Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௩௨

Qur'an Surah An-Najm Verse 32

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَّذِيْنَ يَجْتَنِبُوْنَ كَبٰۤىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَۙ اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِۗ هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِيْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْۗ فَلَا تُزَكُّوْٓا اَنْفُسَكُمْۗ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰى ࣖ (النجم : ٥٣)

alladhīna
ٱلَّذِينَ
Those who
அவர்கள்
yajtanibūna
يَجْتَنِبُونَ
avoid
விலகி இருப்பார்கள்
kabāira l-ith'mi
كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ
great sins
பெரும் பாவங்களை விட்டும்
wal-fawāḥisha
وَٱلْفَوَٰحِشَ
and the immoralities
இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும்
illā l-lamama
إِلَّا ٱللَّمَمَۚ
except the small faults
தவிர/சிறு தவறுகளை
inna
إِنَّ
indeed
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
your Lord
உமது இறைவன்
wāsiʿu l-maghfirati
وَٰسِعُ ٱلْمَغْفِرَةِۚ
(is) vast (in) forgiveness
விசாலமான மன்னிப்புடையவன்
huwa
هُوَ
He
அவன்
aʿlamu
أَعْلَمُ
(is) most knowing about you
மிக அறிந்தவனாக
bikum
بِكُمْ
(is) most knowing about you
உங்களை
idh ansha-akum
إِذْ أَنشَأَكُم
when He produced you
உங்களை உருவாக்கிய போதும்
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
from the earth
பூமியில் இருந்து
wa-idh antum
وَإِذْ أَنتُمْ
and when you (were)
நீங்கள் இருந்த போதும்
ajinnatun
أَجِنَّةٌ
fetuses
சிசுக்களாக
fī buṭūni
فِى بُطُونِ
in (the) wombs
வயிறுகளில்
ummahātikum
أُمَّهَٰتِكُمْۖ
(of) your mothers
உங்கள் தாய்மார்களின்
falā tuzakkū
فَلَا تُزَكُّوٓا۟
So (do) not ascribe purity
ஆகவே, பீத்திக் கொள்ளாதீர்கள்
anfusakum
أَنفُسَكُمْۖ
(to) yourselves
உங்களை நீங்களே
huwa
هُوَ
He
அவன்
aʿlamu
أَعْلَمُ
knows best
மிக அறிந்தவன்
bimani ittaqā
بِمَنِ ٱتَّقَىٰٓ
(he) who fears
அல்லாஹ்வை அஞ்சியவர்களை

Transliteration:

Allazeena yajtaniboona kabaaa'iral ismi walfawaa hisha illal lamam; inna rabbaka waasi'ul maghfirah; huwa a'lamu bikum iz ansha akum minal ardi wa iz antum ajinnatun fee butooni umma haatikum falaa tuzakkooo anfusakum huwa a'lamu bimanit taqaa (QS. an-Najm:32)

English Sahih International:

Those who avoid the major sins and immoralities, only [committing] slight ones. Indeed, your Lord is vast in forgiveness. He was most knowing of you when He produced you from the earth and when you were fetuses in the wombs of your mothers. So do not claim yourselves to be pure; He is most knowing of who fears Him. (QS. An-Najm, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

(நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டு விடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும் பாவங்களி லிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். நிச்சயமாக உங்களது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராள மானவன். உங்களைப் பூமியிலிருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப்பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, உங்களை தூய்மையானவர்கள் என நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான். (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௩௨)

Jan Trust Foundation

(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் பெரும் பாவங்கள், இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும் விலகி இருப்பார்கள், சிறு தவறுகளைத் தவிர. (அந்த சிறு தவறுகளை அல்லாஹ் அவர்களுக்கு மன்னித்து விடுவான்.) நிச்சயமாக உமது இறைவன் விசாலமான மன்னிப்புடையவன். அவன் உங்களை பூமியில் இருந்து உருவாக்கிய போதும் (ஆதமை மண்ணிலிருந்து படைத்த போதும், பிறகு,) நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும் அவன் உங்களை (-யார் நல்லவர், யார் தீயவர் என்று) மிக அறிந்தவனாக இருக்கின்றான். ஆகவே, உங்களை நீங்களே (தூய்மையானவர்களாக) பீத்திக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்களை அவன் மிக அறிந்தவன் ஆவான்.