௧௧
فَفَتَحْنَآ اَبْوَابَ السَّمَاۤءِ بِمَاۤءٍ مُّنْهَمِرٍۖ ١١
- fafataḥnā
- فَفَتَحْنَآ
- ஆகவே, நாம் திறந்து விட்டோம்
- abwāba
- أَبْوَٰبَ
- வாசல்களை
- l-samāi
- ٱلسَّمَآءِ
- மேகத்தின்
- bimāin
- بِمَآءٍ
- மழையைக் கொண்டு
- mun'hamirin
- مُّنْهَمِرٍ
- அடை
ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்துவிட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௧)Tafseer
௧௨
وَّفَجَّرْنَا الْاَرْضَ عُيُوْنًا فَالْتَقَى الْمَاۤءُ عَلٰٓى اَمْرٍ قَدْ قُدِرَ ۚ ١٢
- wafajjarnā
- وَفَجَّرْنَا
- இன்னும் பீறிட்டு ஓடச்செய்தோம்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியை
- ʿuyūnan
- عُيُونًا
- ஊற்றுக் கண்களால்
- fal-taqā
- فَٱلْتَقَى
- சந்தித்தன
- l-māu
- ٱلْمَآءُ
- தண்ணீர்
- ʿalā amrin
- عَلَىٰٓ أَمْرٍ
- ஒரு காரியத்தின் மீது
- qad qudira
- قَدْ قُدِرَ
- திட்டமாகநிர்ணயிக்கப்பட்டது
அன்றி, பூமியின் ஊற்றுக்கண்களையும் (பீறிட்டுப்) பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத் திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௨)Tafseer
௧௩
وَحَمَلْنٰهُ عَلٰى ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍۙ ١٣
- waḥamalnāhu
- وَحَمَلْنَٰهُ
- அவரை பயணிக்க வைத்தோம்
- ʿalā dhāti
- عَلَىٰ ذَاتِ
- மீது/உடைய (கப்பல்)
- alwāḥin
- أَلْوَٰحٍ
- பலகைகள்
- wadusurin
- وَدُسُرٍ
- இன்னும் ஆணிகள்
நாம் அவரை(யும், அவரை நம்பிக்கை கொண்டவர்களையும்) பலகையினாலும், ஆணியினாலும் செய்யப்பட்ட கப்பலின் மீது சுமந்து கொண்டோம். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௩)Tafseer
௧௪
تَجْرِيْ بِاَعْيُنِنَاۚ جَزَاۤءً لِّمَنْ كَانَ كُفِرَ ١٤
- tajrī
- تَجْرِى
- அது செல்கிறது
- bi-aʿyuninā
- بِأَعْيُنِنَا
- நமது கண்களுக்கு முன்பாக
- jazāan
- جَزَآءً
- கூலி கொடுப்பதற்காக
- liman kāna kufira
- لِّمَن كَانَ كُفِرَ
- நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு
அது நம் கண்களுக்கு முன்பாகவே (பிரளயத்தில் மிதந்து) சென்றது. (மற்றவர்களோ மூழ்கி மாண்டனர்.) எவரை இவர்கள் (மதிக்காது) நிராகரித்தனரோ, அவருக்காக இவ்வாறு கூலி கொடுக்கப்பட்டது. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௪)Tafseer
௧௫
وَلَقَدْ تَّرَكْنٰهَآ اٰيَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ١٥
- walaqad
- وَلَقَد
- திட்டவட்டமாக
- taraknāhā
- تَّرَكْنَٰهَآ
- அதை விட்டுவைத்தோம்
- āyatan
- ءَايَةً
- ஓர் அத்தாட்சியாக
- fahal min muddakirin
- فَهَلْ مِن مُّدَّكِرٍ
- நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
நிச்சயமாக நாம் இதனை (பிற்காலத்தவருக்கு) ஒரு படிப்பினையாகச் செய்துவிட்டோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறக்கூடியவர் உண்டா? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௫)Tafseer
௧௬
فَكَيْفَ كَانَ عَذَابِيْ وَنُذُرِ ١٦
- fakayfa
- فَكَيْفَ
- எப்படி?
- kāna
- كَانَ
- இருந்தன
- ʿadhābī
- عَذَابِى
- எனது வேதனையும்
- wanudhuri
- وَنُذُرِ
- எனது எச்சரிக்கையும்
நம்முடைய வேதனையும், அச்சமூட்டி அறிவித்தலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௬)Tafseer
௧௭
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ ١٧
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- yassarnā
- يَسَّرْنَا
- நாம் எளிதாக்கினோம்
- l-qur'āna
- ٱلْقُرْءَانَ
- இந்த குர்ஆனை
- lildhik'ri
- لِلذِّكْرِ
- நல்லறிவு பெறுவதற்காக
- fahal min muddakirin
- فَهَلْ مِن مُّدَّكِرٍ
- நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
(மனிதர்கள்) நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௭)Tafseer
௧௮
كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِيْ وَنُذُرِ ١٨
- kadhabat
- كَذَّبَتْ
- பொய்ப்பித்தது
- ʿādun
- عَادٌ
- ஆது சமுதாயம்
- fakayfa
- فَكَيْفَ
- எப்படி?
- kāna
- كَانَ
- இருந்தன
- ʿadhābī
- عَذَابِى
- எனது வேதனை(யும்)
- wanudhuri
- وَنُذُرِ
- எனது எச்சரிக்கையும்
ஆது என்னும் மக்களும் (இவ்வாறே நம்முடைய தூதரைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். எனினும், (அவர்களுக்கு ஏற்பட்ட) நம்முடைய வேதனையும், நம்முடைய அச்சமூட்டுதலும் எவ்வாறாயிற்று (என்பதைக் கவனிப்பார்களா)? ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௮)Tafseer
௧௯
اِنَّآ اَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِيْ يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّۙ ١٩
- innā
- إِنَّآ
- நிச்சயமாக
- arsalnā
- أَرْسَلْنَا
- நாம் அனுப்பினோம்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- rīḥan
- رِيحًا
- காற்றை
- ṣarṣaran
- صَرْصَرًا
- குளிர்ந்த சூறாவளி
- fī yawmi
- فِى يَوْمِ
- நாளில்
- naḥsin
- نَحْسٍ
- ஒரு தீமையுடைய
- mus'tamirrin
- مُّسْتَمِرٍّ
- நிலையான
நிச்சயமாக நாம் அவர்கள் மீது (என்றும்) நிலையான துர்ப் பாக்கியமுடைய ஒரு நாளில் மிக்க கடினமான புயல் காற்றை அனுப்பி வைத்தோம். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௯)Tafseer
௨௦
تَنْزِعُ النَّاسَۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ ٢٠
- tanziʿu
- تَنزِعُ
- அது கழட்டி எரிந்தது
- l-nāsa
- ٱلنَّاسَ
- மக்களை
- ka-annahum
- كَأَنَّهُمْ
- போல்/அவர்கள் ஆகிவிட்டார்கள்
- aʿjāzu
- أَعْجَازُ
- பின் பகுதிகளை
- nakhlin
- نَخْلٍ
- பேரீட்ச மரத்தின்
- munqaʿirin
- مُّنقَعِرٍ
- வேரோடு சாய்ந்த
அது வேரற்ற பேரீச்ச மரங்களைப்போல், மனிதர்களைக் களைந்து (எறிந்து) விட்டது. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨௦)Tafseer