Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௩௮

Qur'an Surah At-Tur Verse 38

ஸூரத்துத் தூர் [௫௨]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ لَهُمْ سُلَّمٌ يَّسْتَمِعُوْنَ فِيْهِۚ فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍۗ (الطور : ٥٢)

am lahum
أَمْ لَهُمْ
Or for them
?/அவர்களுக்கு
sullamun
سُلَّمٌ
(is) a stairway
ஓர் ஏணி
yastamiʿūna
يَسْتَمِعُونَ
they listen
செவியுறுகின்றனரா
fīhi
فِيهِۖ
therewith?
அதில்
falyati
فَلْيَأْتِ
Then let bring
வரட்டும்
mus'tamiʿuhum
مُسْتَمِعُهُم
their listener
அவர்களில் செவியுற்றவர்
bisul'ṭānin mubīnin
بِسُلْطَٰنٍ مُّبِينٍ
an authority clear
தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு

Transliteration:

Am lahum sullamuny yastami'oona feehi falyaati mustami'uhum bisultaanim mubeen (QS. aṭ-Ṭūr:38)

English Sahih International:

Or have they a stairway [into the heaven] upon which they listen? Then let their listener produce a clear authority [i.e., proof]. (QS. At-Tur, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

அல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து (அங்குச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவைகளை) இவர்கள் கேட்டு வந்ததற்குத் தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு வரவும். (ஸூரத்துத் தூர், வசனம் ௩௮)

Jan Trust Foundation

அல்லது, அவர்களுக்கு ஏணி இருந்து அதன் மூலம் (வானத்தின் இரகசியங்களை) கேட்டு வருகின்றார்களா? அவ்வாறாயின், அவர்களில் கேட்டு வந்தவர் செவியேற்றதைத் தெளிவான ஆதாரத்துடன் கொண்டு வரட்டும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு ஓர் ஏணி இருந்து, அதில் (-அவர்கள் வானத்தில் ஏறிச்சென்று, அல்லாஹ்விடம் தங்களது கொள்கைதான் சரியானது என்று இறைவனின் வாக்கை நேரடியாக) அவர்கள் செவியுறுகின்றனரா? அப்படி இருந்தால் அவர்களில் செவியுற்றவர் தெளிவான ஓர் ஆதாரத்தை கொண்டு வரட்டும்.