Skip to content

ஸூரா ஸூரத்துந்நஜ்ம் - Page: 5

An-Najm

(an-Najm)

௪௧

ثُمَّ يُجْزٰىهُ الْجَزَاۤءَ الْاَوْفٰىۙ ٤١

thumma yuj'zāhu
ثُمَّ يُجْزَىٰهُ
பிறகு/அதற்கு அவன் கூலி கொடுக்கப்படுவான்
l-jazāa
ٱلْجَزَآءَ
கூலியை
l-awfā
ٱلْأَوْفَىٰ
மிக பூரணமான
பின்னர், செயலுக்குத் தக்க கூலி முழுமையாகக் கொடுக்கப் படுவார்கள். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௪௧)
Tafseer
௪௨

وَاَنَّ اِلٰى رَبِّكَ الْمُنْتَهٰىۙ ٤٢

wa-anna
وَأَنَّ
இன்னும் , நிச்சயமாக
ilā rabbika
إِلَىٰ رَبِّكَ
உமது இறைவன் பக்கம்தான்
l-muntahā
ٱلْمُنتَهَىٰ
இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது
(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவனிடம் (நீங்கள் அனைவரும்) போய்த் தீரவேண்டும். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௪௨)
Tafseer
௪௩

وَاَنَّهٗ هُوَ اَضْحَكَ وَاَبْكٰى ٤٣

wa-annahu huwa
وَأَنَّهُۥ هُوَ
இன்னும் , நிச்சயமாக அவன்தான்
aḍḥaka
أَضْحَكَ
சிரிக்க வைக்கின்றான்
wa-abkā
وَأَبْكَىٰ
இன்னும் அழ வைக்கின்றான்
நிச்சயமாக அவனே சிரிக்க வைக்கின்றான்; அழவும் வைக்கின்றான். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௪௩)
Tafseer
௪௪

وَاَنَّهٗ هُوَ اَمَاتَ وَاَحْيَاۙ ٤٤

wa-annahu huwa
وَأَنَّهُۥ هُوَ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
amāta
أَمَاتَ
மரணிக்க வைக்கின்றான்
wa-aḥyā
وَأَحْيَا
இன்னும் உயிர் கொடுக்கின்றான்
நிச்சயமாக அவன்தான் மரணிக்கச் செய்கின்றான்; (திரும்பவும்) உயிர்ப்பிக்கின்றான். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௪௪)
Tafseer
௪௫

وَاَنَّهٗ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰى ٤٥

wa-annahu
وَأَنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-zawjayni
ٱلزَّوْجَيْنِ
இரு ஜோடிகளை
l-dhakara
ٱلذَّكَرَ
ஆணை(யும்)
wal-unthā
وَٱلْأُنثَىٰ
பெண்ணையும்
நிச்சயமாக அவன்தான் ஆண், பெண் ஜோடி ஜோடிகளாகப் படைக்கின்றான். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௪௫)
Tafseer
௪௬

مِنْ نُّطْفَةٍ اِذَا تُمْنٰىۙ ٤٦

min nuṭ'fatin
مِن نُّطْفَةٍ
இந்திரியத்தில் இருந்து
idhā tum'nā
إِذَا تُمْنَىٰ
செலுத்தப்படுகின்ற
(கர்ப்பத்தில்) செலுத்தப்படும் ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டே (உங்களைப் படைக்கின்றான்). ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௪௬)
Tafseer
௪௭

وَاَنَّ عَلَيْهِ النَّشْاَةَ الْاُخْرٰىۙ ٤٧

wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
ʿalayhi
عَلَيْهِ
அவன்மீதே கடமையாகஇருக்கிறது
l-nashata
ٱلنَّشْأَةَ
உருவாக்குவதும்
l-ukh'rā
ٱلْأُخْرَىٰ
மற்றொரு முறை
நிச்சயமாக (மரணித்தப் பின்னர்) உயிர் கொடுத்து எழுப்புவதும் அவன் மீது கடமையாக இருக்கிறது. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௪௭)
Tafseer
௪௮

وَاَنَّهٗ هُوَ اَغْنٰى وَاَقْنٰىۙ ٤٨

wa-annahu huwa
وَأَنَّهُۥ هُوَ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
aghnā
أَغْنَىٰ
செல்வந்தராக ஆக்கினான்
wa-aqnā
وَأَقْنَىٰ
இன்னும் சேமிப்பைக் கொடுத்தான்
பொருளைக் கொடுத்து (அதனை நீங்கள்) சேகரித்துச் சீமானாகும்படி செய்பவனும் நிச்சயமாக அவன்தான். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௪௮)
Tafseer
௪௯

وَاَنَّهٗ هُوَ رَبُّ الشِّعْرٰىۙ ٤٩

wa-annahu huwa
وَأَنَّهُۥ هُوَ
இன்னும் நிச்சயமாக அவன்தான்
rabbu
رَبُّ
இறைவன்
l-shiʿ'rā
ٱلشِّعْرَىٰ
ஷிஃரா நட்சத்திரத்தின்
(இணைவைப்பவர்களே! நீங்கள் வணங்கும்) "ஷிஃரா" என்னும் நட்சத்திரத்தின் இறைவனும் நிச்சயமாக அவன்தான். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௪௯)
Tafseer
௫௦

وَاَنَّهٗٓ اَهْلَكَ عَادًا ۨالْاُوْلٰىۙ ٥٠

wa-annahu
وَأَنَّهُۥٓ
இன்னும் நிச்சயமாகஅவன்
ahlaka
أَهْلَكَ
அழித்தான்
ʿādan
عَادًا
ஆது சமுதாயத்தை
l-ūlā
ٱلْأُولَىٰ
முந்திய
(அந்த நட்சத்திரத்தை வணங்கிக் கொண்டிருந்த) முந்திய ஆது என்னும் மக்களை அழித்தவனும் நிச்சயமாக அவன்தான். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௫௦)
Tafseer