Skip to content

ஸூரா ஸூரத்துத் தூர் - Page: 4

At-Tur

(aṭ-Ṭūr)

௩௧

قُلْ تَرَبَّصُوْا فَاِنِّيْ مَعَكُمْ مِّنَ الْمُتَرَبِّصِيْنَۗ ٣١

qul
قُلْ
கூறுவீராக!
tarabbaṣū
تَرَبَّصُوا۟
நீங்கள் எதிர்பாருங்கள்
fa-innī
فَإِنِّى
நிச்சயமாக நானும்
maʿakum
مَعَكُم
உங்களுடன்
mina l-mutarabiṣīna
مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ
எதிர்பார்ப்பவர்களில்
ஆகவே (அவர்களை நோக்கி, அதனை) "நீங்களும் எதிர் பார்த்திருங்கள். (என்ன நடக்கிறது என்பதை) நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்" என்று கூறுங்கள். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௩௧)
Tafseer
௩௨

اَمْ تَأْمُرُهُمْ اَحْلَامُهُمْ بِهٰذَآ اَمْ هُمْ قَوْمٌ طَاغُوْنَۚ ٣٢

am tamuruhum
أَمْ تَأْمُرُهُمْ
அவர்களை ஏவுகின்றதா?
aḥlāmuhum
أَحْلَٰمُهُم
அவர்களது அறிவுகள்
bihādhā
بِهَٰذَآۚ
இதற்கு
am hum
أَمْ هُمْ
அல்லது அவர்கள்
qawmun
قَوْمٌ
மக்களா?
ṭāghūna
طَاغُونَ
வரம்பு மீறுகின்ற(வர்கள்)
(நபியே! உங்களை குறிகாரர் என்றும், பைத்தியக்காரர் என்றும் கூறும்படி) அவர்களுடைய அறிவுதான் அவர்களைத் தூண்டுகின்றதா? அல்லது (இயற்கையாகவே) அவர்கள் விஷமிகள்தானா? ([௫௨] ஸூரத்துத் தூர்: ௩௨)
Tafseer
௩௩

اَمْ يَقُوْلُوْنَ تَقَوَّلَهٗۚ بَلْ لَّا يُؤْمِنُوْنَۚ ٣٣

am yaqūlūna
أَمْ يَقُولُونَ
அல்லது கூறுகிறார்களா?
taqawwalahu
تَقَوَّلَهُۥۚ
இதை புனைந்து கூறுகிறார்
bal lā yu'minūna
بَل لَّا يُؤْمِنُونَ
மாறாக/நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்
அல்லது (நமது நபியாகிய) இவர் பொய்யாகவே அதனைக் கற்பனை செய்து கொண்டாரென்று அவர்கள் கூறுகின்றனரா? அன்று! (மனமுரண்டாகவே) இதனை அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை. ([௫௨] ஸூரத்துத் தூர்: ௩௩)
Tafseer
௩௪

فَلْيَأْتُوْا بِحَدِيْثٍ مِّثْلِهٖٓ اِنْ كَانُوْا صٰدِقِيْنَۗ ٣٤

falyatū biḥadīthin mith'lihi
فَلْيَأْتُوا۟ بِحَدِيثٍ مِّثْلِهِۦٓ
இது போன்ற ஒரு பேச்சை அவர்கள் கொண்டு வரட்டும்!
in kānū ṣādiqīna
إِن كَانُوا۟ صَٰدِقِينَ
இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால்
(நபியே! இதனை நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டீரென்று கூறுவதில்) அவர்கள் உண்மை சொல்பவர் களாயிருந்தால் (அவர்களும் கற்பனை செய்துகொண்டு) இதைப் போன்ற யாதொரு வாக்கியத்தைக் கொண்டு வரவும். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௩௪)
Tafseer
௩௫

اَمْ خُلِقُوْا مِنْ غَيْرِ شَيْءٍ اَمْ هُمُ الْخَالِقُوْنَۗ ٣٥

am khuliqū
أَمْ خُلِقُوا۟
இவர்கள் படைக்கப்பட்டார்களா?
min ghayri shayin
مِنْ غَيْرِ شَىْءٍ
ஏதும் இன்றி
am
أَمْ
அல்லது
humu
هُمُ
இவர்கள்தான்
l-khāliqūna
ٱلْخَٰلِقُونَ
படைத்தவர்களா?
அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டனரா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டனரா? ([௫௨] ஸூரத்துத் தூர்: ௩௫)
Tafseer
௩௬

اَمْ خَلَقُوا السَّمٰوٰتِ وَالْاَرْضَۚ بَلْ لَّا يُوْقِنُوْنَۗ ٣٦

am khalaqū
أَمْ خَلَقُوا۟
இவர்கள்தான் படைத்தார்களா?
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
wal-arḍa
وَٱلْأَرْضَۚ
பூமியையும்
bal
بَل
மாறாக
lā yūqinūna
لَّا يُوقِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்தார்களா? அன்று. (இவைகளை எல்லாம் படைத்தவன் அல்லாஹ்தான். அவனை) இவர்கள் நம்புவதில்லை. ([௫௨] ஸூரத்துத் தூர்: ௩௬)
Tafseer
௩௭

اَمْ عِنْدَهُمْ خَزَاۤىِٕنُ رَبِّكَ اَمْ هُمُ الْمُصَۣيْطِرُوْنَۗ ٣٧

am ʿindahum
أَمْ عِندَهُمْ
இவர்களிடம் இருக்கின்றனவா?
khazāinu
خَزَآئِنُ
பொக்கிஷங்கள்
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
am humu l-muṣayṭirūna
أَمْ هُمُ ٱلْمُصَۣيْطِرُونَ
அல்லது அவர்கள் அடக்கிவிடக் கூடியவர்களா?
அல்லது இவர்களிடமே உங்களது இறைவனின் பொக்கிஷங்கள் அனைத்தும் இருக்கின்றனவா? அல்லது இவர்கள் அதனைப் பங்கிடக்கூடிய அதிகாரிகளா? ([௫௨] ஸூரத்துத் தூர்: ௩௭)
Tafseer
௩௮

اَمْ لَهُمْ سُلَّمٌ يَّسْتَمِعُوْنَ فِيْهِۚ فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍۗ ٣٨

am lahum
أَمْ لَهُمْ
?/அவர்களுக்கு
sullamun
سُلَّمٌ
ஓர் ஏணி
yastamiʿūna
يَسْتَمِعُونَ
செவியுறுகின்றனரா
fīhi
فِيهِۖ
அதில்
falyati
فَلْيَأْتِ
வரட்டும்
mus'tamiʿuhum
مُسْتَمِعُهُم
அவர்களில் செவியுற்றவர்
bisul'ṭānin mubīnin
بِسُلْطَٰنٍ مُّبِينٍ
தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு
அல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து (அங்குச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவைகளை) இவர்கள் கேட்டு வந்ததற்குத் தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டு வரவும். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௩௮)
Tafseer
௩௯

اَمْ لَهُ الْبَنٰتُ وَلَكُمُ الْبَنُوْنَۗ ٣٩

am lahu
أَمْ لَهُ
?/அவனுக்கு
l-banātu
ٱلْبَنَٰتُ
பெண் பிள்ளைகளும்
walakumu
وَلَكُمُ
உங்களுக்கு
l-banūna
ٱلْبَنُونَ
ஆண் பிள்ளைகளும்
அல்லது (நீங்கள் கூறுகின்றபடி) அல்லாஹ்வுக்குப் பெண் சந்ததிகள்; உங்களுக்கு மட்டும் ஆண் சந்ததிகளா? ([௫௨] ஸூரத்துத் தூர்: ௩௯)
Tafseer
௪௦

اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَۗ ٤٠

am tasaluhum
أَمْ تَسْـَٔلُهُمْ
அவர்களிடம் நீர் கேட்கின்றீரா?
ajran
أَجْرًا
கூலி எதையும்
fahum
فَهُم
அவர்கள்
min maghramin
مِّن مَّغْرَمٍ
கடன் தொகையினால்
muth'qalūna
مُّثْقَلُونَ
சுமைக்குள்ளாகி விட்டார்களா?
அல்லது நீங்கள் ஏதும் அவர்களிடம் கூலி கேட்டு அந்தப் பளுவை இவர்கள் சுமக்க முடியாமல் இருக்கின்றனரா? ([௫௨] ஸூரத்துத் தூர்: ௪௦)
Tafseer