Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தாரியாத் வசனம் ௫௩

Qur'an Surah Adh-Dhariyat Verse 53

ஸூரத்துத் தாரியாத் [௫௧]: ௫௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَتَوَاصَوْا بِهٖۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَۚ (الذاريات : ٥١)

atawāṣaw
أَتَوَاصَوْا۟
Have they transmitted it to them?
இவர்கள் தங்களுக்குள் உபதேசித்துக் கொண்டார்களா?
bihi
بِهِۦۚ
Have they transmitted it to them?
இதை
bal
بَلْ
Nay
மாறாக
hum
هُمْ
they
இவர்கள்
qawmun
قَوْمٌ
(are) a people
மக்கள்
ṭāghūna
طَاغُونَ
transgressing
வரம்பு மீறிய(வர்கள்)

Transliteration:

Atawaasaw bih; bal hum qawmun taaghoon (QS. aḏ-Ḏāriyāt:53)

English Sahih International:

Did they suggest it to them? Rather, they [themselves] are a transgressing people. (QS. Adh-Dhariyat, Ayah ௫௩)

Abdul Hameed Baqavi:

(இவ்வாறு கூறும்படியே) அவர்கள் தங்களுக்குள் (பரம் பரையாக) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தனர் போலும்! அன்று. அவர்கள் (இயற்கையிலேயே இவ்வாறு கூறக்கூடிய) அநியாயக்கார மக்களாக இருந்தனர். (ஸூரத்துத் தாரியாத், வசனம் ௫௩)

Jan Trust Foundation

இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இவர்கள் தங்களுக்குள் இதை (இந்த தூதரை பொய்ப்பிக்க வேண்டும் என்று) உபதேசித்துக் கொண்டார்களா? (-முன் சென்ற நிராகரிப்பாளர்கள் இக்கால நிராகரிப்பாளர்களுக்கு ஏதும் உபதேசத்தை சொல்லிச் சென்றுள்ளார்களா, நாங்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நபியை பொய்ப்பிக்க வேண்டும் என்று) மாறாக, இவர்கள் வரம்பு மீறிய மக்கள் ஆவார்கள்.