Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந்நஜ்ம் வசனம் ௨௩

Qur'an Surah An-Najm Verse 23

ஸூரத்துந்நஜ்ம் [௫௩]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ هِيَ اِلَّآ اَسْمَاۤءٌ سَمَّيْتُمُوْهَآ اَنْتُمْ وَاٰبَاۤؤُكُمْ مَّآ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍۗ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْاَنْفُسُۚ وَلَقَدْ جَاۤءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰىۗ (النجم : ٥٣)

in hiya
إِنْ هِىَ
Not they
இவை வேறில்லை
illā asmāon
إِلَّآ أَسْمَآءٌ
(are) except names
பெயர்களே தவிர
sammaytumūhā
سَمَّيْتُمُوهَآ
you have named them
இவற்றுக்கு பெயர் வைத்தீர்கள்
antum
أَنتُمْ
you
நீங்களும்
waābāukum
وَءَابَآؤُكُم
and your forefathers
உங்கள் மூதாதைகளும்
mā anzala
مَّآ أَنزَلَ
not has Allah sent down
இறக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
has Allah sent down
அல்லாஹ்
bihā
بِهَا
for it
இவற்றுக்கு
min sul'ṭānin
مِن سُلْطَٰنٍۚ
any authority
எவ்வித ஆதாரத்தையும்
in yattabiʿūna
إِن يَتَّبِعُونَ
Not they follow
நீங்கள் பின்பற்றுவதில்லை
illā
إِلَّا
except
தவிர
l-ẓana
ٱلظَّنَّ
assumption
வீண்எண்ணத்தையும்
wamā tahwā
وَمَا تَهْوَى
and what desire
விரும்புகின்றதையும்
l-anfusu
ٱلْأَنفُسُۖ
the(ir) souls
மனங்கள்
walaqad
وَلَقَدْ
And certainly
திட்டவட்டமாக
jāahum
جَآءَهُم
has come to them
வந்துள்ளது
min rabbihimu
مِّن رَّبِّهِمُ
from their Lord
அவர்களின் இறைவனிடமிருந்து
l-hudā
ٱلْهُدَىٰٓ
the guidance
நேர்வழி

Transliteration:

In hiya illaaa asmaaa'un sammaitumoohaaa antum wa aabaaa'ukum maaa anzalal laahu bihaa min sultaan; inyyattabi'oona illaz zanna wa maa tahwal anfusu wa laqad jaaa'ahum mir Rabbihimul hudaa (QS. an-Najm:23)

English Sahih International:

They are not but [mere] names you have named them – you and your forefathers – for which Allah has sent down no authority. They follow not except assumption and what [their] souls desire, and there has already come to them from their Lord guidance. (QS. An-Najm, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

இவைகளெல்லாம் நீங்களும், உங்கள் மூதாதைகளும் வைத்துக்கொண்ட வெறும் பெயர்களேயன்றி (உண்மையில் அவை) ஒன்றுமில்லை. அ(வை தெய்வம் என்ப)தற்காக அல்லாஹ் உங்களுக்கு யாதொரு ஆதாரத்தையும் (முந்திய எந்த வேதத்திலும்) இறக்கிவைக்கவில்லை. அவர்கள் (தங்கள்) சரீர இச்சைகளின் பொருட்டு, வீண் சந்தேகத்தைப் பின்பற்றுகின்றனரே அன்றி, (வேறு) இல்லை. நிச்சயமாக அவர்கள் இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கின்றது. (எனினும், அதனை அவர்கள் பின்பற்றுவதில்லை.) (ஸூரத்துந்நஜ்ம், வசனம் ௨௩)

Jan Trust Foundation

இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை; நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை; நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள்; எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவை எல்லாம் வெறும் பெயர்களே தவிர வேறில்லை. இவற்றுக்கு நீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் வைத்தீர்கள். அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. நீங்கள் வீண் எண்ணத்தையும் மனங்கள் விரும்புகின்றதையும் தவிர வேறு எதையும் நீங்கள் பின்பற்றுவதில்லை. அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி திட்டவட்டமாக வந்துள்ளது (அதாவது இவற்றை வணங்குவது கூடாது, வணக்க வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே தவிர வேறு யாருக்கும் தகுதியாகாது.)