنُذُرِ
என் எச்சரிக்கையையும்
அன்றி, அவருடைய விருந்தாளியையும் (கெட்ட காரியத் திற்காக) மயக்கி (அடித்து)க் கொண்டு போகப் பார்த்தார்கள். ஆகவே, அவர்களுடைய கண்களை நாம் துடைத்து(க் குருடாக்கி) விட்டு, நம்முடைய வேதனையையும், எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள் என்று கூறினோம். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௩௭)
Tafseer
௩௮

وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّۚ ٣٨

walaqad ṣabbaḥahum
وَلَقَدْ صَبَّحَهُم
திட்டமாக காலையில் அவர்களை வந்தடைந்தது
buk'ratan
بُكْرَةً
அதிகாலை சூரியன் விடிவதற்கு முன்
ʿadhābun
عَذَابٌ
வேதனை
mus'taqirrun
مُّسْتَقِرٌّ
நிலைத்திருக்கக்கூடிய
ஆகவே, அதிகாலையில் நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௩௮)
Tafseer
௩௯

فَذُوْقُوْا عَذَابِيْ وَنُذُرِ ٣٩

fadhūqū
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
ʿadhābī
عَذَابِى
என் வேதனையையும்
wanudhuri
وَنُذُرِ
என் எச்சரிக்கையையும்
நம்முடைய வேதனையையும், நம்முடைய அச்ச மூட்டலையும் நீங்கள் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்). ([௫௪] ஸூரத்துல் கமர்: ௩௯)
Tafseer
௪௦

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ࣖ ٤٠

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
yassarnā
يَسَّرْنَا
நாம் எளிதாக்கினோம்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
lildhik'ri
لِلذِّكْرِ
நல்லறிவு பெறுவதற்காக
fahal min muddakirin
فَهَلْ مِن مُّدَّكِرٍ
நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனை, நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்திருக்கின்றோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௪௦)
Tafseer