குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தூர் வசனம் ௧௬
Qur'an Surah At-Tur Verse 16
ஸூரத்துத் தூர் [௫௨]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِصْلَوْهَا فَاصْبِرُوْٓا اَوْ لَا تَصْبِرُوْاۚ سَوَاۤءٌ عَلَيْكُمْۗ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ (الطور : ٥٢)
- iṣ'lawhā
- ٱصْلَوْهَا
- Burn in it
- இதில் எரிந்து பொசுங்குங்கள்!
- fa-iṣ'birū
- فَٱصْبِرُوٓا۟
- then be patient
- பொறுமையாக இருங்கள்!
- aw
- أَوْ
- or
- அல்லது
- lā taṣbirū
- لَا تَصْبِرُوا۟
- (do) not be patient
- பொறுக்காதீர்கள்!
- sawāon
- سَوَآءٌ
- (it is) same
- இரண்டும் சமம்தான்
- ʿalaykum
- عَلَيْكُمْۖ
- for you
- உங்களுக்கு
- innamā tuj'zawna
- إِنَّمَا تُجْزَوْنَ
- Only you are being recompensed
- நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம்
- mā kuntum taʿmalūna
- مَا كُنتُمْ تَعْمَلُونَ
- (for) what you used (to) do"
- நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்
Transliteration:
Islawhaa fasbirooo aw laa tasbiroo sawaaa'un 'alaikum innamaa tujzawna maa kuntum ta'maloon(QS. aṭ-Ṭūr:16)
English Sahih International:
[Enter to] burn therein; then be patient or impatient – it is all the same for you. You are only being recompensed [for] what you used to do." (QS. At-Tur, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறைக்க முடியாது.) நீங்கள் செய்தவைகளுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும். (ஸூரத்துத் தூர், வசனம் ௧௬)
Jan Trust Foundation
“நீங்கள் அதில் நுழையுங்கள்; பிறகு நீங்கள் (அதன் வேதனையைச்) சகித்துக் கொள்ளுங்கள்; அல்லது சகித்துக் கொள்ளாதிருங்கள்; (இரண்டும்) உங்களுக்குச் சமமே; நிச்சயமாக நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காகத்தான் நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்கள்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதில் எரிந்து பொசுங்குங்கள்! பொறுமையாக இருங்கள்! அல்லது பொறுக்காதீர்கள்! இரண்டும் உங்களுக்கு சமம்தான். நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்.