Skip to content

ஸூரா ஸூரத்துத் தூர் - Page: 2

At-Tur

(aṭ-Ṭūr)

௧௧

فَوَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ ١١

fawaylun
فَوَيْلٌ
ஆகவே நாசம்தான்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு
(நபியே! உங்களைப்) பொய்யாக்கும் இவர்களுக்கு அந்நாளில் கேடுதான். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௧௧)
Tafseer
௧௨

الَّذِيْنَ هُمْ فِيْ خَوْضٍ يَّلْعَبُوْنَۘ ١٢

alladhīna hum
ٱلَّذِينَ هُمْ
எவர்கள்/அவர்கள்
fī khawḍin
فِى خَوْضٍ
குழப்பத்தில் இருந்துகொண்டு
yalʿabūna
يَلْعَبُونَ
விளையாடுகிறார்கள்
அவர்கள் (வீண் விதண்டாவாதத்தில்) மூழ்கி விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௧௨)
Tafseer
௧௩

يَوْمَ يُدَعُّوْنَ اِلٰى نَارِ جَهَنَّمَ دَعًّاۗ ١٣

yawma
يَوْمَ
நாளில்
yudaʿʿūna
يُدَعُّونَ
அவர்கள் தள்ளப்படுகின்ற(னர்)
ilā nāri jahannama
إِلَىٰ نَارِ جَهَنَّمَ
நரக நெருப்பின் பக்கம்
daʿʿan
دَعًّا
தள்ளப்படுதல்
அவர்கள் நரகத்தின் பக்கம் (அடித்து) வெருட்டி ஓட்டப்படும் நாளில், ([௫௨] ஸூரத்துத் தூர்: ௧௩)
Tafseer
௧௪

هٰذِهِ النَّارُ الَّتِيْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ١٤

hādhihi l-nāru
هَٰذِهِ ٱلنَّارُ
இது/நெருப்பு
allatī kuntum
ٱلَّتِى كُنتُم
எது/நீங்கள் இருந்தீர்கள்
bihā tukadhibūna
بِهَا تُكَذِّبُونَ
அதை/பொய்ப்பிப்பவர்களாக
(அவர்களை நோக்கி) "நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக நெருப்பு இதுதான்" என்று கூறப்படும். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௧௪)
Tafseer
௧௫

اَفَسِحْرٌ هٰذَآ اَمْ اَنْتُمْ لَا تُبْصِرُوْنَ ١٥

afasiḥ'run
أَفَسِحْرٌ
என்ன சூனியமா?
hādhā
هَٰذَآ
இது
am antum
أَمْ أَنتُمْ
?/நீங்கள்
lā tub'ṣirūna
لَا تُبْصِرُونَ
பார்க்கவில்லையா
இது வெறும் சூனியம்தானா? இதனை நீங்கள் (உங்கள் கண்ணால்) பார்க்கவில்லையா? ([௫௨] ஸூரத்துத் தூர்: ௧௫)
Tafseer
௧௬

اِصْلَوْهَا فَاصْبِرُوْٓا اَوْ لَا تَصْبِرُوْاۚ سَوَاۤءٌ عَلَيْكُمْۗ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ١٦

iṣ'lawhā
ٱصْلَوْهَا
இதில் எரிந்து பொசுங்குங்கள்!
fa-iṣ'birū
فَٱصْبِرُوٓا۟
பொறுமையாக இருங்கள்!
aw
أَوْ
அல்லது
lā taṣbirū
لَا تَصْبِرُوا۟
பொறுக்காதீர்கள்!
sawāon
سَوَآءٌ
இரண்டும் சமம்தான்
ʿalaykum
عَلَيْكُمْۖ
உங்களுக்கு
innamā tuj'zawna
إِنَّمَا تُجْزَوْنَ
நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம்
mā kuntum taʿmalūna
مَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்
அதில் நுழைந்து விடுங்கள். (அதன் வேதனையைப் பொறுத்துச்) சகித்துக் கொண்டிருங்கள்; அல்லது சகிக்காதிருங்கள். (இரண்டும்) உங்களுக்குச் சமமே! (வேதனையில் ஓர் அணுவளவும் குறைக்க முடியாது.) நீங்கள் செய்தவைகளுக்குரிய கூலிதான் உங்களுக்குக் கொடுக்கப்படும். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௧௬)
Tafseer
௧௭

اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ جَنّٰتٍ وَّنَعِيْمٍۙ ١٧

inna
إِنَّ
நிச்சயமாக
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுடையவர்கள்
fī jannātin
فِى جَنَّٰتٍ
சொர்க்கங்களிலும்
wanaʿīmin
وَنَعِيمٍ
இன்பங்களிலும்
அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தவர்கள் நிச்சயமாக மிக சுகம் தரும் சுவனபதிகளில் இ(ன்பம் அனுபவித்துக் கொண்டி) ருப்பார்கள். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௧௭)
Tafseer
௧௮

فَاكِهِيْنَ بِمَآ اٰتٰىهُمْ رَبُّهُمْۚ وَوَقٰىهُمْ رَبُّهُمْ عَذَابَ الْجَحِيْمِ ١٨

fākihīna
فَٰكِهِينَ
அவர்களிடம் பழங்கள்
bimā ātāhum
بِمَآ ءَاتَىٰهُمْ
அவர்களுக்கு வழங்கியதால்
rabbuhum
رَبُّهُمْ
அவர்களின் இறைவன்
wawaqāhum
وَوَقَىٰهُمْ
இன்னும் அவர்களை பாதுகாப்பான்
rabbuhum
رَبُّهُمْ
அவர்களின் இறைவன்
ʿadhāba l-jaḥīmi
عَذَابَ ٱلْجَحِيمِ
நரக வேதனையை விட்டும்
தங்கள் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவைகளைப் பற்றியும், நரக வேதனையிலிருந்து தங்களைத் தங்கள் இறைவன் பாதுகாத்துக் கொண்டதைப் பற்றியும் மகிழ்ச்சியடைந்தவர்களாக இருப்பார்கள். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௧௮)
Tafseer
௧௯

كُلُوْا وَاشْرَبُوْا هَنِيْۤئًا ۢبِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَۙ ١٩

kulū
كُلُوا۟
உண்ணுங்கள்
wa-ish'rabū
وَٱشْرَبُوا۟
இன்னும் பருகுங்கள்
hanīan bimā
هَنِيٓـًٔۢا بِمَا
மகிழ்ச்சியாக
kuntum taʿmalūna
كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்துகொண்டிருந்த காரணத்தால்
(அவர்களை நோக்கி) "நீங்கள் செய்த நன்மைகளின் காரணமாக (இதில் உள்ளவைகளை) மிக்க தாராளமாகப் புசித்துக் கொண்டும், பருகிக் கொண்டும் இருங்கள்" (என்றும் கூறப்படும்). ([௫௨] ஸூரத்துத் தூர்: ௧௯)
Tafseer
௨௦

مُتَّكِـِٕيْنَ عَلٰى سُرُرٍ مَّصْفُوْفَةٍۚ وَزَوَّجْنٰهُمْ بِحُوْرٍ عِيْنٍ ٢٠

muttakiīna
مُتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக இருப்பார்கள்
ʿalā sururin
عَلَىٰ سُرُرٍ
கட்டில்களில்
maṣfūfatin
مَّصْفُوفَةٍۖ
வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகளில்
wazawwajnāhum
وَزَوَّجْنَٰهُم
அவர்களுக்கு நாம் மணமுடித்துவைப்போம்
biḥūrin ʿīnin
بِحُورٍ عِينٍ
கண்ணழகிகளான கருவிழிகளுடைய பெண்களை
அணி அணியாகப் போடப்பட்ட கட்டில்களி(ல் உள்ள பஞ்சணைகளி)ன் மீது சாய்ந்தவண்ணமாக இருப்பார்கள். நாம் அவர்களுக்கு ("ஹூருல்ஈன்" என்னும்) கண்ணழகிகளாகிய கன்னிப் பெண்களை திருமணம் செய்து வைப்போம். ([௫௨] ஸூரத்துத் தூர்: ௨௦)
Tafseer