Skip to content

ஸூரா ஸூரத்துந்நஜ்ம் - Page: 4

An-Najm

(an-Najm)

௩௧

وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ لِيَجْزِيَ الَّذِيْنَ اَسَاۤءُوْا بِمَا عَمِلُوْا وَيَجْزِيَ الَّذِيْنَ اَحْسَنُوْا بِالْحُسْنٰىۚ ٣١

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே உரியன
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை(யும்)
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِ
பூமியில்உள்ளவையும்
liyajziya
لِيَجْزِىَ
இறுதியில் அவன் கூலி கொடுப்பான்
alladhīna asāū
ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟
தீமை செய்தவர்களுக்கு
bimā ʿamilū
بِمَا عَمِلُوا۟
அவர்கள் செய்தவற்றுக்கு
wayajziya
وَيَجْزِىَ
கூலி கொடுப்பான்
alladhīna aḥsanū
ٱلَّذِينَ أَحْسَنُوا۟
நன்மை செய்தவர்களுக்கு
bil-ḥus'nā
بِٱلْحُسْنَى
சொர்க்கத்தை
வானங்கள், பூமியிலுள்ளவைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. ஆகவே, தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயலுக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுக்கின்றான். நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கின்றான். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௩௧)
Tafseer
௩௨

اَلَّذِيْنَ يَجْتَنِبُوْنَ كَبٰۤىِٕرَ الْاِثْمِ وَالْفَوَاحِشَ اِلَّا اللَّمَمَۙ اِنَّ رَبَّكَ وَاسِعُ الْمَغْفِرَةِۗ هُوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِيْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْۗ فَلَا تُزَكُّوْٓا اَنْفُسَكُمْۗ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰى ࣖ ٣٢

alladhīna
ٱلَّذِينَ
அவர்கள்
yajtanibūna
يَجْتَنِبُونَ
விலகி இருப்பார்கள்
kabāira l-ith'mi
كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ
பெரும் பாவங்களை விட்டும்
wal-fawāḥisha
وَٱلْفَوَٰحِشَ
இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும்
illā l-lamama
إِلَّا ٱللَّمَمَۚ
தவிர/சிறு தவறுகளை
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உமது இறைவன்
wāsiʿu l-maghfirati
وَٰسِعُ ٱلْمَغْفِرَةِۚ
விசாலமான மன்னிப்புடையவன்
huwa
هُوَ
அவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவனாக
bikum
بِكُمْ
உங்களை
idh ansha-akum
إِذْ أَنشَأَكُم
உங்களை உருவாக்கிய போதும்
mina l-arḍi
مِّنَ ٱلْأَرْضِ
பூமியில் இருந்து
wa-idh antum
وَإِذْ أَنتُمْ
நீங்கள் இருந்த போதும்
ajinnatun
أَجِنَّةٌ
சிசுக்களாக
fī buṭūni
فِى بُطُونِ
வயிறுகளில்
ummahātikum
أُمَّهَٰتِكُمْۖ
உங்கள் தாய்மார்களின்
falā tuzakkū
فَلَا تُزَكُّوٓا۟
ஆகவே, பீத்திக் கொள்ளாதீர்கள்
anfusakum
أَنفُسَكُمْۖ
உங்களை நீங்களே
huwa
هُوَ
அவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimani ittaqā
بِمَنِ ٱتَّقَىٰٓ
அல்லாஹ்வை அஞ்சியவர்களை
(நன்மை செய்யும்) அவர்கள் (ஏதும் தவறாக ஏற்பட்டு விடும்) அற்பமான பாவங்களைத் தவிர, மற்ற பெரும் பாவங்களி லிருந்தும், மானக்கேடான விஷயங்களிலிருந்தும் விலகியிருப்பார்கள். நிச்சயமாக உங்களது இறைவன் மன்னிப்பதில் மிக்க தாராள மானவன். உங்களைப் பூமியிலிருந்து உற்பத்தி செய்த சமயத்தில் (உங்கள் தன்மையை) அவன் நன்கறிவான். நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கர்ப்பப்பிண்டமாயிருந்த சமயத்திலும் உங்களை அவன் நன்கறிவான். ஆகவே, உங்களை தூய்மையானவர்கள் என நீங்களே தற்புகழ்ச்சி செய்துகொள்ளாதீர்கள். உங்களில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்பவர்கள் யாரென்பதை அவன் நன்கறிவான். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௩௨)
Tafseer
௩௩

اَفَرَءَيْتَ الَّذِيْ تَوَلّٰىۙ ٣٣

afara-ayta
أَفَرَءَيْتَ
நீர் அறிவிப்பீராக!
alladhī
ٱلَّذِى
ஒருவன்
tawallā
تَوَلَّىٰ
புறக்கணித்தான்
(நபியே!) உங்களை விட்டும் விலகியவனை நீங்கள் கவனித்தீர்களா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௩௩)
Tafseer
௩௪

وَاَعْطٰى قَلِيْلًا وَّاَكْدٰى ٣٤

wa-aʿṭā
وَأَعْطَىٰ
இன்னும் கொடுத்தான்
qalīlan
قَلِيلًا
கொஞ்சம்
wa-akdā
وَأَكْدَىٰٓ
பிறகு நிறுத்திக் கொண்டான்
அவன் ஒரு சொற்பத்தைக் கொடுத்துவிட்டு, கொடுப்பதையே (முற்றிலும்) நிறுத்திக் கொண்டான். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௩௪)
Tafseer
௩௫

اَعِنْدَهٗ عِلْمُ الْغَيْبِ فَهُوَ يَرٰى ٣٥

aʿindahu
أَعِندَهُۥ
அவனிடம் இருக்கிறதா?
ʿil'mu
عِلْمُ
அறிவு
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவானவற்றின்
fahuwa
فَهُوَ
அவன்
yarā
يَرَىٰٓ
பார்க்கின்றானா?
அவனிடத்தில் மறைவான விஷயத்தின் ஞானமிருந்து (தன்னுடைய முடிவை அதில்) அவன் பார்த்தானா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௩௫)
Tafseer
௩௬

اَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِيْ صُحُفِ مُوْسٰى ٣٦

am lam yunabba
أَمْ لَمْ يُنَبَّأْ
அவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா?
bimā fī ṣuḥufi
بِمَا فِى صُحُفِ
ஏடுகளில் உள்ளவற்றைப் பற்றி
mūsā
مُوسَىٰ
மூஸாவின்
அல்லது மூஸாவுடைய வேதத்திலுள்ளது அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௩௬)
Tafseer
௩௭

وَاِبْرٰهِيْمَ الَّذِيْ وَفّٰىٓ ۙ ٣٧

wa-ib'rāhīma
وَإِبْرَٰهِيمَ
இன்னும் இப்ராஹீமுடைய
alladhī waffā
ٱلَّذِى وَفَّىٰٓ
எவர்/முழுமையாக நிறைவேற்றினார்
(அல்லது இறைவனுடைய கட்டளைகளை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய விஷயமேனும் (அவனுக்குத் தெரியாதா?) ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௩௭)
Tafseer
௩௮

اَلَّا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۙ ٣٨

allā taziru
أَلَّا تَزِرُ
சுமக்காது
wāziratun
وَازِرَةٌ
பாவம்செய்த ஆன்மா
wiz'ra
وِزْرَ
பாவத்தை
ukh'rā
أُخْرَىٰ
இன்னொரு பாவியான ஆன்மாவின்
(நபியே!) ஒருவனின் பாவச் சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான் என்பதை அறிந்துகொள்வீராக. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௩௮)
Tafseer
௩௯

وَاَنْ لَّيْسَ لِلْاِنْسَانِ اِلَّا مَا سَعٰىۙ ٣٩

wa-an laysa
وَأَن لَّيْسَ
இன்னும் வேறு ஏதுமில்லை
lil'insāni illā
لِلْإِنسَٰنِ إِلَّا
மனிதனுக்கு/தவிர
mā saʿā
مَا سَعَىٰ
அவன் எதை அடைய முயற்சித்தானோ
மனிதனுக்கு அவன் செய்த செயலைத் தவிர வேறொன்றும் கிடைக்காது. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௩௯)
Tafseer
௪௦

وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰىۖ ٤٠

wa-anna
وَأَنَّ
இன்னும் , நிச்சயமாக
saʿyahu
سَعْيَهُۥ
தனது முயற்சியை
sawfa yurā
سَوْفَ يُرَىٰ
விரைவில் காண்பான்
நிச்சயமாக (மனிதன் செய்த) செயல்தான் கவனிக்கப்படும். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௪௦)
Tafseer