Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௪௮

Qur'an Surah At-Tur Verse 48

ஸூரத்துத் தூர் [௫௨]: ௪௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْيُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِيْنَ تَقُوْمُۙ (الطور : ٥٢)

wa-iṣ'bir
وَٱصْبِرْ
So be patient
பொறுமையாக இருப்பீராக!
liḥuk'mi
لِحُكْمِ
for (the) Command
தீர்ப்புக்காக
rabbika
رَبِّكَ
(of) your Lord
உமது இறைவனின்
fa-innaka
فَإِنَّكَ
for indeed you
நிச்சயமாக நீர்
bi-aʿyuninā
بِأَعْيُنِنَاۖ
(are) in Our Eyes
நமது கண்களுக்கு முன்னால்
wasabbiḥ
وَسَبِّحْ
And glorify
நீர் துதிப்பீராக
biḥamdi
بِحَمْدِ
(the) praise
புகழ்ந்து
rabbika
رَبِّكَ
(of) your Lord
உமது இறைவனை
ḥīna
حِينَ
when
நேரத்தில்
taqūmu
تَقُومُ
you arise
எழும்

Transliteration:

Wasbir lihukmi rabbika fa innaka bi-a'yuninaa wa sabbih bihamdi rabbika heena taqoom (QS. aṭ-Ṭūr:48)

English Sahih International:

And be patient, [O Muhammad], for the decision of your Lord, for indeed, you are in Our eyes [i.e., sight]. And exalt [Allah] with praise of your Lord when you arise (QS. At-Tur, Ayah ௪௮)

Abdul Hameed Baqavi:

(நபியே!) உங்களது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நீங்கள் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர்கள். (ஆகவே, அவர்கள் உங்களைத் தங்கள் இஷ்டப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீங்கள் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உங்களது இறைவனின் புகழைக் கூறித் துதி செய்வீராக! (ஸூரத்துத் தூர், வசனம் ௪௮)

Jan Trust Foundation

எனவே (நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண்காணிப்பில் இருக்கின்றீர்; மேலும் நீங்கள் எழுந்திருக்கும் சமயத்தில் உம் இறைவனின் புகழைக் கூறித் தஸ்பீஹு செய்வீராக,

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) உமது இறைவனின் தீர்ப்புக்காக (-அது வரும் வரை) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக நீர் நமது கண்களுக்கு முன்னால் (-நமது பார்வையிலும் பாதுகாப்பிலும்) இருக்கின்றீர். நீர் (மதிய தூக்கத்தில் இருந்து) எழும் நேரத்தில் உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக (-ளுஹர், அஸ்ர் தொழுகைகளை நிறைவேற்றுவீராக)!