Skip to content

ஸூரா ஸூரத்துல் கமர் - Word by Word

Al-Qamar

(al-Q̈amar)

bismillaahirrahmaanirrahiim

اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ ١

iq'tarabati
ٱقْتَرَبَتِ
நெருங்கிவிட்டது
l-sāʿatu
ٱلسَّاعَةُ
மறுமை
wa-inshaqqa
وَٱنشَقَّ
இன்னும் பிளந்து விட்டது
l-qamaru
ٱلْقَمَرُ
சந்திரன்
மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧)
Tafseer

وَاِنْ يَّرَوْا اٰيَةً يُّعْرِضُوْا وَيَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ ٢

wa-in yaraw
وَإِن يَرَوْا۟
அவர்கள் பார்த்தால்
āyatan
ءَايَةً
ஓர் அத்தாட்சியை
yuʿ'riḍū
يُعْرِضُوا۟
புறக்கணிக்கின்றனர்
wayaqūlū
وَيَقُولُوا۟
இன்னும் கூறுகின்றனர்
siḥ'run
سِحْرٌ
சூனியமாகும்
mus'tamirrun
مُّسْتَمِرٌّ
தொடர்ச்சியான(து)
எனினும், அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதனைப்) புறக்கணித்து "இது சகஜமான சூனியந்தான்" என்று கூறுகின்றனர். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௨)
Tafseer

وَكَذَّبُوْا وَاتَّبَعُوْٓا اَهْوَاۤءَهُمْ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ ٣

wakadhabū
وَكَذَّبُوا۟
இன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர்
wa-ittabaʿū
وَٱتَّبَعُوٓا۟
இன்னும் பின்பற்றினார்கள்
ahwāahum
أَهْوَآءَهُمْۚ
தங்கள் மன இச்சைகளை
wakullu
وَكُلُّ
எல்லா
amrin
أَمْرٍ
காரியங்களும்
mus'taqirrun
مُّسْتَقِرٌّ
நிலையாகத் தங்கக் கூடியதுதான்
அன்றி, அதனை பொய்யாக்கி தங்களது சரீர இச்சைகளையே பின்பற்றுகின்றனர். (அவர்கள் எதனை புறக்கணித்தாலும் வர வேண்டிய) ஒவ்வொரு விஷயமும் (அதனதன் நேரத்தில்) உறுதியாகி விடும். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௩)
Tafseer

وَلَقَدْ جَاۤءَهُمْ مِّنَ الْاَنْبَاۤءِ مَا فِيْهِ مُزْدَجَرٌۙ ٤

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
jāahum
جَآءَهُم
வந்துவிட்டது அவர்களிடம்
mina l-anbāi
مِّنَ ٱلْأَنۢبَآءِ
செய்திகளில்
mā fīhi
مَا فِيهِ
எதில் இருக்குமோ
muz'dajarun
مُزْدَجَرٌ
எச்சரிக்கை
(இவர்களுக்குப்) போதுமான படிப்பினை தரக்கூடிய பல விஷயங்கள் (இதற்கு முன்னரும்) நிச்சயமாக அவர்களிடம் வந்தே இருக்கின்றன. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௪)
Tafseer

حِكْمَةٌ ۢ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُۙ ٥

ḥik'matun
حِكْمَةٌۢ
ஞானம்
bālighatun
بَٰلِغَةٌۖ
மிக ஆழமான(து)
famā tugh'ni
فَمَا تُغْنِ
ஆனால், பலனளிக்க முடியவில்லை
l-nudhuru
ٱلنُّذُرُ
எச்சரிப்பாளர்கள்
(அவை அவர்களுக்கு) முழு ஞானம் அளிக்கக் கூடியவை தான். எனினும், (அவைகளைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்தது (இவர்களுக்கு) யாதொரு பயனும் அளிக்கவில்லை. ([௫௪] ஸூரத்துல் கமர்: ௫)
Tafseer

فَتَوَلَّ عَنْهُمْ ۘ يَوْمَ يَدْعُ الدَّاعِ اِلٰى شَيْءٍ نُّكُرٍۙ ٦

fatawalla
فَتَوَلَّ
ஆகவே, நீர் விலகி விடுவீராக!
ʿanhum
عَنْهُمْۘ
அவர்களை விட்டு
yawma
يَوْمَ
நாளில்
yadʿu
يَدْعُ
அழைக்கின்ற
l-dāʿi
ٱلدَّاعِ
அழைப்பாளர்
ilā shayin
إِلَىٰ شَىْءٍ
ஒன்றை நோக்கி
nukurin
نُّكُرٍ
மிக கடினமான(து)
ஆகவே, (நபியே!) நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். இவர்கள் வெறுக்கும் (அந்தக் கேள்வி கணக்கு) விஷயத்திற்காக (இஸ்ராஃபீல் என்னும்) அழைப்பவர் அழைக்கும் நாளில், ([௫௪] ஸூரத்துல் கமர்: ௬)
Tafseer

خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ ٧

khushaʿan
خُشَّعًا
இழிவடைந்தநிலையில்
abṣāruhum
أَبْصَٰرُهُمْ
அவர்களது பார்வைகள்
yakhrujūna
يَخْرُجُونَ
அவர்கள் வெளியேறுவார்கள்
mina l-ajdāthi
مِنَ ٱلْأَجْدَاثِ
புதைக்குழிகளைவிட்டு
ka-annahum jarādun
كَأَنَّهُمْ جَرَادٌ
அவர்கள் வெட்டுக் கிளிகளைப் போல
muntashirun
مُّنتَشِرٌ
பரவி வரக்கூடிய(து)
(அந்நாளில்) இவர்கள் கீழ் நோக்கிய பார்வையுடன் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுப் பரவிக் கிடக்கும் வெட்டுக் கிளியைப்போல் அழைப்பவரிடம் விரைந்தோடி வருவார்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௭)
Tafseer

مُّهْطِعِيْنَ اِلَى الدَّاعِۗ يَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا يَوْمٌ عَسِرٌ ٨

muh'ṭiʿīna
مُّهْطِعِينَ
பணிவுடன் பயத்துடன் விரைந்தவர்களாக வருவார்கள்
ilā l-dāʿi
إِلَى ٱلدَّاعِۖ
அழைப்பாளரை நோக்கி
yaqūlu
يَقُولُ
கூறுவார்கள்
l-kāfirūna
ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள்
hādhā yawmun
هَٰذَا يَوْمٌ
இது/ஒரு நாள்
ʿasirun
عَسِرٌ
சிரமமான
இது மிக கஷ்டமான நாள் என்றும் அந்நிராகரிப்பவர்கள் (அச்சமயம்) கூறுவார்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௮)
Tafseer

۞ كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ ٩

kadhabat
كَذَّبَتْ
பொய்ப்பித்தனர்
qablahum
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
qawmu
قَوْمُ
மக்கள்
nūḥin
نُوحٍ
நூஹூடைய
fakadhabū
فَكَذَّبُوا۟
ஆக, அவர்கள் பொய்ப்பித்தனர்
ʿabdanā
عَبْدَنَا
நமது அடியாரை
waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினர்
majnūnun
مَجْنُونٌ
ஒரு பைத்தியக்காரர்
wa-uz'dujira
وَٱزْدُجِرَ
இன்னும் அவர் எச்சரிக்கப்பட்டார்
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்த நூஹுடைய மக்களும் (அந்த நாளைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்கள் (அதைப் பற்றி எச்சரிக்கை செய்த) நம்முடைய தூதராகிய அடியாரைப் பொய்யாக்கியதுடன், அவரைப் பைத்தியக்காரனென்று கூறி (துன்புறுத்துவதாகவும்) மிரட்டிக் கொண்டுமிருந்தார்கள். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௯)
Tafseer
௧௦

فَدَعَا رَبَّهٗٓ اَنِّيْ مَغْلُوْبٌ فَانْتَصِرْ ١٠

fadaʿā
فَدَعَا
ஆகவே, அவர் பிரார்த்தித்தார்
rabbahu
رَبَّهُۥٓ
தனது இறைவனிடம்
annī
أَنِّى
நிச்சயமாக நான்
maghlūbun
مَغْلُوبٌ
தோற்கடிக்கப்பட்டேன்
fa-intaṣir
فَٱنتَصِرْ
ஆகவே, நீ பழி தீர்ப்பாயாக!
ஆகவே, அவர் தன் இறைவனை நோக்கி "நிச்சயமாக நான் (இவர்களிடம்) தோற்றுவிட்டேன். நீ எனக்கு உதவி செய்!" என்று பிரார்த்தனை செய்தார். ([௫௪] ஸூரத்துல் கமர்: ௧௦)
Tafseer