Skip to content

ஸூரா ஸூரத்துத் தூர் - Page: 3

At-Tur

(aṭ-Ṭūr)

௨௧

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِاِيْمَانٍ اَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ اَلَتْنٰهُمْ مِّنْ عَمَلِهِمْ مِّنْ شَيْءٍۚ كُلُّ امْرِئٍ ۢبِمَا كَسَبَ رَهِيْنٌ ٢١

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்களோ
wa-ittabaʿathum
وَٱتَّبَعَتْهُمْ
இன்னும் அவர்களைப் பின்பற்றினார்களோ
dhurriyyatuhum
ذُرِّيَّتُهُم
அவர்களின் சந்ததிகளும்
biīmānin
بِإِيمَٰنٍ
இறை நம்பிக்கையில்
alḥaqnā bihim
أَلْحَقْنَا بِهِمْ
அவர்களுடன் சேர்த்து வைப்போம்
dhurriyyatahum
ذُرِّيَّتَهُمْ
அவர்களின் சந்ததிகளை
wamā alatnāhum
وَمَآ أَلَتْنَٰهُم
அவர்களுக்கு நாம் குறைக்க மாட்டோம்
min ʿamalihim
مِّنْ عَمَلِهِم
அவர்களின் அமல்களில்
min shayin
مِّن شَىْءٍۚ
எதையும்
kullu im'ri-in
كُلُّ ٱمْرِئٍۭ
ஒவ்வொரு/மனிதனும்
bimā kasaba
بِمَا كَسَبَ
தான் செய்த செயலுக்காக
rahīnun
رَهِينٌ
தடுத்து வைக்கப்பட்டிருப்பான்
எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள், தங்கள் பெற்றோர்களைப் பின்பற்றி நம்பிக்கை கொள்கின்றார்களோ (அந்தச் சந்ததிகளின் நன்மைகள் குறைவாக இருந்தும் அவர்களின் பெற்றோர்கள் திருப்தியடையும் பொருட்டு) அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் (சுவனபதியில்) சேர்த்துவிடுவோம். இதனால் அவர்களுடைய பெற்றோர்களின் நன்மைகளில் ஒன்றையுமே நாம் குறைத்துவிட மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயலுக்குப் பிணையாக இருக்கின்றான். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௨௧)
Tafseer
௨௨

وَاَمْدَدْنٰهُمْ بِفَاكِهَةٍ وَّلَحْمٍ مِّمَّا يَشْتَهُوْنَ ٢٢

wa-amdadnāhum
وَأَمْدَدْنَٰهُم
நாம் இவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்போம்
bifākihatin
بِفَٰكِهَةٍ
பழங்களை(யும்)
walaḥmin
وَلَحْمٍ
மாமிசங்களையும்
mimmā yashtahūna
مِّمَّا يَشْتَهُونَ
அவர்கள் விரும்புகின்றவற்றின்
அவர்கள் விரும்பிய (பற்பல வகை) கனி வர்க்கங்களையும், மாமிசங்களையும் அவர்களுக்கு (அனுதினமும்) நாம் (ஏராளமாகக்) கொடுத்து வருவோம். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௨௨)
Tafseer
௨௩

يَتَنَازَعُوْنَ فِيْهَا كَأْسًا لَّا لَغْوٌ فِيْهَا وَلَا تَأْثِيْمٌ ٢٣

yatanāzaʿūna fīhā
يَتَنَٰزَعُونَ فِيهَا
அதில் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள்
kasan
كَأْسًا
குடிபானம் நிறைந்த குவளைகளை
lā laghwun fīhā
لَّا لَغْوٌ فِيهَا
அதில் பொய் இருக்காது
walā tathīmun
وَلَا تَأْثِيمٌ
பிறரை பாவத்தில் தள்ளுகின்ற செயல்கள் இருக்காது
ஒருவருடைய கிண்ணத்தை மற்றொருவர் (களிப்பால்) பிடுங்கிக் கொள்வார். (அதனால்) மனத்தாங்கலோ அல்லது மரியாதைக்குறைவோ ஏற்படாது. ([௫௨] ஸூரத்துத் தூர்: ௨௩)
Tafseer
௨௪

وَيَطُوْفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَاَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُوْنٌۚ ٢٤

wayaṭūfu
وَيَطُوفُ
சுற்றி வருவார்கள்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்களை
ghil'mānun
غِلْمَانٌ
சிறுவர்கள்
lahum
لَّهُمْ
அவர்களுக்குரிய
ka-annahum
كَأَنَّهُمْ
அவர்களோ இருப்பார்கள்
lu'lu-on
لُؤْلُؤٌ
முத்துக்களைப் போன்று
maknūnun
مَّكْنُونٌ
பாதுகாக்கப்பட்ட
அவர்களுக்குப் பணி செய்ய எந்நேரமும் சிறுவர்கள் பலர் சுற்றிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பதிந்த முத்துக்களைப் போல் (பிரகாசமாகத் தோற்றமளிப்பார்கள்.) ([௫௨] ஸூரத்துத் தூர்: ௨௪)
Tafseer
௨௫

وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَاۤءَلُوْنَ ٢٥

wa-aqbala
وَأَقْبَلَ
முன்னோக்கி வருவார்கள்
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
ʿalā baʿḍin
عَلَىٰ بَعْضٍ
சிலரை
yatasāalūna
يَتَسَآءَلُونَ
தங்களுக்குள் கேட்டவர்களாக
அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கியிருந்து கொண்டு (உல்லாசமாக) உரையாட ஆரம்பித்து, ([௫௨] ஸூரத்துத் தூர்: ௨௫)
Tafseer
௨௬

قَالُوْٓا اِنَّا كُنَّا قَبْلُ فِيْٓ اَهْلِنَا مُشْفِقِيْنَ ٢٦

qālū
قَالُوٓا۟
அவர்கள் கூறுவார்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
இருந்தோம்
qablu
قَبْلُ
இதற்கு முன்னர்
fī ahlinā
فِىٓ أَهْلِنَا
எங்கள் குடும்பங்களில்
mush'fiqīna
مُشْفِقِينَ
பயந்தவர்களாகவே
"இதற்கு முன்னர், நாம் நம்முடைய குடும்பத்தைப் பற்றி (அவர்களுடைய கதி என்னவாகுமோ என்று) மெய்யாகவே பயந்து கொண்டே இருந்தோம். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௨௬)
Tafseer
௨௭

فَمَنَّ اللّٰهُ عَلَيْنَا وَوَقٰىنَا عَذَابَ السَّمُوْمِ ٢٧

famanna
فَمَنَّ
ஆக, உபகாரம் புரிந்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalaynā
عَلَيْنَا
எங்கள் மீது
wawaqānā
وَوَقَىٰنَا
இன்னும் எங்களை பாதுகாத்தான்
ʿadhāba
عَذَابَ
வேதனையை விட்டும்
l-samūmi
ٱلسَّمُومِ
நரகத்தின்
ஆயினும், அல்லாஹ் நம்மீது அருள் புரிந்து கொடிய வேதனையிலிருந்து நம்மை(யும் நம் குடும்பத்தினரையும்) காப்பாற்றினான். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௨௭)
Tafseer
௨௮

اِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُۗ اِنَّهٗ هُوَ الْبَرُّ الرَّحِيْمُ ٢٨

innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
இருந்தோம்
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
nadʿūhu
نَدْعُوهُۖ
அவனை அழைப்பவர்களாக
innahu huwa
إِنَّهُۥ هُوَ
நிச்சயமாக அவன்தான்
l-baru
ٱلْبَرُّ
மிகவும் அருளுடையவன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
மகா கருணையாளன்
இதற்கு முன்னர் (வேதனையிலிருந்து நம்மை காக்கும்படி) மெய்யாகவே நாம் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தோம். மெய்யாகவே அவன் நன்றி செய்பவனும் பேரன்புடையவனுமாக இருக்கின்றான்" என்றும் கூறுவார்கள். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௨௮)
Tafseer
௨௯

فَذَكِّرْ فَمَآ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍۗ ٢٩

fadhakkir
فَذَكِّرْ
ஆகவே, நல்லுபதேசம் செய்வீராக!
famā anta
فَمَآ أَنتَ
நீர் இல்லை
biniʿ'mati
بِنِعْمَتِ
அருட்கொடையால்
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
bikāhinin
بِكَاهِنٍ
குறிசொல்பவராக(வும்)
walā majnūnin
وَلَا مَجْنُونٍ
பைத்தியக்காரராகவும்
(நபியே!) நீங்கள் (நிராகரிப்பவர்களுக்கு வேதனையை) ஞாபகமூட்டிக்கொண்டே இருங்கள். உங்களது இறைவனின் அருளால் நீங்கள் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல. ([௫௨] ஸூரத்துத் தூர்: ௨௯)
Tafseer
௩௦

اَمْ يَقُوْلُوْنَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهٖ رَيْبَ الْمَنُوْنِ ٣٠

am yaqūlūna
أَمْ يَقُولُونَ
அல்லது கூறுகிறார்களா?
shāʿirun
شَاعِرٌ
ஒரு கவிஞர்
natarabbaṣu
نَّتَرَبَّصُ
நாங்கள் எதிர்பார்க்கின்றோம்
bihi
بِهِۦ
அவருக்கு
rayba
رَيْبَ
அசம்பாவிதங்களை
l-manūni
ٱلْمَنُونِ
காலத்தின்
(உங்களைப் பற்றி) அவர்கள் (நீங்கள்) ஒரு கவிஞர்தான் என்று கூறுகின்றனரா? (இக்கூற்றுக்குத் தண்டனையாக அவர்கள் மீது சம்பவிக்கக் கூடிய) காலச்சக்கரத்தை எதிர்பார்த்திருப்போம். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௩௦)
Tafseer