குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௩௬
Qur'an Surah At-Tur Verse 36
ஸூரத்துத் தூர் [௫௨]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ خَلَقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَۚ بَلْ لَّا يُوْقِنُوْنَۗ (الطور : ٥٢)
- am khalaqū
- أَمْ خَلَقُوا۟
- Or (did) they create
- இவர்கள்தான் படைத்தார்களா?
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- the heavens
- வானங்களை(யும்)
- wal-arḍa
- وَٱلْأَرْضَۚ
- and the earth?
- பூமியையும்
- bal
- بَل
- Nay
- மாறாக
- lā yūqinūna
- لَّا يُوقِنُونَ
- not they are certain
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
Transliteration:
Am khalaqus samaawaati wal ard; bal laa yooqinoon(QS. aṭ-Ṭūr:36)
English Sahih International:
Or did they create the heavens and the earth? Rather, they are not certain. (QS. At-Tur, Ayah ௩௬)
Abdul Hameed Baqavi:
அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? அன்று. (இவைகளை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை. (ஸூரத்துத் தூர், வசனம் ௩௬)
Jan Trust Foundation
அல்லது, வானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? அல்ல. அவர்கள் உறுதி கொள்ளமாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அப்படி என்றால்) இவர்கள்தான் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? (இல்லையே! இவர்கள் படைக்கப்பட்டவர்கள் தானே! (பிறகு, ஏன் படைத்தவனின் கட்டளையை நிராகரிக்கின்றார்கள்?) மாறாக, (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.