குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௨௧
Qur'an Surah At-Tur Verse 21
ஸூரத்துத் தூர் [௫௨]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَيْءٍۚ كُلُّ امْرِئٍ ۢبِمَا كَسَبَ رَهِيْنٌ (الطور : ٥٢)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- believed
- நம்பிக்கை கொண்டார்களோ
- wa-ittabaʿathum
- وَٱتَّبَعَتْهُمْ
- and followed them
- இன்னும் அவர்களைப் பின்பற்றினார்களோ
- dhurriyyatuhum
- ذُرِّيَّتُهُم
- their offspring
- அவர்களின் சந்ததிகளும்
- biīmānin
- بِإِيمَٰنٍ
- in faith
- இறை நம்பிக்கையில்
- alḥaqnā bihim
- أَلْحَقْنَا بِهِمْ
- We will join with them
- அவர்களுடன் சேர்த்து வைப்போம்
- dhurriyyatahum
- ذُرِّيَّتَهُمْ
- their offspring
- அவர்களின் சந்ததிகளை
- wamā alatnāhum
- وَمَآ أَلَتْنَٰهُم
- and not We will deprive them
- அவர்களுக்கு நாம் குறைக்க மாட்டோம்
- min ʿamalihim
- مِّنْ عَمَلِهِم
- of their deeds
- அவர்களின் அமல்களில்
- min shayin
- مِّن شَىْءٍۚ
- (in) any thing
- எதையும்
- kullu im'ri-in
- كُلُّ ٱمْرِئٍۭ
- Every person
- ஒவ்வொரு/மனிதனும்
- bimā kasaba
- بِمَا كَسَبَ
- for what he earned
- தான் செய்த செயலுக்காக
- rahīnun
- رَهِينٌ
- (is) pledged
- தடுத்து வைக்கப்பட்டிருப்பான்
Transliteration:
Wallazeena aamanoo wattaba'at hum zurriyyatuhum bieemaanin alhaqnaa bihim zurriyyatahum wa maaa alatnaahum min 'amalihim min shai'; kullum ri'im bimaa kasaba raheen(QS. aṭ-Ṭūr:21)
English Sahih International:
And those who believed and whose descendants followed them in faith – We will join with them their descendants, and We will not deprive them of anything of their deeds. Every person, for what he earned, is retained. (QS. At-Tur, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கின்றார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சுவனபதியில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் ஒன்றையுமே நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயலுக்குப் பிணையாக இருக்கின்றான். (ஸூரத்துத் தூர், வசனம் ௨௧)
Jan Trust Foundation
எவர்கள் ஈமான் கொண்டு, அவர்களுடைய சந்ததியாரும் ஈமானில் அவர்களைப் பின் தொடர்கிறார்களோ, அவர்களுடைய அந்த சந்ததியினரை அவர்களுடன் (சுவனத்தில் ஒன்று) சேர்த்து விடுவோம். (இதனால்) அவர்களுடைய செயல்களில் எந்த ஒன்றையும், நாம் அவர்களுக்குக் குறைத்து விட மாட்டோம் - ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்த செயல்களுக்குப் பிணையாக இருக்கின்றான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ, இன்னும் அவர்களின் சந்ததிகளும் இறை நம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றினார்களோ நாம் அவர்களின் சந்ததிகளை அவர்களுடன் சேர்த்து வைப்போம். அவர்களின் அமல்களில் எதையும் அவர்களுக்கு நாம் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயலுக்காக (மட்டுமே) தடுத்து வைக்கப்பட்டிருப்பான். (ஒருவர் - பிறரின் குற்றத்தை சுமக்க மாட்டான்.)