Skip to content

ஸூரா ஸூரத்துத் தூர் - Page: 5

At-Tur

(aṭ-Ṭūr)

௪௧

اَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُوْنَۗ ٤١

am ʿindahumu
أَمْ عِندَهُمُ
அவர்களிடம் இருக்கின்றதா
l-ghaybu
ٱلْغَيْبُ
மறைவானவற்றின் அறிவு
fahum
فَهُمْ
அதை அவர்கள்
yaktubūna
يَكْتُبُونَ
எழுதுகின்றார்களா?
அல்லது இவர்களிடம் மறைவான விஷய(த்தின் ஞான)ம் இருக்கின்றதா? இவர்கள் (அதனை அல்லாஹ்வைப் போல்) எழுதி வருகின்றனரா? ([௫௨] ஸூரத்துத் தூர்: ௪௧)
Tafseer
௪௨

اَمْ يُرِيْدُوْنَ كَيْدًاۗ فَالَّذِيْنَ كَفَرُوْا هُمُ الْمَكِيْدُوْنَۗ ٤٢

am
أَمْ
?
yurīdūna
يُرِيدُونَ
நாடுகின்றனர்
kaydan
كَيْدًاۖ
சூழ்ச்சியை
fa-alladhīna kafarū
فَٱلَّذِينَ كَفَرُوا۟
ஆனால், நிராகரித்தவர்கள்தான்
humu l-makīdūna
هُمُ ٱلْمَكِيدُونَ
சூழ்ச்சி செய்யப்பட்டவர்கள்
அல்லது யாதொரு சூழ்ச்சி செய்ய இவர்கள் கருது கின்றனரா? அவ்வாறாயின், இந்நிராகரிப்பவர்கள்தாம் சூழ்ச்சிக் குள்ளாவார்கள். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௪௨)
Tafseer
௪௩

اَمْ لَهُمْ اِلٰهٌ غَيْرُ اللّٰهِ ۗسُبْحٰنَ اللّٰهِ عَمَّا يُشْرِكُوْنَ ٤٣

am lahum
أَمْ لَهُمْ
அவர்களுக்கு உண்டா?
ilāhun
إِلَٰهٌ
(வேறு) கடவுள்
ghayru l-lahi
غَيْرُ ٱللَّهِۚ
அல்லாஹ்வை அன்றி
sub'ḥāna
سُبْحَٰنَ
மகா பரிசுத்தமானவன்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
ʿammā yush'rikūna
عَمَّا يُشْرِكُونَ
அவர்கள் இணைவைப்பதை விட்டும்
அல்லது அல்லாஹ்வையன்றி இவர்களுக்கு வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா? இவர்கள் இணை வைப்பவைகளை விட்டும் அல்லாஹ் மிக்க பரிசுத்தமானவன். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௪௩)
Tafseer
௪௪

وَاِنْ يَّرَوْا كِسْفًا مِّنَ السَّمَاۤءِ سَاقِطًا يَّقُوْلُوْا سَحَابٌ مَّرْكُوْمٌ ٤٤

wa-in yaraw
وَإِن يَرَوْا۟
அவர்கள் பார்த்தால்
kis'fan
كِسْفًا
துண்டுகளை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
sāqiṭan
سَاقِطًا
விழக்கூடிய(து)
yaqūlū
يَقُولُوا۟
அவர்கள் கூறுவார்கள்
saḥābun
سَحَابٌ
மேகங்கள்
markūmun
مَّرْكُومٌ
ஒன்று சேர்ந்த(வை)
வானம் இடிந்து அதிலிருந்த ஒரு துண்டு விழுவதை இவர்கள் கண்ணால் கண்டபோதிலும் (அது வானமல்ல;) மேகம் தான் என்றும், ஆனால் அது உறைந்து இறுகிவிட்டதென்றும் கூறுவார்கள். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௪௪)
Tafseer
௪௫

فَذَرْهُمْ حَتّٰى يُلٰقُوْا يَوْمَهُمُ الَّذِيْ فِيْهِ يُصْعَقُوْنَۙ ٤٥

fadharhum
فَذَرْهُمْ
ஆகவே, அவர்களை விட்டுவிடுவீராக!
ḥattā
حَتَّىٰ
வரை
yulāqū
يُلَٰقُوا۟
அவர்கள் சந்திக்கின்ற
yawmahumu
يَوْمَهُمُ
அவர்களுடைய நாள்
alladhī
ٱلَّذِى
எது
fīhi
فِيهِ
அதில்
yuṣ'ʿaqūna
يُصْعَقُونَ
அழிந்துவிடுகின்ற
(நபியே!) இவர்களுடைய அறிவு பறந்துவிடக் கூடிய நாளை இவர்கள் சந்திக்கும் வரையில் நீங்கள் இவர்களை விட்டுவிடுங்கள். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௪௫)
Tafseer
௪௬

يَوْمَ لَا يُغْنِيْ عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـًٔا وَّلَا هُمْ يُنْصَرُوْنَۗ ٤٦

yawma
يَوْمَ
அந்நாளில்
lā yugh'nī
لَا يُغْنِى
தடுக்காது
ʿanhum
عَنْهُمْ
அவர்களை விட்டும்
kayduhum
كَيْدُهُمْ
அவர்களின் சூழ்ச்சி
shayan
شَيْـًٔا
எதையும்
walā hum yunṣarūna
وَلَا هُمْ يُنصَرُونَ
அவர்கள் உதவியும் செய்யப்பட மாட்டார்கள்
அந்நாளில் இவர்களுடைய சூழ்ச்சிகள் ஒன்றுமே இவர்களுக்குப் பயனளிக்காது. எவர்களுடைய உதவியும் இவர் களுக்குக் கிடைக்காது. ([௫௨] ஸூரத்துத் தூர்: ௪௬)
Tafseer
௪௭

وَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا عَذَابًا دُوْنَ ذٰلِكَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ ٤٧

wa-inna lilladhīna ẓalamū
وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟
நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
வேதனை
dūna dhālika
دُونَ ذَٰلِكَ
அதற்கு முன்னரே
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
aktharahum
أَكْثَرَهُمْ
அவர்களில் அதிகமானவர்கள்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
நிச்சயமாக இவ்வக்கிரமக்காரர்களுக்கு (மறுமையில்) வேதனையன்றி (இம்மையிலும்) வேதனையிருக்கின்றது. எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) அறிந்துகொள்ள மாட்டார்கள். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௪௭)
Tafseer
௪௮

وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَاِنَّكَ بِاَعْيُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِيْنَ تَقُوْمُۙ ٤٨

wa-iṣ'bir
وَٱصْبِرْ
பொறுமையாக இருப்பீராக!
liḥuk'mi
لِحُكْمِ
தீர்ப்புக்காக
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
fa-innaka
فَإِنَّكَ
நிச்சயமாக நீர்
bi-aʿyuninā
بِأَعْيُنِنَاۖ
நமது கண்களுக்கு முன்னால்
wasabbiḥ
وَسَبِّحْ
நீர் துதிப்பீராக
biḥamdi
بِحَمْدِ
புகழ்ந்து
rabbika
رَبِّكَ
உமது இறைவனை
ḥīna
حِينَ
நேரத்தில்
taqūmu
تَقُومُ
எழும்
(நபியே!) உங்களது இறைவனின் தீர்ப்பைப் பொறுமையாக எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நீங்கள் நம் கண்களுக்கு முன்பாகவே இருக்கின்றீர்கள். (ஆகவே, அவர்கள் உங்களைத் தங்கள் இஷ்டப்படி துன்புறுத்த முடியாது.) ஆயினும், நீங்கள் (நித்திரையிலிருந்து) எழுந்த நேரத்தில் உங்களது இறைவனின் புகழைக் கூறித் துதி செய்வீராக! ([௫௨] ஸூரத்துத் தூர்: ௪௮)
Tafseer
௪௯

وَمِنَ الَّيْلِ فَسَبِّحْهُ وَاِدْبَارَ النُّجُوْمِ ࣖ ٤٩

wamina al-layli
وَمِنَ ٱلَّيْلِ
இன்னும் இரவில்
fasabbiḥ'hu
فَسَبِّحْهُ
அவனை துதிப்பீராக!
wa-id'bāra
وَإِدْبَٰرَ
இன்னும் மறைந்த பின்னர்
l-nujūmi
ٱلنُّجُومِ
நட்சத்திரங்கள்
இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் மறையும் (காலை) நேரத்திலும் அவனை துதி செய்து கொண்டிருப்பீராக! ([௫௨] ஸூரத்துத் தூர்: ௪௯)
Tafseer