Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௨௬

Qur'an Surah An-Najm Verse 26

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَكَمْ مِّنْ مَّلَكٍ فِى السَّمٰوٰتِ لَا تُغْنِيْ شَفَاعَتُهُمْ شَيْـًٔا اِلَّا مِنْۢ بَعْدِ اَنْ يَّأْذَنَ اللّٰهُ لِمَنْ يَّشَاۤءُ وَيَرْضٰى (النجم : ٥٣)

wakam
وَكَم
And how many
எத்தனையோ
min malakin
مِّن مَّلَكٍ
of (the) Angels
வானவர்கள்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
in the heavens
வானங்களில் உள்ள
lā tugh'nī
لَا تُغْنِى
not will avail
தடுக்காது
shafāʿatuhum
شَفَٰعَتُهُمْ
their intercession
அவர்களின் சிபாரிசு
shayan
شَيْـًٔا
anything
எதையும்
illā min baʿdi
إِلَّا مِنۢ بَعْدِ
except after after
தவிர/பின்னரே
an yadhana
أَن يَأْذَنَ
[that] Allah has given permission
அனுமதிக்கு
l-lahu
ٱللَّهُ
Allah has given permission
அல்லாஹ்வின்
liman yashāu
لِمَن يَشَآءُ
for whom He wills
அவன் நாடுகின்றவருக்கு
wayarḍā
وَيَرْضَىٰٓ
and approves
இன்னும் அவன் விரும்புகின்ற(வருக்கு)

Transliteration:

Wa kam mim malakin fissamaawaati laa tughnee shafaa'atuhum shai'an illaa mim ba'di anyyaazanal laahu limany yashaaa'u wa yardaa (QS. an-Najm:26)

English Sahih International:

And how many angels there are in the heavens whose intercession will not avail at all except [only] after Allah has permitted [it] to whom He wills and approves. (QS. An-Najm, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். (எவருக்காகவும்) அவர்கள் பரிந்து பேசுவது யாதொரு பயனும் அளிக்காது. ஆயினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர, (அவர் பேசுவது பயனளிக்கும்). (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௨௬)

Jan Trust Foundation

அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களில் உள்ள எத்தனையோ வானவர்கள், அவர்களின் சிபாரிசு (அல்லாஹ்வின் வேதனையில் இருந்து) எதையும் தடுக்காது அல்லாஹ்வின் அனுமதிக்கு பின்னரே தவிர, (அதுவும்) அவன் நாடுகின்ற, அவன் விரும்புகின்றவருக்கு (மட்டுமே பலன் தரும்).