Skip to content

ஸூரா ஸூரத்துல் கமர் - Page: 3

Al-Qamar

(al-Q̈amar)

௨௧

فَكَيْفَ كَانَ عَذَابِيْ وَنُذُرِ ٢١

fakayfa
فَكَيْفَ
எப்படி?
kāna
كَانَ
இருந்தன
ʿadhābī
عَذَابِى
எனது வேதனை(யும்)
wanudhuri
وَنُذُرِ
எனது எச்சரிக்கையும்
நம்முடைய வேதனையும், அச்சமூட்டுதலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨௧)
Tafseer
௨௨

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ࣖ ٢٢

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
yassarnā
يَسَّرْنَا
நாம் எளிதாக்கினோம்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
lildhik'ri
لِلذِّكْرِ
நல்லறிவு பெறுவதற்காக
fahal min muddakirin
فَهَلْ مِن مُّدَّكِرٍ
நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
(மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨௨)
Tafseer
௨௩

كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ ٢٣

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
thamūdu
ثَمُودُ
ஸமூது சமுதாயம்
bil-nudhuri
بِٱلنُّذُرِ
எச்சரிக்கையை
(இவ்வாறே) ஸமூது என்னும் மக்களும், தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை (செய்த ஸாலிஹ் நபி)யைப் பொய்யாக்கினர். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨௩)
Tafseer
௨௪

فَقَالُوْٓا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗٓ ۙاِنَّآ اِذًا لَّفِيْ ضَلٰلٍ وَّسُعُرٍ ٢٤

faqālū
فَقَالُوٓا۟
கூறினர்
abasharan
أَبَشَرًا
ஒரு மனிதரையா
minnā
مِّنَّا
எங்களில் இருந்து
wāḥidan
وَٰحِدًا
ஒருவராக
nattabiʿuhu
نَّتَّبِعُهُۥٓ
நாங்கள் அவரைப் பின்பற்றுவோம்!
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
idhan
إِذًا
அப்படி என்றால்
lafī ḍalālin
لَّفِى ضَلَٰلٍ
வழிகேட்டிலும் ஆகிவிடுவோம்
wasuʿurin
وَسُعُرٍ
சிரமத்திலும்
(பொய்யாக்கியதுடன்) "நம்மிலுள்ள ஒரு மனிதனையா நாம் பின்பற்றுவது? பின்பற்றினால், நிச்சயமாக நாம் வழிகேட்டில் சென்று கஷ்டத்திற்குள்ளாகி விடுவோம்" என்று கூறினார்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨௪)
Tafseer
௨௫

ءَاُلْقِيَ الذِّكْرُ عَلَيْهِ مِنْۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ ٢٥

a-ul'qiya
أَءُلْقِىَ
இறக்கப்பட்டதா?
l-dhik'ru
ٱلذِّكْرُ
இறைவேதம்
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு மட்டும்
min bayninā
مِنۢ بَيْنِنَا
எங்களுக்கு மத்தியில்
bal
بَلْ
இல்லை
huwa
هُوَ
அவர்
kadhābun
كَذَّابٌ
பெரும் பொய்யர்
ashirun
أَشِرٌ
பெருமையுடைய(வர்)
அன்றி "நமக்குள் (நம்மையன்றி) இவர் மீதுதானா வேதம் இறக்கப்பட்டது? அன்று! இவர் பெரும் பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர்" என்றனர். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨௫)
Tafseer
௨௬

سَيَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ ٢٦

sayaʿlamūna
سَيَعْلَمُونَ
விரைவில் அறிவார்கள்
ghadan
غَدًا
நாளை
mani l-kadhābu
مَّنِ ٱلْكَذَّابُ
பெரும் பொய்யர் யார்
l-ashiru
ٱلْأَشِرُ
பெருமையுடைய(வர்)
பொய் சொல்லும் இறுமாப்புக் கொண்டவர் யாரென்பதை, வெகுவிரைவில் நாளைய தினமே அறிந்துகொள்வார்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨௬)
Tafseer
௨௭

اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْۖ ٢٧

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
mur'silū
مُرْسِلُوا۟
அனுப்புவோம்
l-nāqati
ٱلنَّاقَةِ
பெண் ஒட்டகத்தை
fit'natan
فِتْنَةً
சோதனையாக
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
fa-ir'taqib'hum
فَٱرْتَقِبْهُمْ
அவர்களிடம் நீர் எதிர்பார்த்திருப்பீராக!
wa-iṣ'ṭabir
وَٱصْطَبِرْ
இன்னும் பொறுமை காப்பீராக!
(ஆகவே,) அவர்களைச் சோதிப்பதற்காக, மெய்யாகவே ஒரு பெண் ஒட்டகத்தை நாம் அனுப்பி வைப்போம். ஆகவே, (ஸாலிஹ் நபியே!) நீங்கள் பொறுமையாயிருந்து அவர்களைக் கவனித்து வாருங்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨௭)
Tafseer
௨௮

وَنَبِّئْهُمْ اَنَّ الْمَاۤءَ قِسْمَةٌ ۢ بَيْنَهُمْۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ ٢٨

wanabbi'hum
وَنَبِّئْهُمْ
அவர்களுக்கு அறிவிப்பீராக
anna l-māa
أَنَّ ٱلْمَآءَ
நிச்சயமாக தண்ணீர்
qis'matun
قِسْمَةٌۢ
பங்காகும்
baynahum
بَيْنَهُمْۖ
அவர்களுக்கு மத்தியில்
kullu shir'bin
كُلُّ شِرْبٍ
எல்லா நேரங்களிலும் தண்ணீர் குடிக்கப்படுகின்ற
muḥ'taḍarun
مُّحْتَضَرٌ
ஆஜராக வேண்டும்
(அவ்வூரில் உள்ள ஊற்றின்) குடிநீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் நிச்சயமாகப் பங்கிடப்பட்டுவிட்டது. ஒவ்வொருவரும் தன் பங்கிற்குத் தகுந்தாற்போல் குடிப்பதற்கு வரலாம் என்றும், அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள் (என்றும் நாம் கூறினோம்). ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨௮)
Tafseer
௨௯

فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰى فَعَقَرَ ٢٩

fanādaw
فَنَادَوْا۟
அவர்கள் அழைத்தனர்
ṣāḥibahum
صَاحِبَهُمْ
தங்கள் தோழரை
fataʿāṭā
فَتَعَاطَىٰ
அவன் பிடித்தான்
faʿaqara
فَعَقَرَ
இன்னும் அறுத்தான்
எனினும், அவர்கள் (கத்தார் என்னும்) தங்களுடைய நண்பனை அழைத்தனர். அவன் அதனை வெட்டி, அதன் கால் நரம்புகளைத் தறித்துவிட்டான். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨௯)
Tafseer
௩௦

فَكَيْفَ كَانَ عَذَابِيْ وَنُذُرِ ٣٠

fakayfa
فَكَيْفَ
எப்படி?
kāna
كَانَ
இருந்தன
ʿadhābī
عَذَابِى
எனது வேதனையும்
wanudhuri
وَنُذُرِ
எனது எச்சரிக்கையும்
ஆகவே, நம்முடைய வேதனையும், நம்முடைய எச்சரிக்கையும் எவ்வாறாயிற்று (என்பதை இவர்கள் கவனிப் பார்களா)? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௩௦)
Tafseer