Skip to content

ஸூரா ஸூரத்துந்நஜ்ம் - Page: 3

An-Najm

(an-Najm)

௨௧

اَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْاُنْثٰى ٢١

alakumu
أَلَكُمُ
உங்களுக்கு?
l-dhakaru
ٱلذَّكَرُ
ஆண் பிள்ளையும்
walahu
وَلَهُ
அவனுக்கு
l-unthā
ٱلْأُنثَىٰ
பெண் பிள்ளையுமா?
என்னே! உங்களுக்கு ஆண் மக்கள், அவனுக்குப் பெண் மக்களா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨௧)
Tafseer
௨௨

تِلْكَ اِذًا قِسْمَةٌ ضِيْزٰى ٢٢

til'ka
تِلْكَ
இது
idhan qis'matun
إِذًا قِسْمَةٌ
அப்படியென்றால்/ஒரு பங்கீடாகும்
ḍīzā
ضِيزَىٰٓ
அநியாயமான
அவ்வாறாயின், அது மிக்க அநியாயமான பங்கீடாகும். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨௨)
Tafseer
௨௩

اِنْ هِيَ اِلَّآ اَسْمَاۤءٌ سَمَّيْتُمُوْهَآ اَنْتُمْ وَاٰبَاۤؤُكُمْ مَّآ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍۗ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْاَنْفُسُۚ وَلَقَدْ جَاۤءَهُمْ مِّنْ رَّبِّهِمُ الْهُدٰىۗ ٢٣

in hiya
إِنْ هِىَ
இவை வேறில்லை
illā asmāon
إِلَّآ أَسْمَآءٌ
பெயர்களே தவிர
sammaytumūhā
سَمَّيْتُمُوهَآ
இவற்றுக்கு பெயர் வைத்தீர்கள்
antum
أَنتُمْ
நீங்களும்
waābāukum
وَءَابَآؤُكُم
உங்கள் மூதாதைகளும்
mā anzala
مَّآ أَنزَلَ
இறக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihā
بِهَا
இவற்றுக்கு
min sul'ṭānin
مِن سُلْطَٰنٍۚ
எவ்வித ஆதாரத்தையும்
in yattabiʿūna
إِن يَتَّبِعُونَ
நீங்கள் பின்பற்றுவதில்லை
illā
إِلَّا
தவிர
l-ẓana
ٱلظَّنَّ
வீண்எண்ணத்தையும்
wamā tahwā
وَمَا تَهْوَى
விரும்புகின்றதையும்
l-anfusu
ٱلْأَنفُسُۖ
மனங்கள்
walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
jāahum
جَآءَهُم
வந்துள்ளது
min rabbihimu
مِّن رَّبِّهِمُ
அவர்களின் இறைவனிடமிருந்து
l-hudā
ٱلْهُدَىٰٓ
நேர்வழி
இவைகளெல்லாம் நீங்களும், உங்கள் மூதாதைகளும் வைத்துக்கொண்ட வெறும் பெயர்களேயன்றி (உண்மையில் அவை) ஒன்றுமில்லை. அ(வை தெய்வம் என்ப)தற்காக அல்லாஹ் உங்களுக்கு யாதொரு ஆதாரத்தையும் (முந்திய எந்த வேதத்திலும்) இறக்கிவைக்கவில்லை. அவர்கள் (தங்கள்) சரீர இச்சைகளின் பொருட்டு, வீண் சந்தேகத்தைப் பின்பற்றுகின்றனரே அன்றி, (வேறு) இல்லை. நிச்சயமாக அவர்கள் இறைவனிடமிருந்து அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கின்றது. (எனினும், அதனை அவர்கள் பின்பற்றுவதில்லை.) ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨௩)
Tafseer
௨௪

اَمْ لِلْاِنْسَانِ مَا تَمَنّٰىۖ ٢٤

am lil'insāni
أَمْ لِلْإِنسَٰنِ
மனிதனுக்கு கிடைத்துவிடுமா?
mā tamannā
مَا تَمَنَّىٰ
அவன் விரும்பியது
மனிதன் விரும்பியதெல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடுமா? ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨௪)
Tafseer
௨௫

فَلِلّٰهِ الْاٰخِرَةُ وَالْاُوْلٰى ࣖ ٢٥

falillahi
فَلِلَّهِ
அல்லாஹ்விற்கே உரியது
l-ākhiratu
ٱلْءَاخِرَةُ
மறுமையும்
wal-ūlā
وَٱلْأُولَىٰ
இந்த உலகமும்
(ஏனென்றால்) இம்மையும் மறுமையும் அல்லாஹ்வுக் குறியனவே! (அவன் விரும்பியவர்களுக்கே அவற்றின் பாக்கியத்தை அளிப்பான்.) ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨௫)
Tafseer
௨௬

وَكَمْ مِّنْ مَّلَكٍ فِى السَّمٰوٰتِ لَا تُغْنِيْ شَفَاعَتُهُمْ شَيْـًٔا اِلَّا مِنْۢ بَعْدِ اَنْ يَّأْذَنَ اللّٰهُ لِمَنْ يَّشَاۤءُ وَيَرْضٰى ٢٦

wakam
وَكَم
எத்தனையோ
min malakin
مِّن مَّلَكٍ
வானவர்கள்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ள
lā tugh'nī
لَا تُغْنِى
தடுக்காது
shafāʿatuhum
شَفَٰعَتُهُمْ
அவர்களின் சிபாரிசு
shayan
شَيْـًٔا
எதையும்
illā min baʿdi
إِلَّا مِنۢ بَعْدِ
தவிர/பின்னரே
an yadhana
أَن يَأْذَنَ
அனுமதிக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்வின்
liman yashāu
لِمَن يَشَآءُ
அவன் நாடுகின்றவருக்கு
wayarḍā
وَيَرْضَىٰٓ
இன்னும் அவன் விரும்புகின்ற(வருக்கு)
வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். (எவருக்காகவும்) அவர்கள் பரிந்து பேசுவது யாதொரு பயனும் அளிக்காது. ஆயினும், அல்லாஹ் விரும்பி, எவரைப் பற்றித் திருப்தியடைந்து அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர, (அவர் பேசுவது பயனளிக்கும்). ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨௬)
Tafseer
௨௭

اِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ لَيُسَمُّوْنَ الْمَلٰۤىِٕكَةَ تَسْمِيَةَ الْاُنْثٰى ٢٧

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna lā yu'minūna
ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ளாதவர்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
layusammūna
لَيُسَمُّونَ
பெயர் சூட்டுகின்றார்கள்
l-malāikata
ٱلْمَلَٰٓئِكَةَ
வானவர்களுக்கு
tasmiyata
تَسْمِيَةَ
பெயர்களை
l-unthā
ٱلْأُنثَىٰ
பெண்களின்
நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ள வில்லையோ, அவர்கள் மலக்குகளுக்குப் பெண் பெயர் சூட்டுகின்றனர். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨௭)
Tafseer
௨௮

وَمَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍۗ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنَّ الظَّنَّ لَا يُغْنِيْ مِنَ الْحَقِّ شَيْـًٔاۚ ٢٨

wamā lahum
وَمَا لَهُم
அவர்களுக்கு இல்லை
bihi
بِهِۦ
அதைப் பற்றி
min ʿil'min
مِنْ عِلْمٍۖ
எவ்வித கல்வி அறிவும்
in yattabiʿūna
إِن يَتَّبِعُونَ
அவர்கள் பின்பற்றுவதில்லை
illā
إِلَّا
தவிர
l-ẓana
ٱلظَّنَّۖ
வீண் எண்ணத்தை
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
l-ẓana
ٱلظَّنَّ
வீண் எண்ணம்
lā yugh'nī
لَا يُغْنِى
பலன் தராது
mina l-ḥaqi
مِنَ ٱلْحَقِّ
உண்மைக்கு பதிலாக
shayan
شَيْـًٔا
அறவே
இதைப் பற்றி அவர்களுக்கு யாதொரு ஞானமும் கிடையாது. (ஆதாரமற்ற) வீண் சந்தேகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. வீண் சந்தேகம் யாதொன்றையும் உறுதிப்படுத்தாது. ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨௮)
Tafseer
௨௯

فَاَعْرِضْ عَنْ مَّنْ تَوَلّٰىۙ عَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ اِلَّا الْحَيٰوةَ الدُّنْيَاۗ ٢٩

fa-aʿriḍ
فَأَعْرِضْ
ஆகவே, நீர் புறக்கணிப்பீராக!
ʿan man tawallā
عَن مَّن تَوَلَّىٰ
விலகியவர்களை
ʿan dhik'rinā
عَن ذِكْرِنَا
நம் நினைவை விட்டு
walam yurid
وَلَمْ يُرِدْ
அவர்கள் நாடவில்லை
illā
إِلَّا
தவிர
l-ḥayata l-dun'yā
ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
உலக வாழ்க்கையை
(நபியே!) எவன் என்னைத் தியானிக்காது விலகி, இவ்வுலக வாழ்க்கையைத் தவிர, (மறுமையை) விரும்பாதிருக்கின்றானோ, அவனை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௨௯)
Tafseer
௩௦

ذٰلِكَ مَبْلَغُهُمْ مِّنَ الْعِلْمِۗ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖۙ وَهُوَ اَعْلَمُ بِمَنِ اهْتَدٰى ٣٠

dhālika
ذَٰلِكَ
அதுதான்
mablaghuhum
مَبْلَغُهُم
அவர்களது முதிர்ச்சியாகும்
mina l-ʿil'mi
مِّنَ ٱلْعِلْمِۚ
கல்வியின்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka huwa
رَبَّكَ هُوَ
உமது இறைவன்தான்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
biman ḍalla
بِمَن ضَلَّ
வழிதவறியவர்களை
ʿan sabīlihi
عَن سَبِيلِهِۦ
தனது பாதையை விட்டு
wahuwa
وَهُوَ
இன்னும் அவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimani ih'tadā
بِمَنِ ٱهْتَدَىٰ
நேர்வழி பெற்றவர்களையும்
இவர்களுடைய கல்வி ஞானம் இவ்வளவு தூரம்தான் செல்கின்றது. (இதற்கு மேல் செல்வதில்லை.) நிச்சயமாக உங்களது இறைவன், தன்னுடைய வழியிலிருந்து தவறியவன் யாரென்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவன் யாரென்பதையும் அவன் நன்கறிவான். ([௫௩] ஸூரத்துந்நஜ்ம்: ௩௦)
Tafseer